மேசியா Shreveport, Louisiana, USA 61-0117 1நீங்கள் உட்காரலாம். மறுபடியுமாக வீட்டிற்கு வருவது போலக் காணப்படுகிறது. நாங்கள்... நான் வந்து சென்ற பிறகு இங்கே உள்ள உள்ளூர் சபையில் கர்த்தர் செய்து கொண்டிருக்கின்ற அற்புதமான காரியங்களைக் குறித்து உங்கள் மேய்ப்பன் கூறினதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன்... பரிசுத்த ஆவியின் ஊற்றப்படுதலின் எழுப்புதலை ஏறக்குறைய தொடர்ந்து நீங்கள் கொண்டிருக்கின்றீர்கள் என்று கூறினார். ஓ, தேவன் குறித்திருக்கின்ற நேரத்தில் சரியாக நாம் அதில் இருப்பது மிகவும் அற்புதமானதல்லவா, சரியான நேரத்தில்? அது நமக்கு ஒன்றைச் செய்கின்றது. சரி, கூடாரத்தில் நாம் ஒன்றைக் கொண்டிருந்தோம். நான் தொடர்ந்து பேசும்படிக்காக பேசவேண்டிய பொருள்கள் நிறைய நான் வைத்திருந்தேன். ஏழு கடைசி சபைகள் குறித்து நான் உங்களிடமாக கூறிக் கொண்டிருந்தேன். ஓ, என்னே. கடந்த ஞாயிறன்று வெளிப்படுத்தல் 4ஆம் அதிகாரத்துடன் நான் முடித்த போது... என் கூட்டத்தில் சுமார் - சுமார் நானூறு அல்லது ஏறக்குறைய முன்னூற்றைம்பது பேர் இருந்தனர். அப்பொழுது நான்..... 2நான் பேசிக் கொண்டிருந்தேன், அப்பொழுது நான் ஜெப வரிசையை அழைத்திருந்தேன், ஷேக்கினா மகிமையிலிருந்து பிரதிபலிப்பானது நட்சத்திரம், நட்சத்திரங்களுக்கும் வெண்கல தொட்டிக்கும், சென்றதைக் குறித்து நான் பேசிக்கொண்டிருந்தேன். அந்த கண்ணாடிக் கடலில் தான் பலிகள் கழுவப்பட்டது, அப்பலிகள் பாவிகளுக்கு பிரதிநிதித்துவமாக இருந்தது, வேறு தீட்டுகழிக்கும் ஜலம்..... நான் அதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் அப்பொழுது நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க திரும்பினேன். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் அவர்களுக்கு முன்பாக நேராக கீழே இறங்கி வந்தார், வந்து நேராகச் சென்று அங்கே அந்த மூலையில் நின்றார். அப்பொழுது முன்னூறு அல்லது அதற்கு அதிகமான பேர் நின்று அதை பதினைந்து நிமிடங்களுக்கு பார்த்துக் கொண்டேயிருந்தார்கள், கூக்குரலிட்டார்கள், அழுதார்கள், தேவனைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாருமே பார்த்தார்கள். நம்முடைய சபையில் முதல் முறையாக விதமாக அது வந்தது: அது அப்படியே உள்ளே வந்தது, வந்து நேராக அங்கே சென்று அங்கே நின்றது. அப்பொழுது நான் “உங்களால் காணமுடிகிறதா?” என்று கேட்டேன் எல்லாரும் கூக்குரலிடவும் கீழே விழவும் ஆரம்பித்தனர். அப்பொழுது அங்கே அது இருந்தது - ஊதா நிறம் கொண்ட அந்த பெரிய அக்கினி ஸ்தம்பம் வந்தது, சரியாக வட்ட வடிவிலே, அங்கே நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அது சபைக்காலங்களின் வரைபடத்தில் நான் உங்களுக்கு எப்படி போதித்திருந்தேனோ சரியாக அதே விதமாக அந்த அக்கினி ஸ்தம்பமானது அந்த வரைபடத்தில் உள்ள ஒவ்வொரு சபை காலத்தைக் குறித்த வரைபட விவரத்தை அப்படியே வரைந்து காண்பித்தது. இங்கே நான் வைத்திருக்கின்ற அவருடைய வேதாகமம் எனக்கு முன்பாக இருக்கின்றது. அது உண்மை என்பதை தேவன் அறிவார். அது தாமே... அவர்... நாம் கடைசி காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நிச்சயம். 3ஓ, சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று தீர்க்கதரிசி வாக்குரைத்திருப்பதைக் குறித்து நான் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். உலகத்தில் மிகவும் காரிருளாக, இருண்டதாக இருக்கின்ற இந்த மணி நேரத்தில் நாமோ அந்த ஒளியில் ஜீவித்துக் கொண்டும் நடந்து கொண்டும் இருக்கின்றோம் என்பதை அறிவதானது, அவர் செய்வார் என்று அவர் தாமே வாக்குத்தத்தம் செய்திருக்கின்ற அந்த ஒளியில் அவர் செய்வார் என்று வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார், இதோ நாம் அந்த சிலாக்கியம் பெற்ற மக்களாக இன்றிரவு இங்கே இருக்கினம் கடைசி காலத்தில் அந்த காரியங்களைக் கண்டு களிகூ மகிழ்கிறோம். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள், சபையானது “ இருக்கும் என்றால்... ஒரு பெரிய, பெரிய, ஏதோ ஒரு மிகப்பெரிய ஒன்றாக இருக்காது. அது எப்பொழுதுமே, ஒவ்வொரு சபைக் காலத்திலும், ஒரு சிறு குழுவாக, சிறு எண்ணிக்கையில்தான் இருந்தது, இருண்ட காலத்தில் அது ஏறக்குறைய இல்லாமல் போகின்ற அளவிற்கு எண்ணிக்கையில் குறைவாக இருந்தது. பிறகு இங்கே இந்த லவோதிக்கியா சபைக் காலத்தில் மறுபடியாக அதே விதமாக ஏறக்குறைய இல்லாமல் போகின்ற நிலையில் எண்ணிக்கையில் குறைந்து இருக்கின்றது. சகோதரன் ஜாக் ஏழு சபைக் காலங்களைக் குறித்து அவருடைய சபையில் பிரசங்கிக்க எனக்கு அழைப்பு விடுத்தார். அதைச் செய்ய எனக்கு தருணம் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஓ, அதை ஜெபர்சன்வில்லில் பிரசங்கித்த போது நிச்சயமாக நாங்கள் களிகூர்ந்து மகிழ்ந்தோம். பரிசுத்த ஆவியானவர் அவ்வளவு அதிகமாக எங்களை ஆசீர்வதித்தார். 4மேலும், இப்பொழுது நாங்கள் இங்கிருந்து பியூமாண்ட் செல்கிறோம், நேராக வெஸ்ட் கோஸ்டிற்கு செல்கிறோம், அங்கிருந்து திரும்பி வந்து ஒஹையோவிற்கு செல்கிறோம். பிறகு அங்கிருந்து வர்ஜினியா மற்றும் வடக்கு கரோலினா இடங்களுக்கு செல்கிறோம், அங்கிருந்து திரும்பி வந்து சிக்காகோவிலுள்ள ப்ளூமிங்டன், ஸ்பிரிங் பீல்டிற்கு செல்கிறோம், பிறகு அவ்விடத்தை விட்டு புறப்பட்டு, நேராக வடக்கு பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள செய்ண்ட் ஜான் மற்றும் கிராண்ட் பிரைரீ, டாய்சன் கிரீக் இடங்களுக்கு சென்று அங்கே முழுவதும் செல்கிறோம். எல்லாவற்றையும் முடித்து கொண்டு ஜுன் மாதம் திரும்புவோம் என்று நம்புகிறோம், கர்த்தருக்கு சித்தமானால்... பிறகு ஆறு மாதங்களுக்கு பிறகு வீடு திரும்பி வெளிநாடுகளுக்கு செல்ல தருணம் சரியாக இருக்கும், ஒருக்கால், கர்த்தருக்கு சித்தமானால் அந்த நேரத்தில் செல்லலாம். 5இப்பொழுது, இன்றிரவு இங்கே இருப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி, அங்கே வெளியே அநேகம் மக்கள் இருப்பதை காண்கையில், அந்த பிரகாசிக்கின்ற முகங்கள், திறந்த இருதயங்கள், மற்றும்... இது மிகவும் அருமையான தருணமாகும், அப்படித்தானே? கர்த்தர் தாமே இன்றிரவு தம்முடைய வல்லமையாலும், மகிமையினாலும் தம்மை நமக்கு தெரியப்படுத்தி, நமக்கு தம்மை காண்பிப்பார் என்று நாம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்; நானும் கூட அப்படியாக இருக்கின்றேன். மேலும் அவர் தம்மை காண்பிக்கின்றாரோ அல்லது இல்லையோ, ஆனாலும் கூட தொடர்ந்து அதே விதமாகத்தான் நாம் அவரை விசுவாசிப்போம். 6ஜெர்மனியிலிருந்து வந்த ஒரு சிறு பெண்ணை சந்தித்து வந்துள்ளேன். சில வாரங்களுக்கு முன்னர் அவள் தன் குழந்தையை இழந்தாள். கலிபோர்னியாவில் ஒரு சமயத்தில் காலை சுமார் மூன்று அல்லது நான்கு மணியிலிருந்து மரித்திருந்த ஒரு குழந்தை கொண்டு ணவரப்பட்டபோது அவள் அங்கே அருகில் நின்று கொண்டிருந்தாள், ஆம் அக்குழந்தை மேடைக்கு கொண்டு வரப்பட்டபோது மதியத்திற்கு பிறகு சுமார் நேரம் ஆறு மணி அளவில் இருந்தது, அந்த தாய் இந்த இறந்து விறைத்துப்போன நிலையில் இருந்த அந்த சிறு உடலை தன் கரத்தில் பிடித்தவாறே காரின் பின் பகுதியில் உட்கார்ந்திருந்தாள். சான் பெர்னார்டினோ என்ற இடத்தில் நான் இருந்த போது அங்கே அவர்கள் வந்தனர், அக்குழந்தையை அவர்கள் எடுத்து நான் நின்றிருந்த இடத்திற்கு வந்தனர். அப்போது நான், “ஓ, குழந்தை இறந்து எவ்வளவு நேரமாகிறது?” என்று கேட்டேன். அதற்கு அவள், “இக்காலை பொழுதிலிருந்து, அதிகாலையில் மரித்தது” என்றாள். அப்பொழுது நான் மரித்து குளிர்ந்து போயிருந்த அந்த உடலை தூக்கி எடுத்தேன். அது ஏற்கெனவே விறைத்த நிலையில் இருந்தது. சுற்றிலும் மக்கள் இருந்தனர். நான் அந்த உடலை என் கரத்தில் எடுத்து நம்முடைய விலையேறப்பெற்ற கர்த்தரிடத்தில் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன. அப்பொழுது குழந்தையின் உடல் அனலாவதை உணர்ந்தேன். அதை அப்படியே பிடித்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து அது தன் காலை உதைத்து அழ ஆரம்பித்தது. அதை நான் அதின் தாயிடம் ஒப்படைத்தேன். பிறகு அப்பொழுது..... 7இதோ பாருங்கள், அக்காரியங்களை நாங்கள் வெளியே தெரிவித்து பறைசாற்றுவதில்லை. புரிகின்றதா? காரியம் என்னவென்றால், இன்றைக்கு நம்முடைய.... மிக அதிகமான அளவில் விளம்பரப் படுத்துதல், பகட்டான காரியமானது காணப்படுகின்றது. நாம் ஏதோ பெரிதான ஒன்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல. எப்படி யாயினும் உலகமானது அதை ஏற்றுக்கொள்ளாது. அவர் சபைக்கு மாத்திரமே வருகின்றார். அது சபைக்கு மாத்திரம் தான் - தேவனுடைய மக்களுக்கு மாத்திரம்தான். அந்த பெரிய பகட்டான காரியங்கள் தேவனுடைய ராஜ்யத்தில் கிரியை செய்யாது. யார் விசுவாசிகள் என்றும் யார் இல்லை என்றும் மக்கள் காண்கையில் ஆச்சரியம் கொள்வார்கள். யோவான் வந்த போது இருந்த விதமாகவே இருக்கட்டும். இயேசுவின் முதலாம் வருகையிலே தேவாலயத்தில் அன்னாள் இருந்தாள், யோவான் ஸ்நானகன் மற்றும் உண்மையாகவே விசுவாசிகளாக இருந்தவர்கள் சில பேர் மாத்திரமே சரியாக அதைப் பெற்றுக் கொண்டார்கள். இப்பொழுது நாம் அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். 8இந்த சிறு தாய் அங்கே நின்றுகொண்டிருந்தாள், அவள்... அந்த பெண்ணின் குழந்தை ஜெர்மனியில் மரித்திருந்தது. அவளுடைய கணவன் இராணுவத்தில் மத குருவாக இருந்தார். அவர்கள் தொலைதூர தொலைபேசி அழைப்பில் பகல் இரவு முழுவதுமாக சுமார் ஐந்து தடவை எனக்கு தொலைபேசியில் பேசி நான் அங்கே வரவேண்டும் என்று என்னை அழைத்தனர், தேவன் அந்த குழந்தையை உயிரோடே எழுப்புவார் என்று நாங்கள் நன்றாக அறிந்திருக்கிறோம் என்று கூறினர். அதற்கு நான் “சரி நான் ஜெபிக்கப் போகிறேன்” என்று கூறினேன். நான் அந்த பிற்பகல் நேரமும் பொழுதும் மற்றும் இரவும் தொடர்ந்து ஜெபித்துக் கொண்டேயிருந்தேன். மருத்துவர்கள் அதை விசுவாசிப்பார்களா அல்லது இல்லையா என்று நான் உங்களுக்கு காண்பிக்கப் போகிறேன். அவள் மருத்துவரிடம் வாசிக்கும்படியாக என் புத்தகத்தை ஏற்கெனவே கொடுத்திருந்தாள், அது... “தீர்க்கதரிசி ஆப்பிரிக்காவில் பயணிக்கின்றார்” என்னும் புத்தகம் என்று நான் நினைக்கிறேன். அப்பொழுது.. அவள் “தேவன் குழந்தையை உயிரோடே எழுப்புவார்” என்றாள். அந்த சிறிய தாய் “தேவன் குழந்தையை உயிரோடே எழுப்புவார்” என்று கூறினாள். அவர்கள் கண்டறிவதற்கு முன்னதாகவே குழந்தை சுமார் நான்கு அல்லது ஐந்து மணி நேரங்களுக்கு முன்னர் மரித்து விட்டிருந்தது. ஆகவே, அதன் தந்தை பணி செய்திருந்த முகாமிற்கு அவர்கள் தகவல் அனுப்பி வரவழைத்தனர். அந்த குழந்தை இரவில் மரித்திருந்தது. அந்த மருத்துவர் “சரி, நான் என்ன செய்ய போகிறேன் என்று உங்களுக்கு கூறுகிறேன். நான் அக்குழந்தைக்கு பிராண வாயு, மூச்சு காற்று செலுத்தப்படுகின்ற குழாயை நான் திறந்து அதை செலுத்துவேன்” என்றார். அப்படியாக இரண்டு நாளைக்கு அந்த குழாயின் மூலமாக சுவாசக் காற்றை அக்குழந்தையின் உடம்பிற்கு செலுத்தினார். எல்லாரும் காத்துக் கொண்டிருந்தனர். நான் இங்கே ஜெபித்துக் கொண்டிருந்தேன். என்னை ஜெட் விமானத்தில் ஜெர்மனிக்கு கொண்டு போக எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தியிருந்தனர். ஒரு இராணுவ ஜெட் விமானத்தில் ஜெர்மனிக்கு சென்று அதே நாளில் திரும்பி வரும்படியாக ஏற்பாடு செய்திருந்தனர். 9ஒரு நாள் அதிகாலை வெளிச்சம் வந்த போது நான் எழுந்தேன். என் மனைவி அறையை விட்டு வெளியே சென்றாள். அப்பொழுது... அவள் அறையை விட்டு வெளியே சென்றிருந்தாள். அப்பொழுது நான் விழித்திருந்தேன். சிறிது அப்படியே படுத்திருந்தேன். அப்பொழுது என் அறைக்குள் நேரடியாக ஏதோ ஒன்று வரும் சத்தத்தை நான் கேட்டேன். அப்பொழுது நான் நோக்கிப் பார்த்தேன். அங்கே அறைக்குள்ளாக ஏதோ ஒன்று வந்து கொண்டிருந்தது. நான் படுக்கையை விட்டு குதித்தெழுந்தேன், “கர்த்தாவே, உம்முடைய ஊழியக்காரனுக்கு நீர் சொல்ல விரும்புவது என்ன?” என்று கூறினேன். “அதை நீ கடிந்து கொள்ளாதே. அது கர்த்தருடைய கரம்” என்று கூறினது. புரிகின்றதா? உடனே நான் அவளை தொலைபேசியில் அழைத்தேன். அவளிடமாக “தேவன் உங்கள் குழந்தையை அழைத்துக் கொண ஆகவே என்னால் வரமுடியாது” என்றேன். அவள் எங்களை சந்திக்க புறப்பட்டு வந்திருந்தாள். அந்த இரவ நேற்று நான் புறப்பட்டபோது என் வீட்டில் அவள் இருந்தாள். அது அவள் “அது என்னவாயிருந்தது, சகோதரன் பிரன்ஹாம்? அது விசுவாசம் பலவீனமாக இருந்ததினாலா?” என்று கேட்டாள் அதற்கு நான் “நீ மகத்தான விசுவாசத்தை கொண்டிருக்கிறாய். நீ உன் குழந்தைக்காக ஜெபித்தாய். நீயும் உன் கணவனும் ”தேவனே அந்த குழந்தையை எழுப்பும்“ என்று உறுதியாக அதன் பேரில் உறுதியாகப் பற்றிக் கொண்டிருந்தீர்கள். ஆனால் அவர் அதை செய்ய மறுத்தார். ஏனென்றால் எது சிறந்தது என்று அவருக்கு தெரியும். மேலும் இன்னுமாக நீ அவரை நேசிக்கின்றாய். அது தான் உண்மையான விசுவாசமாகும். மலைகள் விலகுகையில் மற்றும் காரியங்கள் நடக்கையில் எவராலும் விசுவாசம் கொள்ள முடியும். ஆனால், அது நடக்காமல் சற்று அப்படியே காரியமானது மாறாமல் இருக்கையில், அப்பொழுது தான் உங்களுக்கு விசுவாசம் இருக்கின்றதா இல்லையா என்று நிரூபணமாகும்” என்று கூறினேன். தேவனிடத்திற்கு வருகின்ற ஒவ்வொரு புத்திரனும் சிட்சிக்கப்பட்டு தேவனால் சோதிக்கப்பட வேண்டும். ஆகவே நினைவில் கொள்ளுங்கள். நம்முடைய சோதனைகள் பொறுமையை உண்டாக்கும். பொறுமை நம்பிக்கையையும் இன்னும் காரியங்களையும் உண்டாக்கும். ஆகவே, நாம் அப்படியே தேவனை பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். அவர் நம்மை ஆசீர்வதித்தாலும் அல்லது ஆசீர்வதிக்காவிட்டாலும் சரி, நாம் அங்கே சரியாக எப்படியாயினும் அவரை விசுவாசிக்கும்படிக்குத் தான் நாம் இருக்கின்றோம், ஏனென்றால் அவர் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். அவர் காரியத்தைச் செய்வதை பார்ப்பது.... 10இப்பொழுது, வார்த்தையை வாசித்து அதன் பொருளை நாம் அணுகும் முன்பு... ஏனென்றால் விசுவாசம் கேள்வியினால் வரும், தேவனுடைய வார்த்தையைக் கேட்பதினால் வரும். இப்பொழுது நான் நீண்ட நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் சகோதரன் ஜாக் என்னை அழைத்த போது, இந்த வழியாக வரும்படிக்கு அழைத்தபோது (அதைச் செய்வதற்கு நான் மகிழ்ச்சி கொண்டேன்) ஜெபிக்கப்படுவதற்காக வியாதியஸ்தர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் என்று கூறினார். ஆகவே, சரி, அதைச் செய்யலாம் என்று நாங்கள் எண்ணினோம், வியாதியஸ் தருக்காக ஜெபிப்பதற்கு முன்னர் உங்களிடமாக சிறிது பேசலாம் என்று எண்ணினோம். இன்றிரவு பில்லியை அங்கே ஜனத்திரளுக்குள்ளாக அனுப்பினேன். அவன் ஜெப அட்டைகளை விநியோகித்து விட்டதாக கூறினான், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கையில், ஜெப அட்டையை கொண்டு அவர்களை அழைக்கும் படிக்கு ஏதுவாக இருக்கும். வியாதியஸ் தருக்காக ஜெபிப்பதை நடத்த வேண்டாம் என்றல்ல. சரி, நாம் அவருடைய வார்த்தையை அணுகும் முன்னர், சிறிது நேரம் ஜெபத்தில் அவரை நாம் அணுகுவோமாக. இன்றிரவு ஜெபம் ஏறெடுக்கப்படுகையில் நினைவு கூறப்பட விரும்புகிறவர்கள் இருக்கின்றீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பாராக. உங்கள் தேவைகளை அவர் அறிவார். இப்பொழுது, உங்கள் தலைகள் தாழ்த்தப்பட்டிருக்கையில், “சகோதரன் பிரன்ஹாம், என்னை நினைவு கூருங்கள்” என்று கூற விரும்பும் ஒரு பாவியான மனிதனோ அல்லது ஸ்திரீயோ அல்லது பையனோ அல்லது வாலிபப் பெண்ணோ இங்கே இருக்கின்றீர்களா? உங்கள் கரங்களை சற்று உயர்த்துவீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கட்டடம் முழுவதுமாக அநேகர் உள்ளனர், சுமார் பத்து அல்லது பதினைந்து கரங்கள் மேலே உயர்த்தப்பட்டுள்ளன, பாவிகள். தங்கள் ஆத்துமாக்களில் பரிசுத்த ஆவியினாலே தேவனுடைய ஒளியைக் கொண்டிராத சிலர், உங்கள் கரத்தை உயர்த்தி, “சகோதரன பிரன்ஹாம், என்னை நினைவு கூருங்கள்” என்று கூறுவீர்களா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஓ, எல்லாவிடங்களிலும் உயர்த்தப்பட்ட கரங்கள் மாத்திரமே காணப்படுகின்றன. 11எங்கள் பரலோகப்பிதாவே, நாங்கள் உம்முடைய இரக்கம் மற்றும், கிருபையின் சிங்காசனத்தை அணுகுகின்றோம். நாங்கள் இயேசுவின் நாமத்தினாலே தாழ்மையுடன் வருகின்றோம். ஏனென்றால் அவர் எங்களுக்கு செவிகொடுப்பார் என்று நாங்கள் நிச்சயம் கொண்டுள்ளோம். ஏனென்றால் அவர் “என் நாமத்திலே ” எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்“ என்று கூறியுள்ளார். அதுதான் வாக்குதத்தமாகும். அது உண்மை என்று நாங்கள் அறிந்தருக்கிறோம். எங்கள் அவிசுவாசமானது எவ்வளவாக தடையாக இருந்தாலும் ஆனாலும் அது உண்மையானதாக இருக்கின்றது. ஆகவே, நீங்கள் எங்கள் வேண்டுதலை கேட்டுக்கொண்டிருக்கின்றீர் என்று எங்களுக்குள் இருக்கின்ற எல்லாவற்றைக் கொண்டும் இன்றிரவு நாங்கள் விசுவாசிக்கின்றோம். நீர் இங்கே இருக்கின்றீர் என்றும் எங்கள் ஜெபங்களுக்கு நீர் பதிலளிப்பீர் என்றும் நாங்கள் விசுவாசிக்கின்றோம். தங்கள் கரங்களை உயர்த்தியுள்ள பாவிகளுக்காக விசேஷமாக நாங்கள் ஜெபிக்கிறோம். அவர்கள் தாமே தேவனுடைய ஒளியை இன்றிரவு காணட்டும். அவர்கள் இந்த பீடத்தின் மேல் சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் பாவம் நிறைந்த ஆத்துமாவிற்கு இரக்கத்திற்காக மன்றாடுவார்களாக. கர்த்தாவே, இதை அருளும். தங்களை வழிநடத்தும்படிக்கு தங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியைப் பெற்றிராதவர்களுக்காக நான் ஜெபிக்கின்றேன். தேவன் தாமே அந்த கட்டுபாட்டு கோபுரத்திற்குள்ளாக இன்றிரவு வந்து, அவர்களை தம் கட்டுக்குள் எடுத்துக் கொண்டு அவர்களுடைய வெளிச்சத்தையும், அவர்களுடைய ஜீவியத்தையும் இந்த இருண்ட மணி நேரத்தில் நடத்துவாராக, என்ன செய்வது என்று அறியாமல் தேசங்கள் திகைத்திருக்கின்ற ஒரு மணி நேரமாக இது இப்பொழுது இருக்கின்றது. நீர் தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கின்றீர். கர்த்தாவே, நாங்கள் உம்மை கண்டறிந்து கொண்டபடியால் மகிழ்ச்சி கொள்கிறோம். அநேக வருடங்களுக்கு முன்னர் அறிந்து கொண்டோம். எங்கள் இருதயத்திற்கு மிகவும் விலையேறப்பெற்ற ஒன்று அதுவாகும். நீர் தாமே ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையாயிருக்கின்றீர். நான் அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கின்றேன். அவர்கள் தாமே இன்றிரவு பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்படுவார்களாக. -இக்கட்டடத்திற்குள்ளும், கட்டடத்தின் வெளியே இருக்கின்ற வியாதியஸ்தர்கள், அவதியுறுபவர்கள், நோயிலிருந்து படிபடியாக விடுதலை பெற்றுக் கொள்கின்றவர்கள் மற்றும் யாராயிருந்தாலும் சரி அவர்களை ஆசீர்வதியும். பிதாவே, அவர்களுக்கு இரக்கம் வேண்டி நாங்கள் ஜெபிக்கின்றோம். 12இப்பொழுது, சபையை ஆசீர்வதிக்கும்படிக்கு நாங்கள் கேட்கின்றோம். அதை தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படிக்கு நாங்கள் ஜெபிக்கின்றோம். இங்கே இருக்கின்ற இந்த உள்ளூர் விசுவாசிகளுக்கு, இந்த பரிசுத்தமாக்கப்பட்ட உம்முடைய நாமத்திற்கு பயப்படுகின்ற தேவபக்தியுள்ள மக்களுக்கு நீர் செய்கின்றவைகளுக்காக உமக்கு நன்றி செலுத்த நாங்கள் விரும்புகிறோம், கர்த்தாவே, ஒரு நாளிலே எங்களை உம்மிடமாக வரவேற்க நீர் வரப்போகிறீர் என்று நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம். நாங்கள் மண்ணிலே நித்திரையாயிருந்தாலும் அது ஒரு போதும் தடை செய்யாது, ஏனென்றால் தேவனுடைய எக்காளம் முழங்கும், அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்து கொள்வார்கள். எப்படியாயினும் நாங்கள் அங்கே செல்லப்போகிறோம். மரணத்தால் எங்களை நிறுத்த முடியாது. அவரை சந்திக்கும்படிக்கு எந்த காரியமும் எங்களை தடை செய்யாது. ஓ தேவனே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எங்கள் ஆத்துமாக்களில் பூசிக் கொண்டிருப்பதற்காகவும், அவருடைய ஆவி எங்களில் வாசம் செய்து கொண்டிருப்பதற்காகவும் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். நீர் தாமே எங்கள் ஒவ்வொருவரையும் அந்த ராஜ்யத்தில் பிரஜைகளாக ஆக்கும்படிக்கு இன்றிரவு நாங்கள் ஜெபிக்கின்றோம். தேவன் தாமே வியாதியஸ்தரையும் மற்றும் அவதியுறுபவரையும் சுகமாக்குவாராக. உமக்கு மகிமையை எடுத்துக் கொள்ளும். எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற இந்த ஜனக்கூட்டத்துக்கு ஒரு செய்தியை கொண்டு வரும்படிக்கு உம்முடைய வார்த்தையை நாங்கள் அணுகுகையில், சிலர் ஆசீர்வதிக்கப்படுவதற்காக காத்துக் கொண்டிருக் கிறார்கள். சிலர் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கிறார்கள், சிலர் சுகமாக்கப் படுவதற்காக காத்திருக்கிறார்கள், சிலர் இரட்சிக்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள். கர்த்தாவே, பரிசுத்த ஆவியானவர் தாமே எங்கள் தேவைகளுக்கேற்றவாறு எங்கள் ஒவ்வொருவருக்கும் வார்த்தையை கொடுக்கட்டும். இப்பொழுது கர்த்தாவே, என்னுடைய ஆழமான அதிகமான தேவை என்னவென்றால் அது நீர் தாமே. ஓ தேவனே வாரும், பேசும், ஆதியிலே ஜலத்தின் மேல் அசைவாடி “வெளிச்சம் உண்டா வதாக” என்று கூறினவாறே வார்த்தை புறப்பட்டு செல்லும்போது வார்த்தையின் மேலே பரிசுத்த ஆவியானவர் தாமே அசைவாடுவாராக, இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். ஆமென். 13வேத வாசிப்பிலே, நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால்... கடந்த வாரங்களில் நான் பேசவும் வேதவசனங்களின் பாகங்களை குறித்துக் கொள்ளவும் செய்தேன், இங்கே சுமார் நான்கு பக்கங்களை குறிப்பெடுத்து வைத்துள்ளேன். அதை எப்படி அணுகப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை . ஆகவே, நீங்கள் அதை செய்ய விரும்புகிறீர்களானால், நீங்கள் அவ்வாறு செய்ய மிகவுமாக வரவேற்கப்படுகிறீர்கள். இப்பொழுதிலிருந்து முடிவானது மிகவும் சமீபமாயிருக்கிறது என்று நான் நினைக்கிறேன் ஆகவே, இந்த பொருளின் பேரில் சிறிது போதிக்கலாம் என்று நான் நினைத்தேன். நீங்கள் பரிசுத்த யோவான் 1வது அதிகாரத்திற்கு நீங்கள் திருப்பலாம். நான் 1வது வேத வாசிப்பை 1வது அதிகாரத்திலிருந்தும் மற்றும் இரண்டாம் வேத வாசிப்பாக பரிசுத்த யோவான் 4வது அதிகாரத்திலிருந்து வாசிக்கலாம். பரிசுத்த யோவான் 1வது அதிகாரம் 40வது வசனத்தை வாசிப்போம். 43ஆம் வசனம் வரைக்கும் வாசிப்போமாக. அடுத்ததாக 4வது அதிகாரத்தை எடுத்து 24ல் ஆரம்பித்து 25 மற்றும் 26வது வசனம். 1வது அதிகாரம், 40வது வசனம்.... யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின் சென்ற இரண்டு பேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான், மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார், கேபா என்பதற்கு பேதுரு என்று அர்த்தமாம் (ஆங்கிலத்தில் ஒரு கல் என்று அர்த்தமாம் which is by interpretation, A Stone என்று உள்ளது - தமிழாக்கியோன்) பிறகு 4ஆம் அதிகாரம் 24வது வசனத்திலிருந்து நாம் இதை வாசிப்போம். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்கிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ள வேண்டும் என்றார். அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்பட்ட மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். இதிலிருந்து ஒரு பேசும் பொருளாக ஐந்து எழுத்து வார்த்தையை (M-e-s-s-i-a-s) என்று எடுக்க விரும்புகிறேன், மேசியா “மேசியா” என்கின்ற வார்த்தையின் பேரிலேயே இன்றிரவிற்கான பொருள் இருக்கவே நான் விரும்புகிறேன். அந்த வார்த்தைக்கு “அபிஷேகிக்கப்பட்ட ஒருவர்” என்றதாகும், அல்லது அவ்வார்த்தை “அந்த அபிஷேகிக்கப்பட்ட இராஜா” என்றும் பயன்படுத்தலாம். அந்த வார்த்தைக்கு “கிறிஸ்து” என்றும் அர்த்தமாகும். ஆனால், அந்த அபிஷேகிக்கப்பட்ட ராஜா“ என்னும் இந்த சிந்தனைப்பொருளின் பேரில் நாம் பார்க்கப் போகிறோம். 14அது முதலாவதாக ஆதியாகமம் 3:15ல் வருகின்றது, நீங்கள் சில வேதவாக்கியங்களை குறித்துக் கொள்ள விரும்பினால், அது அபிஷேகிக்கப்பட்ட ஒருவராக இருக்க வேண்டிய அந்த வாக்குத்தத்தம் செய்யப்பட்ட அந்த ஸ்திரீயின் வித்து. வேதாகமம் முழுவதுமாக எல்லா தீர்க்கதரிசிகளும் வரப்போகின்ற ஒருவரை, அந்த அபிஷேகிக்கப்பட்ட ராஜாவைக் குறித்துதான் பேசினர். “அபிஷேகிக்கப்பட்ட” என்ற வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த அபிஷேகிக்கப்பட்டவர் தேவன். அவர் தாமே இஸ்ரவேலை எல்லா தேசங்களிலிருந்தும் விடுவித்து, தேசங்களின் மேல் ஆளுகை செய்யும்படிக்கு வழிநடத்துகின்ற ஒரு ராஜாவாக அவர் இருக்க வேண்டியவராக இருந்தார். அபிஷேகிக்கப்பட்ட ராஜா அதைச் செய்வதாக இருந்தது. மேசியா என்னப்பட்டவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்று எல்லா தீர்க்கதரிசிகளும் பேசியிருந்த ஒவ்வொரு விவரமான குறித்துரைத்தலையும் நசரேயனாகிய இயேசு நிறைவேற்றினார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் விசுவாசிக்கிறேன் ஏசாயா 9:6... இஸ்ரவேல் ஒரு அடையாளத்தை கேட்டபோது, தேவன் “நான் அவர்களுக்கு ஒரு நித்திய அடையாளத்தைக் கொடுப்பேன்” என்று கூறினார். ஒரு அடையாளம்... ஒரு நித்திய அடையாளம், அது என்றென்றுமாக இருக்கும் ஒன்றாகும். “ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்” என்றார். அது ஒரு அடையாளமாக இருக்கும். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தா, சமாதானப் பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்”. ஆகவே, அந்த வருகின்ற ராஜா, மேசியா என்று யேகோவா செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தினுடைய ஒவ்வொரு குறித்துரைத்தலும் இயேசுவுக்கு சரியாக பொருந்தினது என்று நான் விசுவாகிக்கிறேன். எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி.... அவர் தம்முடைய கிரியையிலே தோல்வி கண்டார் என்று அநேகர் நம்பினர்; ஆனாலும் அவர் இன்னுமாக ராஜாவாயிருக்கிறார். இப்பொழுதும் அவர் ராஜாவாயிருக்கிறார். அவர் பரிசுத்தவான்களின் ராஜாவாயிருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷம் “பரிசுத்தவான்களின் ராஜாவே” என்று கூறுகின்றது. அவர் ஒரு ராஜ்யத்தைக் கொண்டிருக்கின்றார். இன்றிரவு அந்த ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் என்று, அந்த அபிஷேகிக்கப்பட்ட வருடைய ராஜ்யத்தில் இருக்கின்றீர்கள் என்பதைக் குறித்து நீங்கள் மகிழ்ச்சி கொள்கிறீர்களா? அது மாத்திரம் அல்ல, ஆனால் அவர் தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார், தேவனுக்கு முன்பாக அபிஷேகிக்கப்பட்டவர்களாக்கினார். 15இங்கே குறிப்பிடப்பட்டிருந்த எல்லா தகுதிகளும் இயேசுவுடன் பொருந்தியிருந்தாலும் கூட... வருடா வருடங்களாக யூதர்கள் இந்த வாக்குத்தத்தங்களை வாசித்திருந்தனர். ஆனால் எப்படி அதை அவர்கள் காணாமல் நழுவ விட்டார்கள், அதைக் காணாமல் நழுவவிட்டார்கள்? அந்த வேத பண்டிதர்கள், வேதவாக்கியங்களை நன்று கற்று தேறியிருந்தவர்கள், தங்கள் வேதாகமத்தைக் குறித்து மிகுந்த அக்கறைக் கொண்ட அவர்கள், அவர்தான் அந்த அபிஷேகிக்கப்பட்டவர் என்பதை காண தவறினார்கள். அவ்வாறு அது நடந்து இருக்காது போல காணப்படுகின்றது. வேதவாக்கியங்களை நன்றாக கற்று தேறினவர்களான அவர்களால் அவரை அறிந்திருக்க முடியும் என்பது போலக் காணப்படுகின்றது. ஆனால், தேவன் அவர்கள் கண்களை குருடாக்கினார். அது தேவனுடைய கரம் தான் என்று தெளிவாகக் காண்பிக்கின்றது. அவர் மிகத் தெளிவாகக் கண்டுகொள்ளும்படிக்குக் காணப்பட்டார். மேசியாவின் அடையாளங்கள் அவரை மேசியா என்று நிரூபித்தன. அந்த அபிஷேகிக்கப்பட்ட ஒருவர் என்று அவரை நிரூபித்தன. அவர்கள் அதைக் காணத் தவறினர் என்றால், நிச்சயமாக அதைக் காணக்கூடாதவாறு குருடாக்கினது தேவனுடைய கரமாகத்தான் இருக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் அதைக் காணாமல் தவற விட்டிரு மாட்டார்கள். இன்றைக்கும் அதே போலத்தான் இருக்கின்ற சுவிசேஷமானது மறைக்கப்பட்டுள்ளது என்றால், குருடாயிருப்பவர்களுக்கு அது மறைக்கப்பட்டிருக்கின்றது. அதைப் பார்க்கும்படிக்கு இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால் அது தேவன் மூலமாகத்தான். 16இப்பொழுது, ஏசாயா 9 : 6, அதை நாம் இப்பொழுது வாசிக்கப் போவதில்லை. ஆனால், அந்த நித்திய பிதா, வல்லமையுள்ள தேவனானவர் அவராகத்தான் இருக்க வேண்டும். ஆதியாகமம் 1:26ல் தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அது காண்பிப்பது (நீங்கள் வேத வசனங்களை குறித்துக் கொள்ள விரும்பினால், ஆதியாகமம் 1:26), தேவன் ஆரம்பித்திலேயே மனிதனை ஒரு தேவனாகத்தான் உண்டாக்கினார் என்று காண்பிக்கின்றது. மனிதன் ஒரு தேவனாக உண்டாக்கப்பட்டான். ஒரு சிறிய அளவிலான தேவனாக, அவன் தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டான். அவன் தேவனைப் போல கைகளைக் கொண்டிருந்தான், அவன், தேவனை போல பாதங்களை கொண்டுயிருந்தான். தேவனைப்போல கண்கள், காதுகள் சிந்தனையைக் கொண்டிருந்தான். ஏனென்றால் அவன் தேவனுடைய குமாரனாக இருந்தான். மேலும், இயேசு அவனை ஒரு தேவன் என்று குறிப்பிட்டார். இயேசு “நான் தேவனுடைய குமாரன் என்று சொன்னால் ஏன் என்னை குற்றம் சொல்லுகிறீர்கள்? நீங்கள் தேவர்களாயிருக்கிறீர்கள் எனபதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேன் வசனத்தை பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர்கள் சொல்லியிருக்க நான் தேவனுடைய குமாரன் என்று சொன்னால் ஏன் என்னை குற்றம் சொல்லுகிறீர்கள். அவர் தீர்க்கதரிசிகளை குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். அபிஷேகிக்கப்பட்டவர்கள், சிறிது கீழான நிலையில் அபிஷேகிக்கப்பட்டவர்கள். இயேசு ஒரு தீர்க்கதரிசியைக் காட்டிலும் பெரியவராயிருக்கும்படிக்கு மிகவுமாக அபிஷேகிக்கப்பட்டிருந்தார். அவர் தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவரே இருக்கும் விதத்தில் இயேசு அபிஷேகப்பட்டிருந்தார். அவர் தேவனாயிருந்தார். தீர்க்கதரிசிகளும் அந்த அதே அபிஷேகத்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால், சற்று கீழான நிலையில் மாத்திரமே இருந்தனர். இப்பொழுது ஆதியாகமம் 1:26ல் தேவன் மனிதனை உண்டாக்கினபோது, அவர் அவனை ஒரு தேவனாக உண்டாக்கினார். ஏனென்றால் அவர் அவன் ஆளுகை செய்யும்படிக்கு உரிமையை அவனுக்கு அளித்தார். மனிதன் ஆளும் அதிகாரத்தைக் கொண்டிருந்தான். அவன் ஆகாயத்து பறவைகளின் மேலும், சமுத்திரத்தின் மச்சங்களின் மேலும், எல்லாவற்றின் மேலும் ஆளுகை செலுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருந்தான். எல்லா காரியங்களின் மேலும் அவன் ஆளுகை செலுத்தினான். அவன் ஒரு ஆளுகை செய்கிற வனாக இருந்தான். அபிஷேகிக்கப்பட்ட ஆளுகை செய்கிறவனாக இருந்தான். ஏனென்றால், அவன் தேவனுடைய ரூபத்தின்படியேயும் சாயலாகவும் பூமியை ஆளுகை செய்கிறவனாகவும் இருந்தான். அதன் காரணமாகத்தான் பூமியானது தேவனுடைய குமாரர் வெளிப்படும் படியாக ஏகமாய்த் தவித்து வேதனைப் பட்டு கூக்குரலிட்டு காத்துக் கொண்டிருக்கின்றது. மனிதன் தன்னுடைய சரியான நிலைமைக்கு திரும்ப வரும்படிக்கு உலகமானது காத்துக் கொண்டிருக்கிறது. 17இப்பொழுது, அவன் தேவனுடைய சாயலின்படியும் ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அது அவனை.... தேவன் அவனை உண்டாக்கினபோது, தேவன் அவனுக்கு அவருடைய ஆவியின் சிலவற்றையும், அவருடைய ஜீவனின் பாகத்தையும் அளித்தார். ஆகவே, அவன் தேவனுடைய ரூபத்தின்படியேயும் சாயலின்படியும் இருக்கின்றான். ஆதலால், இங்கே இந்த.. மனிதன் தன்னுடைய இயற்கையான நிலையில், நாம் இப்பொழுது இருக்கின்றவிதமாக, நீங்கள் பார்க்கலாம். அவன் மனிதனுடைய மிக உயரிய நிலையில் இருக்கின்றான். எப்படி இருக்கின்றோம் என்று அவர்கள் கூற முயற்சிக்கும் விதமானது ஏனென்றால் மனிதன் தன்னுடைய விழுந்து போன நிலையில் கூட, அவன் விழுந்து போன நிலையிலும் கூட அவன் தேவனுடைய குமாரன் என்ற நிலையில்தான் இருக்கின்றான். அதனாலே அவனால் மிருகங்களை விட சற்று சிறந்த நிலைக்கு தன்னை நிலைப்படுத்திக் கொள்ள ஏதுவாகின்றது. அவனுக்கு அறிவு இருக்கின்றது. அவன் தனக்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டிக் கொள்கிறான். வாழும்படிக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொள்கிறான். சிறந்த முறையில் பிரயாணம் செய்வதற்கு இன்னும் நல்ல நிலைகளை அவன் உண்டாக்கிக் கொள்கிறான். இப்பொழுது அவன் ஒரு ஜெட் விமானத்திலோ அல்லது ஒரு ராக்கெட்டிலோ வானத்தில் மணிக்கு ஆயிரத்து தொள்ளாயிரம் மைல்கள் வேகத்தில் செல்கின்றான். மேலும், அவன் உலகத்தை இருபத்து நான்கு மணி நேரத்தில் சுற்றி வரும் நிலையை தனக்கு உண்டாக்கி வைத்திருக்கிறான். காற்று சுழலுகின்ற இடத்திற்கு (பூமியின் கோளப்பாதை) அவன் ஒரு விண்கலம் போன்ற ஒன்றை அனுப்பி அந்த இடத்தில் அப்படியே நின்று உலகம் நான்கு மணி நேரங்களில் முழுவதும் சுற்றி வருகிறான். ஒரே இடத்தில் இருந்து கொண்டு அதைச் செய்கிறான். மேலே சென்று ஆகாய வாயு மண்டலத்தில் நின்று, திரும்பவும் கிழே வந்து வீட்டிற்குச் செல்கிறான், பூமி சுற்றிலும் இருக்கிற காற்று வீச்சை இழுத்து, அதிலிருந்து காற்றை பிறப்பிக்கின்றது. காற்று வீச்சை எடுத்துச் செல்கின்ற, சுழலுகின்ற பூமியின் மீது நிற்கின்றான். பூமியானது சுமார் மணிக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு மைல்கள் வேகத்தில் சுழன்று கொண்டிருக்கின்றது. இல்லை, மணிக்கு சுமார் ஆயிரத்து நூறு மைல் வேகம் என்று இருக்கும். அவன் மேலே ஆகாயத்தில் சென்று அந்த சக்திகளுக்கு எதிர்மறையாக செயல்படுகிறான். புவியீர்ப்பு சக்திக்கு மேலே நிற்கின்றான். அங்கே நிற்கின்றான் அவனுக்கு கீழே பூமியானது சுழன்று செல்வதைப் பார்க்கின்றான். அவன் சாமர்த்தியசாலி, அறிவாற்றல் பெற்றவன். அவன் - அவன் தேவனுடைய சாயலாகவும் ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவனுக்குள்ளாக ஒளியாக இருக்கின்றது. 18இப்பொழுது, உதாரணமாக ஒரு மனிதன் இரட்சிக்கப்படும் போது, அவன் ஒரு... அவனுக்குள்ளாக வருகின்ற அந்த சிறு ஒளியானது என் சட்டையில் இருக்கின்ற இந்த சிறு பொத்தான் போல இருக்கின்றது. அது தேவன் ஒரு மனிதனின் உள் பாகத்திற்குள்ளாக வருவதாகும். மனிதனின் உள் பாகம் அல்லது.... ஒரு மனிதன் ஒரு கூடார முறைமையில் உள்ளபடியே உண்டாக்கப்பட்டிருக்கின்றான்; உள் பிரகாரம், அடுத்ததாக பரிசுத்த ஸ்தலம், அதற்கு பிறகு மகா பரிசுத்த ஸ்தலம், அந்த திரைக்கு உள்புறத்தில் ஷேக்கினா மகிமை இருக்கின்றது. இப்பொழுது, ஒரு மனிதனின் வெளிப்புற வாசல்கள் அவனுடைய ஐந்து புலன்கள் ஆகும். அதனுள்ளாகத்தான் உட்பிரவேசித்தல் நடக்கின்றது. மனிதனின் உள்ளே, அவனுடைய ஆத்துமா இருக்கின்றது... அந்த ஆத்துமா, அவனுடைய இருதயத்திற்குள் இருக்கின்ற ஆவியின் தன்மை தான் ஆத்துமாவாகும்; அது அவனுடைய ஆத்துமாவை பிறப்பிக்கின்றது. அது அவனை சுற்றிலும் இருக்கின்ற சூழ்நிலையை உண்டாக்குகின்றது. அவனுக்கு உட்பிரவேசிக்கின்ற வாசல்கள் ஐந்து இருக்கின்றது. அதன்பிறகு உள்புறத்தில் ஒரே ஒரு வாசலை மாத்திரமே அவன் கொண்டிருக்கின்றான். ஷேக்கினா மகிமைக்குள்ளாக செல்வதற்கு இருக்கின்ற ஒரு வாசல், அதன் வழியாக தேவன் அவனுக்குள்ளாக பிரவேசித்து அந்த கட்டுப்பாட்டு அறைக்குள்ளாக அவனை முழு கட்டுக்குள் கொண்டு வரும்படிக்கு ஏதுவாக அது இருக்கின்றது. அதற்கான வழி என்னவென்றால் சுய மனவிருப்பம், உறுதி ஆகும். நீங்கள் விருப்பம் கொள்கிறீர்களோ அல்லது இல்லையோ, அது உங்களைப் பொறுத்துள்ள ஒன்றாகும். தேவன் ஒரு மனிதனின் இருதயத்திற்குள் வரும்படிக்கு மனிதனுக்கு இருக்கின்ற ஒரே ஒரு வாயில் அதுவாகும்; அது சுய விருப்புறுதியினால்தான் ஆகும். அது எப்படி ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தாங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமானாலும் தெரிந்து கொள்வதற்கான உரிமை அளிக்கப்பட்டிருந்ததோ அதே போலத்தான் மனிதனுக்கும் வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சரியான ஒன்றையோ அல்லது தவறான ஒன்றையோ தெரிந்து கொள்ளலாம், நீங்கள் விரும்பும் ஏதாவது ஒன்றை தெரிந்து கொள்ளலாம். 19இப்பொழுது, சுய விருப்பம். அப்பொழுது தேவன் மனிதனுக்குள் வருகின்றார், இருதயத்துக்குள்ளாக வருகின்றார், அது தான் ஆவியாகும். பிறகு அந்த ஆவி ஆத்துமாவை பிறப்பிக்கின்றது, அப்பொழுது அந்த ஆத்துமா சரீரத்திற்குள் வாசம் செய்கின்றது. இப்பொழுது, ஒரு மனிதன் மனமாற்றம் கொள்கின்றபோது, அப்போது அவனுடைய இருதயத்தில் அந்த சிறு வெள்ளை பொத்தானைப் போல ஒன்று தோன்ற ஆரம்பிக்கின்றது. இப்பொழுது, அதன் பகுதி தான் தேவன் ஆகும். தேவன்.... அவன் தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறக்கும் போது, தேவனுடைய ஆவி அவனுக்குள்ளாக வாசம் செய்கின்றது. இப்பொழுது.... அவர் அந்த ஆவியை பெருகச் செய்து கசப்பின் வேர்கள் அனைத்தையும் வெளியே எடுத்துப் போட்டு, தேவனுடைய வழியை அவனுக்குள்ளாக மறுபடியுமாக உந்தித்தள்ளுவாராக; அவன் ஏதேன் தோட்டத்தில் எப்படியாக எந்த நிலையில் இருந்தானோ அந்த அதே நிலைக்கு மறுபடியாக அவனால் வரமுடியும். இயேசு மாற்கு 11:24ல் “எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: ”நீ நகர்ந்து செல்வாயாக' என்று சொல்லி தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்“ என்று கூறினார். அது மனிதனை சரியாக மறுபடியுமாக மிக உயர்ந்த தலைமையான ஒரு நிலைக்கு (Supreme) வைக்கின்றது. அவனை மறுபடியாக அந்த நிலையில் வைக்கின்றது. 20இப்பொழுது, நாம் ஒளி மீட்டர்களால் உருவாக்கப்பட்டுள்ளோம். நமக்குள்ளாக இருப்பது இயலுலக அண்டத்திற்குரிய காஸ்மிக ஒளியாகும். இப்பொழுது அந்த காஸ்மிக் ஒளியானது ஒரு சரித்தை எக்ஸ்ரே புகைப்படம் எடுக்கும்போது அந்த ஒளியைக் கொண்டு தான் எடுக்கிறார்கள். அந்த எக்ஸ்ரேயானது (x-ray) எக்ஸ்ரே ஒளியைக் கொண்டு எடுக்கப்படுவதில்லை. அது உங்கள் சொந்த ஒளியைக் கொண்டு தான் எடுக்கப்படுகின்றது. ஆகவே, அந்த காஸ்மிக் ஒளியானது, தெளிவாகக் கூறுவோமானால், அந்த காஸ்மிக ஒளியை இன்னும் சற்று தள்ளிப் பார்ப்போமானால் அங்கே நித்திய ஒளிதான் இருக்கும் .... நம்முடைய சிந்தித்தலை அவர் செய்வதற்கும், நம்முடைய நடையை அவர் செய்வதற்கும், நம்முடைய பேச்சை இயக்குவதற்கும் தேவன் அங்கே மிக உயர்ந்த மேலான நிலையில் வாசம் பண்ணுகிறார். ஆகவே, இன்னுமாக அது மனிதன் சொந்தமாக இயங்குதல் அல்ல; அது தேவன் மனிதனுக்குள் இருப்பதாகும். (இந்த ஒலிபரப்பு கருவியில் சத்தமிட்டு உங்களை செவிடாக்குகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் என் பேச்சு சத்தம் என்னிடமே திரும்பி வருவதை என்னால் கேட்கமுடிகின்றது. சத்தம் மிக அதிகமாக இருக்கின்றது. அது நானல்ல; ஆனால் அது இதுதான் ஆகும். இப்பொழுது, பாருங்கள் அதை அப்படியே பிடித்து நில்லுங்கள்) இப்பொழுது, அவன் ஒளியை, ஜீவனைக் கொண்டிருக்கின்றான். ஜீவனானது மனிதனுக்குள் வாசம் பண்ணுகின்ற தேவனுடைய ஒளியாகும். அவன் மாத்திரம் ஆவியானவருக்கு இணங்கி தன்னை விட்டுக் கொடுப்பான் என்றால், மனிதன் என்று கூட அழைப்பதிற் கில்லாமல் பாவி போல அவன் ஆனாலும் பிறகு அவன் இன்னும் அதிகமாக தேவனைப் போல மாறுகின்றான். 21இங்கே சிறிது காலத்திற்கு முன்னர் ஒரு மனிதன் வியாதியாயிருந்த ஒருவனுக்கு ஜெபிக்கும் போது ஜெபித்துக் கொண்டிருந்த அந்த மனிதனை எக்ஸ்ரே (x-ray) படம் எடுத்தார்களாம். (ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை அதைக் குறித்து எழுதியிருந்தது) அப்பொழுது அந்த எக்ஸ்ரே படத்தில் அந்த மனிதர்களில் ஒருவனிடமிருந்து ஒரு ஒளி கதிர் புறப்பட்டு வெளியே வந்ததை கண்டார்கள். மேலும் எல்லாரிடமிருந்து அல்ல பிறகு ஒரு ஈயத் தகடை எடுத்து அந்த மனிதனின் கரங்களின் கீழே வைத்தபோது ஒரு ஒளிக்கதிர் பிரகாசித்து வெளிவந்ததை அவர்கள் கண்டார்கள். நீங்கள் அதை வாசித்திருப்பீர்கள் என்று நான் நினைக்கின்றேன். இங்கிலாந்தில் அவர்கள் “அந்த சுகமளிப்பவர்களை” (அவ்வாறு அவர்கள் அழைத்தனர்) எல்லா மருத்துவமனைகளுக்கு அனுப்பினார்கள். அப்போது மருந்துகளால் நடைபெற்ற சுகமளிப்பைக் காட்டிலும் எண்பது சதவீதம் தெய்வீக சுகமளித்தலினால் சுகம் பெற்றார்கள். “ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிக்கை அதை இங்கே கொண்டு வந்து செய்து பார்த்தது. அது “நியூஸ் வீக்” பத்திரிக்கையிலும் வந்தது, “ரீடர்ஸ் டைஜஸ்ட்” அதை எடுத்து இங்கே சோதித்துப் பார்த்தது. அப்போது அவர்கள் ஒரு ஒளிக்கதிர் இருந்ததை கண்டுபிடித்தார்கள். இந்த மனிதன் உத்தமமாக (அவர்கள் அந்த காரியத்தை இவனைக் கொண்டு சோதனை செய்து பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை அவன் அறியாதிருந்தான்) தன் கரங்களை அந்த மனிதனின் மேல் வைத்து ஊக்கமான ஜெபத்தைச் செய்தான். அவர்கள் எக்ஸ்ரே படத்தை எடுத்துப் பார்த்தார்கள். அப்பொழுது அவன் கரத்திலிருந்து ஒரு ஒளி வந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். தேவன் “வியாதியஸ்தர்கள் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று கூறினபோது இயேசு தாம் பேசிக்கொண்டிருந்த காரியத்தைக் குறித்து நன்றாக அறிந்திருந்தார். ஓ, சபை எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அந்த ஒரு இடத்திற்கு சபையானது தன்னை முந்தித் தள்ளிச் செல்கின்றதை நான் காண விரும்புகிறேன். 22பிறகு தேவன் மாம்சமாக்கப்பட்டு மேசியா ஆனார். அப்படியானால் நாம் தாமே அவர் எப்படியாக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தாரோ அந்த விதமான அபிஷேகம் பண்ணப்படும்படிக்கு நாம் நம்மையே அவருக்கு இணங்கி சரணடைவோமானால், அப்பொழுது நாம் சிறிய அளவிலான மேசியாக்களாக, சிறிய ஒளிகளாக ஆகிவிடுவோம். அந்த விதமாகத்தான் சபையானது இருக்க வேண்டியதாக உள்ளது. அதிக எண்ணிக்கையுள்ள ஒளி (lights), அபிஷேகிக்கப்பட்ட சிறியவர்கள். அதுதான் தேவனுடைய சபையாகும். அவருடைய பிரகாசிக்கின்ற ஒளியானது மேசியாவின் ஒளியாகும், உயிர்த்தெழுந்த கிறிஸ்து தாமே தம்முடைய ஜனங்களுக்குள்ளாக, அந்த அபிஷேகிக்கப்பட்டவர்களுக்குள்ளாக இருத்தல், அவர்கள் தாமே அவருடைய ஒளியை, வெளிச்சத்தை சபைக்காலங்கள் முழுவதுமாக சுமந்து கொண்டு சென்றனர். சில சமயங்களில் அது ஏறக்குறைய முற்றிலும் அணைந்து போகின்றது; ஆனாலும், உடனே அது திரும்ப வருகின்றது. தேவனால் அபிஷேகிக்கப்பட்ட அந்த அவர் தாமே, தேவனுடைய மேசியாவின் சபை... மேசியா என்பதற்கு “அபிஷேகிக்கப் பட்டவர்” என்றும் “ராஜா” என்று அர்த்தம் கொள்ளுமானால், அப்படியானால் சபையானது மேசியாவாவின் ஆவியினாலே அபிஷேகிக்கப்படுகிறது, அது சிறிது கீழான நிலையில் இருக்கின்றது, ஆனாலும், இன்னுமாக ஒரு மேசியாவாக இருக்கின்றது; ஏனென்றால் அது அவருடைய ஒளியைக் கொண்டிருக்கிறது, அவருடைய வல்லமையை பிரதிபலிக்கிறது, அவருடைய மகிமையை பிரதிபலிக்கிறது. அவருடைய அரசாட்சியை பிரதிபலிக்கிறது. ஆதலால் தான் அது மேசியாவாக இருக்கின்றது. ஓ, அது எப்படியாக அவரை தம்முடைய ராஜ்யத்தில் அவருடைய ஆளுகையில் பிரதிபலிக்கிறது. இன்றைக்குள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் சபையை மரணத்திற்கேதுவாக ஸ்தாபனமாக்கிவிட்டோம், மேசியாவின் ஒளி, வெளிச்சத்திற்கு பதிலாக நாம் ஸ்தாபனத்தைப் பெற்றிருக்கிறோம். நாம் ரசலைட் (Russellite), ப்ராசலைட் (Proselyte), மற்றும் மற்ற எல்லா விதமான லைட்டுகளையும் (வெளிச்சங்களையும்) கொண்டிருக்கிறோம். ஆனால், நமக்கு மேசியாவின் வெளிச்சம், ஒளி (Messiah Light) தேவையாயிருக்கிறது. அது தான் சபைக்கு இன்று தேவைப்படுகிறது. மேசியாவின் ஒளி, அவருடைய தயைக்காக நான் அவரை மிகவும் நேசிக்கிறேன். 23இப்பொழுது அது உண்மையாகும். தேவனால் அழைக்கப்பட்ட மேசியாக்கள்.... தேவன் நம்மை அழைத்தார், நாம் தேவனுக்கென்று ராஜாக்களும் ஆசாரியர்களுமானோம். எப்படி இயேசு தேவனுடைய மகா பிரதான ஆசாரியராக இருந்தாரோ, நாம் ஒரு சிறிய நிலையிலான ஆசாரியராக இருக்கின்றோம். இயேசு தாமே... தேவன் முழுவதுமாக அவருக்குள்ளாக வாசம் செய்தார், தேவனுடைய வெளிப்படுதலை உலகத்திற்கு பிரகாசித்துக் காட்டும்படிக்கு அப்படியாக வாசம் செய்தார். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவுக்குள் உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார். ஆகவே தேவன் கிறிஸ்துவுக்குள்ளாக இருந்து உலகத்துக்கு தம்மை ஒப்புரவாக்கினார். தேவன் தம்முடைய சபைக்குள்ளாக வந்து தமக்கென சில சிறிய அளவிலான மேசியாக்காளை அபிஷேகிக்கின்றார். ஓ, என்னே, உங்களால் அதைக் காண முடிகின்றதா? அந்த அதே காரியங்களை அவர் தம்முடைய சபையில் செய்தார். அவர் கொண்டிருந்த அதே வல்லமை சபைக்குள் இருக்கின்றது. அப்பொழுது அவருடைய சபையானது அவருடைய ஆளுகைக் குள்ளானதாக ஆகின்றது, அப்பொழுது அவர் இந்த ஆளுகைக்கு ராஜாவாகின்றார், நாம் அவருடைய ராஜாக்களும் ஆசாரியர்களுமாக இருந்து தேவனுக்கென்று ஆவிக்குரிய பலிகளை செலுத்தி உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை செலுத்துகின்றோம். ஆமென். ஓ, என்னே. உங்களுக்கு புரிகின்றதா; சிறிய அளவிலான மேசியாக்கள்; சிறிய அளவிலான மேசியாக்கள், குட்டி மேசியாக்கள், அபிஷேகிக்கப்பட்ட சிறிய அளவிலானவர்கள், எதனால் அபிஷேகம் பண்ணப்படுகிறார்கள்? அந்த மூல முக்கிய நபராகிய அவரிலிருந்து அபிஷேகிக்கப்படுகின்றனர், அந்த மகத்தான ஒருவரிலிருந்து அபிஷேகத்தைப் பெறுகின்றனர். 24ஓ, இயேசு பூமியில் இருந்தபோது தாம் ஒரு மேசியா என்பதை அவரால் மறுக்க முடியவில்லை , ஏனென்றால், அவர் மேசியாவின் அடையாளங்களைச் செய்தார். யூதர்கள் குருடாக்கப்பட்டிருந்தனர். அதன் காரணமாகத்தான் யூதர்களால் அவரைக் கண்டு கொள்ளவும் மேசியா என்பதற்காக அவர் தம்மில் கொண்டிருந்த அவருடைய அடையாளங்களையும் காண முடியவில்லை. இன்றிரவும் சபையும் அவ்விதமாகத்தான் இருக்கின்றது. அது குருடாக்கப்பட்டுள்ளது. வெளி உலகத்தாரால் அதைக் காண முடியாது. ஏனென்றால் இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் ஆவிக்குரிய எந்த காரியங்களையும் காணக்கூடாதவாறு அவர்களுடைய கண்களை குருடாக்கிவிட்டான். ஓ, நம்மால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறதென்றால்.... இயேசு புறப்பட்டுச் சென்று மேசியாவின் அடையாளங்களை செய்து காண்பித்தார். ஆனால், மக்கள் அவரை தேவதூஷணம் செய்தார்கள். அந்த மகத்தான அபிஷேகம் பண்ணப்பட்ட ராஜாவை, அந்த மேசியாவையே அவர்கள் தேவதூஷணம் செய்தார்கள் என்றால், அவருடைய வீட்டாரையும், அவருடைய ராஜ்யத்தைச் சேர்ந்தவர் - களையும் எவ்வளவு அதிகமாக அவர்கள் தேவ தூஷணம் செய்வார்கள். பெயல்செபூல்கள் மற்றும் என்னவெல்லாம் கொண்டு அவரை தீதாக அழைத்தார்கள், உங்களை அதை விட மிக மோசமான பெயர்களை சூட்டி அழைப்பார்கள். “பரிசுத்த உருளையன், பரிசுத்த குதிப்பவன்” என்றும் இன்னும் மற்ற பெயர்களைக் கொண்டு வசைபாடுவார்கள். அவர்கள் எப்போதுமே ஒரு அவதூறான இழிவான ஒரு பெயரைக் கொண்டுதான் அழைப்பார்கள், ஏனென்றால் அந்த காரியம் பிசாசிடமிருந்து தான் வருகின்றது. அவருடைய வீட்டாரை அப்படியாக அழைத்தார்கள். அவர் கூறினார் அவர்களை விட... அவரையே அவர்கள் அப்படியாக அழைத்திருப்பார்களானால், அவருடைய வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? ஆகவே, அது இன்னுமாக அதே விதமாகத்தான் இருக்கின்றது. 25இப்பொழுது, நீங்கள் “இதோ பாருங்கள், சகோதரன் பிரன்ஹாம், இயேசு மேசியாவின் அடையாளங்களைக் கொண்டிருந்தார் தான். அந்த அடையாளம் என்ன என்று எங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்கலாம்?” எனலாம். சரி, அவர் வந்தபோது... வேதாகமம் கூறுகிறது அடையாளங்களைக் காண்பிப்பார் என்று கூறியுள்ளது. எந்த ஒரு வேதாகம போதகனுக்கும் அது தெரியும். “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார்” என்று மோசே கூறியுள்ளான். ஆகவே, அப்போது அவர்கள்... அவர் தம்மை குறித்து காண்பிக்கிற அந்த அடையாளங்களை அவர் செய்து காட்டினபோது, இங்கே 4வது அதிகாரத்தில் உள்ளது போல, அந்த ஸ்திரீயிடமாக உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள் என்று அவர் கூறினபோது அவள், “ஐயா, நீர் ஒரு தீர்க்கதரிசி என்று காண்கிறேன். மேசியா வரும் போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்று கூறினாள். அதற்கு அவர் “உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார்” என்றார். உடனே அவள் ஊருக்குள்ளே போய் அந்த ஊரின் ஜனங்களை நோக்கி “நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார். அவரை பாருங்கள்; அவர்தான் அந்த மேசியாதானோ?” என்று கூறினாள். இயேசு தாமே, “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. எனக்கு அந்த அபிஷேகம் இருக்கின்றது என்று கூறி தேவனுடைய கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நான் அவரால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறேன். அவரோடே அபிஷேகிக்கப்பட்டிருக்கிறேன்.... நான் இந்த கிரியைகளை செய்யவில்லை . அது... என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே. அவர் தான் இந்தக் கிரியைகளை செய்துவருகிறார். அந்த கிரியைகளை நான் செய்யாதிருந்தால் நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. நான் அதைச் செய்தேனேயானால், அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்” என்று கூறினார். 26இப்பொழுது, அது மேசியாவுக்கு. சபையாகிய சிறிய அளவிலான மேசியாக்களுக்கு என்னவென்றால், இதோ இங்கே வருகின்றது. நீங்கள் தயாரா? பரிசுத்த யோவான் 14:12, இயேசு “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்” என்று கூறினார். சிறிய அளவிலான மேசியாக்கள், அது சரியே. சிறிய அளவிலான மேசியாக்கள், பூமியில் மேசியாவுக்கு பிரதிநிதித்துவமாக இருப்பவர்கள்... மாற்கு 16, அவர் “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசிக்கிறவர்களை (இந்த சிறிய அளவிலான மேசியாக்களை) இந்த அடையாளங்கள் பின் தொடரும்: விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். விசுவாசியாதவனோ ஆக்கினைக் குள்ளாகத் தீர்க்கப்படுவான், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங் கள் பின் தொடரும்” என்றார். எவ்வளவு வரைக்குமாக? உலகம் முழுவதற்கும். யாருக்கு? சர்வ சிருஷ்டிக்கும். ஓ. நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன். எப்படியாக அதை காணாமல் தட்டிக் கழிக்கப்போகிறீர்கள்? “அது சீஷர்களுக்கு மாத்திரம்தான்” என்கிறீர்கள். சீஷர்களுக்கு மாத்திரம் தானா? “நீங்கள் உலகமெங்கும் போங்கள், சர்வ சிருஷ்டிக்கும், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்று கூறினார். 27விசுவாசிகளை அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடருவதை விசுவாசிக்காத மக்கள் எப்படியாக... அற்புதங்களும் அடையாளங்களும் அப்போஸ்தலரோடே நின்றுவிட்டது என்று சபையின் வரலாற்றில் உங்களால் மட்டும் எப்படி வாசிக்க முடிகின்றது? சபையின் காலங்களில்... நான் நிசாயா பிதாக்கள், நிசாயா ஆலோசனை சங்கம் மற்றும் எனக்கு தெரிந்த பழங்கால ஆதி எழுத்தாளர்கள் எழுதினவற்றை நான் வாசித்திருக்கிறேன், ஹிஸ்லோப் எழுதியுள்ள “இரண்டு பாபிலோன்கள்” என்னும் புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அநேக பழைமையான புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆரம்பத்திலிருந்து ஆதி கத்தோலிக்க சபை வரைக்குமாக... கிறிஸ்துவுக்கு பிறகு அறுநூறு வருடங்களுக்கு பிறகு, இரேனியஸ், பரிசுத்த மார்டின், கொலம்பா மற்றும் எல்லோரும் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் பரிசுத்த மனிதர்களாவர். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலான ஞானஸ்நானத்தைக் குறித்து பிரசங்கித்தனர். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படுதலைக் குறித்து பிரசங்கித்தனர். அந்நிய பாஷையில் பேசுவதைக் குறித்து பிரசங்கித்தனர். மரித்தோரை உயிரோடு எழுப்பினர்; வியாதியஸ்தரை சுகமாக்கினார்கள். அடையாளங்களும் அற்புதங்களும் இருண்ட காலங்கள் வரைக்குமாக, இருண்ட காலங்களிலும் அவர்களை பின்தொடர்ந்தன. அந்த சுவிசேஷ ஒளியை பிரகாசிக்கும்படி உயர்த்தி பிடித்திருந்த ஒரு சிறு குழுவானது தொடர்ந்து இருந்து வந்தது. அது என்னவாயிருந்தது? சிறிய அளவிலான மேசியாக்கள், மேசியாவின் ராஜ்யத்திற்கு பிரதிநிதித்துவமாக அவர்கள் அதிலே உறுதியாக நின்றனர். இயேசு ஒரு போதும் தோல்வியுறவேயில்லை. அவர் என்ன செய்ய வேண்டும் என்று தாம் பெற்றிருந்த கட்டளையை சரியாக அப்படியே செய்து நிறைவேற்றினார். அவர் ஓர் ராஜ்யத்தை நிறுவும்படிக்கு வந்தார். சரியாக அதைச் செய்தார். தேவனுடைய ராஜ்யம் பரிசுத்த ஆவியின் வல்லமையினாலே இருதயத்துக்குள்ளாக வந்து, இயேசு செய்தது போலவே அடையாளங்களும் அற்புதங்களும் அபிஷேகிக்கப்பட்ட சபையானது செய்து அவருடைய ராஜ்யத்தின் ராஜா மேசியாவே என்று நிரூபிக்கும்படிக்கும் தேவனுடைய அபிஷேகத்தை அது கொண்டு வருகின்றது. ஆமென். இப்பொழுது எனக்கு சிறிது சப்தமிடும்படிக்கு தோன்றுகிறது. 28ஓ, அங்கே மக்கள் நிறைய பேர்கள் ஒரு அங்கத்தினர் அட்டையை கையில் வைத்து சுட்டிக்காட்டி கொண்டு “வாருங்கள் எங்களைச் சேர்ந்து கொள்ளுங்கள். வந்து இதில் சேருங்கள், வாருங்கள் வந்து இதில் சேருங்கள். எங்களிடம் தான் அதிக அங்கத்தினர்கள் உள்ளனர். இது எங்களிடம் இருக்கின்றது. மிகவும் விலையுயர்ந்த காரியங்கள் எங்களிடம் உள்ளது” என்று கூறுகின்றனர். அதில் சேர்வதினால் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? அவை எல்லாமே மடமைத்தனமான அறிவீனமான காரியமாகும். அது அழிந்து போகும். ஆனால், தேவனுடைய ராஜ்யமானது ஒரு மனிதனின் இருதயத்திற்குள்ளும் ஆத்துமாவிற்குள்ளும் இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலினாலே நிறுவப்படுகின்றது. அதனால் தான் அவர் “இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல் அதை மேற்கொள்ளாது” என்று கூறினார். இந்த வெளிப்பாட்டின் மேலே ஒரு வெளிப்பாட்டை கொண்டிருப்பதினால் நீங்கள் ஒரு விசுவாசியாகின்றீர்கள், விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும் என்பதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்கள். 29மேசியா என்றால் என்ன என்று உங்களால் காண முடிகிறதா? மேசியா என்றால் தேவனுடைய ராஜ்யம், அவர் எந்தவித அபிஷேகத்தினாலே அபிஷேகப்பட்டிருந்தாரோ அந்த அதே ஆவியினாலே அபிஷேகிக்கப்பட்டிருக்கின்ற அபிஷேகிக்கப்பட்டவர்கள் என்பதாகும். ஒருவர் அவரிடமாக “என் குமாரராகிய இவ்விரண்டு பேரில் ஒருவன் வலது பாரிசத்திலும் ஒருவன் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருப்பார்களா?” என்று கேட்டார். அதற்கு அவர் “நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா?” என்று கூறினார். அதற்கு அவள், “ஆமாம்” என்றாள். அதற்கு அவர் “நீ செய்வாய். ஆனால், ராஜ்யத்தில் யார் வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி செய்வது என் காரியம் அல்ல” என்று கூறினார். ஆகவே அது எதைக் காண்பிக்கிறதென்றால் நாமும் கூட துன்புறுத்தல் என்னும் அதே பாத்திரத்தில் பானம் பண்ணுவோம் என்பதே பெயல்சேபூல் என்றும் அல்லது எதுவாயிருந்தாலும் சரி அப்படியாக அழைக்கப்படுவோம். ஆனாலும் அந்த அதே ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டிருப்போம். ஆகவே, அவர் மேசியா என்று அழைக்கப்பட்டாரென்றால், அவர் மேசியா தான், ஏனென்றால் அவர் அந்த அதே பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டிருந்தார்... ஆகவே, அந்த அதே பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டிருக்கின்ற எந்த சபையும் சிறிய அளவிலான மேசியாவே சற்று சிறிய நிலையில் உள்ளவர்கள், அவர்கள் சிறிய அளவிலுள்ள தேவன். என்றாவது ஒரு நாளிலே அந்த சரீரமானது உயிர்த்தெழும் போது, அதற்கு முன்னர், தேவன் தம்முடைய வல்லமையை, அதன் ஒவ்வொரு செயல் வடிவத்திலும் அது எப்படியெல்லாம் இருக்க வேண்டியுள்ளதோ அதே போல வெளிக்கொணர்ந்து செய்து காட்டும் ஒரு மக்கள் கூட்டத்தை தேவன் தமக்கென கொள்வார் என்று நான் நம்புகிறேன். மேசியா, அந்த அபிஷேகிக்கப்பட்டவர் அவர், ராஜாவானவர் விடுதலையைக் கொண்டு வருபவர், ஒரு ராஜா... ஒரு மேசியாவிற்கு ஊழியம் செய்கின்ற ராஜாக்களும் ஆசாரியர்களுமாக, ராஜாக்களாக நீங்கள் இருக்கின்றீர்கள். அவருடைய அடையாளங்களானது எல்லா காலங்களிலும் பின் தொடர்ந்து வந்து, அவருடைய ஒளியை, வெளிச்சத்தை பிரகாசிப்பித்து, தம்முடைய ராஜ்யத்தின் மக்களோடே அவருடைய சமூகம் இருக்கின்றது என்பதை காண்பிக்கவே அது பின் தொடர்ந்தது. 30இப்பொழுது, நீங்கள் இதைப் பெறுவதற்கு மரிக்க வேண்டியதில்லை. நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் மரிக்க வேண்டும் (spiritually die). நீங்கள் சரீரப்பிரகாரமாக மரிக்க தேவையில்லை . தேவன் உங்களை தம் கட்டுக்குள் எடுத்துக் கொள்ள இருக்கும் இடமானது உட்புறமாகும். ஆகவே, அவர் தாமே உங்களுக்குள்ளாக தம்மை உந்தித் தள்ளிக்கொண்டு வருகையில், கசப்பின் வேர், பகைகள், துர்குணங்கள் சண்டைகள் போன்றவற்றை உள்ளே வர விடாதீர்கள்... அது அவரை மறுபடியுமாக திரும்பி பின்புறம் தள்ளி விடும். நீங்கள் உங்களிலுள்ள இழிவுத்தனங்கள், அஞ்ஞான வழக்கங்கள் மற்றும் உங்களிலிருக்கின்ற எல்லா அவிசுவாசமும் எடுத்து வெளியே போடுங்கள். ஒரு சிறு அவிசுவாசத்தை நீங்கள் ஒவ்வொரு முறையும் எடுத்துப் போடும் போது தேவன் நேராக உள்ளே வருகின்றார், கட்டுக்குள் எடுத்துக் கொள்கின்றார். அவிசுவாசத்தை வெளியே எடுத்துப் போடுங்கள்... 31அவர் யோசுவாவிடம், “உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் எல்லா இடத்தையும் நான் உங்களுக்கு கொடுப்பேன்” என்று கூறினார். ஆகவே, இன்றிரவு நாம் ராஜ்யத்துக்குள்ளாக, தேவனுடைய ராஜ்யத்துக்குள்ளாக செல்கையில், எல்லா பெலிஸ்திய அவிசுவாசிகளை, எமோரியரை அமெலேக்கியரை மற்றும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் நமக்குள்ளிருந்து வெளியே தூக்கி வீசியெறிந்து, நாம் அதை சுதந்தரித்துக் கொள்வோம். ஆமென். அது எனக்கு பிடிக்கும். “அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது” என்றார்கள். “எமோரியரே, எங்களை விட்டு வெளியே போங்கள். நாங்கள் எங்கள் கால் தடத்தை இங்கே வைத்துள்ளோம். நாங்கள் இந்த இடத்தை எடுத்துக் கொண்டோம்”. “தரிசனங்கள் காண்பது என்பதான ஒன்று இல்லவே இல்லை” அமெலேக்கியனே, அங்கிருந்து வெளியேறு. இதோ நான் வந்து கொண்டிருக்கிறேன் உங்களுக்குப் புரிகின்றதா, நீங்கள் உந்தித் தள்ளி கொண்டு செல்கிறீர்கள். அந்த சிறிய பொத்தான் உள்ளே வந்து உங்களிலுள்ள எல்லா நாளங்களையும் தம் கட்டுக்குள் எடுத்துக் கொள்கின்றது. தன்னுடைய பிரசன்னத்தை விஸ்தாரப்படுத்துகிறது. தேவன் உங்கள் மூலமாக, உங்களுக்குள்ளாக, உங்களைச் சுற்றிலும் கிரியை செய்கின்றார். 32எலியா அந்த மரித்த குழந்தையின் சரீரத்தின் மேல் தன் சரீரத்தை அதன் மேல் வைத்த போது அக்குழந்தை உயிரடைந்ததைக் குறித்து எந்த ஒரு வியப்பும் அடையத் தேவையில்லை . அது தேவன் மனிதனுக்குள் இருப்பதாகும். தேவன் அந்த மனிதனின் சரீரத்தை தம் கட்டுக்குள் எடுத்துக் கொண்டார். அவன் அபிஷேகிக்கப்பட்டவனாக இருந்தான். அவன் அப்படியாக இருந்தான் என்று இயேசு கூறினார். பழைய ஏற்பாட்டிலுள்ள தேவனுடைய தீர்க்கதரிசி ஒவ்வொருவரும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் தாமே சிறிய நிலையிலான வெளிச்சம், ஒளியாக இருந்தனர். இயேசுவோ மேசியாவாக இருந்து தேவத்துவத்தின் முழமையாக இருந்தார். அவர்களோ சிறிய அளவிலான மேசியாக்களாக இருந்தனர். சிறிய நிலையிலான மேசியாக்களாக இருந்தனர். ஏனென்றால், இயேசு எந்த அபிஷேகத்தினால் அபிஷேகிக்கப்பட்டிருந்தாரோ அந்த அதே அபிஷேகத்தினால் அவர்களும் கூட அபிஷேகிக்கப்பட்டிருந்தனர். ஆனால், இயேசு மாத்திரம் அதின் முழுமையைக் கொண்டிருந்தார். ஆகவே, இன்று பரிசுத்த ஆவியின் உண்மையான அபிஷேகத்தைப் பெற்றிருக்கும் ஒவ்வொரு மனிதனும், தாம் புறப்பட்டுச் சென்று நலமானவைகளைச் செய்து வியாதியஸ் தரை சுகப்படுத்தின நசரேயனாகிய இயேசு கொண்டிருந்த அந்த அதே அபிஷேகத்தினால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறான். ஓ என்னே, அவர் இன்றைக்கும் ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று அறிவது எனக்கு நலமான உணர்ச்சியை அளிக்கின்றது. ஒரு மனிதனைக் குறித்து ஏதோ ஒன்று இருக்கின்றது. அவன் ஒரு தேவன் ஆவான். ஒரு தேவனாக இருக்கும்படிக்கே அவன் உண்டாக்கப் பட்டிருக்கிறான். அவன் இங்கே பூமியில் வைக்கப்பட்டதற்கான நோக்கமானது ஒரு தேவனாக இருக்கும்படியாகத்தான், பூமியின் மீது உள்ள ஒவ்வொன்றின் மீதும் ஆளுகையின் உரிமையைக் கொண்டிருப்பதுதான். ஓ என்னே, இப்பொழுது இது உங்களை தடுமாற்றம் அடையச் செய்ய இடம் கொடுக்காதீர்கள். ஏனென்றால் இங்கே நான் இன்னும் சில வேதவாக்கியங்களை வைத்திருக்கிறேன். பாருங்கள்? 33இங்கே அன்றொரு இரவு ஒரு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் மனோதத்துவ முறையில் நம்பிக்கை வைத்தல் என்பதைச் சார்ந்த ஒரு மனிதன் ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்து வைத்து தன்னுடைய முழு சிந்தையையும் ஒருமைப்படுத்தி அந்த தண்ணீர் நிறைந்த டம்பளரின் மேல் செலுத்தினான். அப்படி அவன் செய்த போது அந்த டம்பளர் வெடித்து சிதறியது. தன் சிந்தையை ஒருமுகப்படுத்தி அதைச் செய்தான். அந்த தண்ணீர் குவளையை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த நிகழ்ச்சியை நான் பார்த்தேன். அந்த கண்ணாடி குவளையில் அப்படியே வெடிப்புகள் தோன்ற ஆரம்பித்தது. அதில் இருந்த தண்ணீர் வெளியே ஊற்ற ஆரம்பித்தது. வெறுமனே மனதை ஒருமுகப்படுத்தி செய்தான். அவ்வளவுதான். ஏன்? அது அவனுடைய நரம்பு சத்தாகும். அப்படித்தான் அவன் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவனாலேயே அதைச் செய்யமுடியும் என்றால் - தன்னுடைய மனதை ஒருமைப்படுத்தி செலுத்தின கவனத்தைக் கொண்டே அந்த கண்ணாடி குவளையை உடைக்க முடிந்ததென்றால், ஒரு பாவியாக அவன் இருந்தும் அப்படியாக அவனால் செய்ய முடிந்ததென்றால், அப்படியாக அவனால் செய்ய முடிகிறதென்றால், அது காண்பிப்பது என்னவென்றால் அந்த மனிதனில் ஏதோ உண்டாக்கப்பட்டுள்ளது என்பதேயாகும். அவன் விழுந்து போன தாறுமாறான நிலையில் இருக்கின்றான். ஆனால், அந்த மனிதன் மாத்திரம் தேவனிடமாக திரும்பி வருவானானால், தேவன் அவனுக்குள்ளாக செல்ல அவன் அனுமதிப்பான் என்றால், என்னே அந்த வல்லமையைக் கொண்டு தேவனுடைய ராஜ்யத்தின் வல்லமையை கட்டவிழ்த்து செயலில் விட... அவனிடம், மின்சாரத்தை சீராக எடுத்துச் செல்லும் மின்ஊடு கடத்தி உபகரணம் (conductor) போன்று, எந்த ஒரு காரியத்தையும் சீராக எடுத்துச் செல்லும் கடத்தியானது (conductor) இல்லை . அவன் ஒரு சிறு துப்பாக்கியைப் போன்று, அவன் எல்லா இடத்திலும் சிதறிக் கொண்டிருக்கிறான். ஆனால், அந்த மனிதனுக்குள் இருக்கின்ற ஆவி தாமே மனமாற்றம் அடைந்து, அதினுள்ளாக கிறிஸ்து வைக்கப்படும் போது, அப்பொழுது அவன் காரியங்களை சீராக எடுத்துச் செல்லும் ஒரு கடத்தியை பெறுகிறான்... கடத்தி என்பது அதினுடாக சக்தியை எடுத்துச் செல்லும் ஒரு வயர், கம்பியாகும். ஆமென். ஆகவே, தேவனுடைய வார்த்தையினுடையதாகிய கடத்தியில் அதைப்போன்ற விசுவாசத்தைக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதனை எடுங்கள், அவன் மரித்தோரை உயிரோடே எழுப்புவான், குஷ்டரோகிகளை சுகப்படுத்துவான், பிசாசுகளை துரத்துவான். ஆமென். அவன் தேவனைப் போலவே உருவாக்கப்பட்டு உண்டாக்கப்பட்டிருக்கிறான். அவன் தேவனைப் போலவே காணப்படுகிறான். நிச்சயமாக அப்படித்தான், அதன் காரணமாகத்தான் தேவன் மனிதனாக இருந்தார், மனிதன் தேவனாக இருந்தான். ஆகவே, இதுதான் அவரிலிருந்து தோன்றின வர்கள்; அது மனிதன் ஆகும். தேவன் ஒரு மனிதனை தம் கட்டுக்குள் எடுத்துக் கொள்ள முயலுகின்றார், மனிதனை தம்முடைய கரத்துக்குள் எடுத்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். 34இப்பொழுது, மின் ஊடு கடத்திகள் (conductors) என்பது... இப்பொழுது எல்லா வேதாகம கல்லூரி காரியங்களும் சரியானதொரு கடத்தி உபகரணம் (conductor) அல்ல என்பது உங்களுக்கு தெரியும். அதிலிருக்கும் மின்சாரம் பாயாமல் தடுக்கிற மின்சார கம்பியில் சுற்றுப்படும் ஒட்டு நாடாக்கள் (insulator) போன்று வேதாகம கல்வி முறைகள் மிக அதிகமாக இருக்கின்றது. நிறைய சபைகள் “அற்புதங்களின் நாட்கள் கடந்த காலத்திற்கான ஒன்று, தெய்வீக சுகமளித்தல் என்கின்ற காரியமானது இல்லவே இல்லை, பிசாசுகள்தான் அந்நிய பாஷையில் பேசும்” கூறுகின்றன. இப்பொழுது, அது மின்சாரம் பாயாமல் தடுக்கும் ஒரு ஒட்டு நாடா, பட்டை (insulator) ஆகும். அதைப் போன்ற ஒன்று உங்களுக்கு வேண்டவே வேண்டாம். அதிலிருந்து விலகிச் செல்லுங்கள். வார்த்தைக்கு திரும்பி வாருங்கள் தேவனுடைய வார்த்தை தான் மின்சக்தி கடத்தி (conductor) ஆகும். தேவனுடைய வார்த்தையில் விசுவாசம் கொள்ளும் ஒரு மனிதன், தேவனுடைய வார்த்தையைக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் அதன் மேல் நடக்கும் போது இங்கே சுற்றிலும் இருக்கின்ற இந்த கட்டடங்கள் எல்லாவற்றைக் காட்டிலும் உயர நிற்கின்றான். வார்த்தைதான் எஜமான் ஆகும். அதுதான் மனிதனை சீராக நடத்துகின்றது. அது ஆவியை சீராக பாயும்படிக்குச் செய்கின்றது. எங்கே ஒன்று... ஒரு மகத்தான பெரிய விசுவாசத்தைக் கொண்டிருக்கும்படியாகவே ஒரு மனிதன் உண்டாக்கப்பட்டிருக்கிறான். அதைச் செய்வது... ?... சில காலத்திற்கு முன்னர் நான் “ஜீவனுக்காக தாகம் கொள்ளுதல்” என்பதில் பேரில் இந்த கூடாரத்தில் பிரசங்கித்திருக்கிறேன். ஒரு பெண் வெளியே சென்று அவளை ராக் அண்ட் ரோல் இசை நடனத்தை ஆட வைப்பது எது? ஒரு பையன், டீன் ஏஜ் வாலிபப் பையன், சிறு பையனை அவ்விதம் செய்ய வைப்பது எது? அவர்கள் மாத்திரம் அல்ல தாத்தா பாட்டியும் கூட அதைச் செய்யும்படிக்கு தூண்டுவது எது? எதற்காக அதை அவர்கள் செய்கிறார்கள்? அவர்கள் அங்கே செல்லும்படிக்கு செய்வது என்னவாயிருக்கிறது? அவர்கள் செய்வது போலவே செய்யும்படிக்கு மக்கள் விருப்பம் கொள்வதற்கு ஏவுவது என்ன? ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒன்றுக்காக தாகம் கொள்ளவே அவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும்... அவர்கள் தாகம் கொள்வதற்கு உண்டாக்கப்பட்டுள்ளனர். ஆனால், தேவன் பேரில் தாகம் கொள்ள வேண்டும். ஆனால், அவர்களோ பிசாசு மகிழ்ச்சியானது என்று அழைப்பவைகளை அவன் கொண்டு வந்து அப்படியே அவர்கள் முன்னே கொட்டி அடுக்கி வைக்கும்படி செய்து பரிசுத்த ஆவியானவரை அப்படியே அடக்கிப் போட அவர்கள் முயற்சிக்கின்றனர். தேவன் வந்து உங்களை முழு கட்டுக்குள் எடுத்துக் கொள்ளும் வரைக்குமாக உங்களால் ஒருக்காலும் திருப்தி கொள்ள, திருப்தி கொள்ளவே முடியாது. நீங்கள் நடனமாடலாம், மது அருந்தலாம். விபச்சாரம் செய்யலாம். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனாலும் ஒரு நாளிலே நீங்கள் நரகத்திலே தலைவலியோடே எழுந்திருப்பீர்கள். நீங்கள் அதைச் செய்யும் காரணம் என்னவென்றால் நீங்கள் தேவனுடைய சாயலிலே உண்டாக்கப்பட்ட படியினாலே நீங்கள் தேவன் பேரில் தாகம் கொள்ள ஏதுவாகின்றது. தேவன் உள்ளே வந்து இருக்க விரும்புகிறார். தேவன் தம்முடைய வார்த்தையானது உங்களுக்கு உள்ளே வரும்படிக்கு அனுமதிக்கப்பட்டு அதை ஒரு மின்சக்தி கடத்தியாக (conductor) உபயோகிக்க விரும்புகிறார். - “தேவன் அவ்விதம் கூறினார்” ஆபிரகாமைப் போல... “நீ ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ளப்போகின்றாய் என்று தேவன் கூறியுள்ளார்” “எப்படி உனக்கு குழந்தை பிறக்கப் போகின்றது?” “அப்படியாகும் என்று தேவன் கூறினார்” “உனக்கு நூறு வயதாகி விட்டதே, எப்படி உன்னால் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்ள முடியும்?” “தேவன் அப்படியாகக் கூறியுள்ளார்”. அவன் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தான். ஆமென். அவன் அபிஷேகம் பண்ணப் பட்டிருந்தான். அவன் வார்த்தையைக் கொண்டிருந்தான். அந்த வார்த்தையானது அவனுக்கு அபிஷேகிக்கப்பட்டிருந்தது. அவனை அந்த குழந்தையிடம் வழி நடத்தின ஒரு கடத்தியாக (conductor) அது இருந்தது. 35இன்றிரவு எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் அந்த அதே தேவனுடைய வார்த்தையை எடுத்து... “அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.” அந்த அபிஷேகம், அந்த மேசியா உங்கள் மேல் வருவாராக; அந்த மின்சக்தி கடத்தியானது (conductor) தாமே உங்களை நேராக உங்கள் சுகமளிப்புக்கு வழி நடத்துவார். அது உங்களை இரட்சிப்புக்கு வழி நடத்தும். ஓ, நான் அதை அப்படியே நேசிக்கின்றேன். அதுவே அந்த காரியத்தைச் செய்கின்றது, ஏனென்றால் நீங்கள் தாகம் கொள்ளும்படிக்கே உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவனுக்காகவே உண்டாக்கப்பட்டிருக்கிறீர்கள். பிசாசு உங்களை தாறுமாறாக்க முயற்சிக்கின்றான். அங்கே நீங்கள் மிகவும் சந்தோஷமான தருணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கும்படிக்கு அவன் செய்வான். அவன் செய்தது போல உங்களை குருடாகவே இருக்கும்படிக்குச் செய்வான். யூதர்களுக்கு செய்தது போல, நீங்கள் வேறுபிரிக்கின்ற கோட்டை கடக்கும் நேரம் வரைக்குமாக அப்படியாகச் செய்வான். அதற்குப் பிறகு உங்களுக்கு அழிவுதான். இன்றைக்கு இந்த தேசம் அந்த வித நிலையில் தான் இருக்கின்றது, இந்த தேசம் மாத்திரம் அல்ல. ஆனால், மற்றவைகளும் கூட. உலகம் அதை விசுவாசிக்காது. வேதாகமம் 2 தீமோத்தேயுவில், கடைசி காலத்தில் துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிரமல் சுகபோகப்பிரியராயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், சிறிய அளவிலான மேசியாக்களாக இருப்பவரைப் பகைக்கிறவர்களாயும்; துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரிய ராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்தவர்களாயும் இருப்பார்கள். 36நீங்கள் ஒருபோதும் இந்தவிதமான பெரிய, மிக உயர்ந்த சீரியதான ஒரு சுவிசேஷத்தை நோக்கிப் பார்க்காதீர்கள். அதனுடன் எந்த ஒரு காரியத்தையும் செய்யாதீர்கள். அப்படியான ஒன்று தேவன் கிரியை செய்கின்ற வழியாக எப்போதுமே இல்லை. அவர் தமக்கு சொந்தமானதிலே வந்தார். அவருக்கு சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை . பாருங்கள்? அவர் சிறியவராக இருந்தார். அவரிடம்.... என்ன, அவருடைய வாழ்க்கையை ஏறக்குறைய அங்கே பாலஸ்தீனாவில் தான் வாழ்ந்தார், அவர் அங்கே இருந்தார் என்று எண்பது சதவீதம் மக்களுக்கு தெரியவில்லை என்றே நான் கூறுவேன். ஆகவே, அவர் சபைக்கென அனுப்பப்பட்டார். தாம் பெற்றுக் கொள்ளப்போகின்ற மக்களிடமாக அவர் அனுப்பப்பட்டார். அவர் தமது சொந்தமானதை அறிந்திருந்தார். அவருக்கு சொந்தமானவர்கள் அவரை அறிந்திருந்தனர். “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்திருக்கின்றன”. ஷ்ரீவ்போர்ட் நகரமே, அது உன் மேல் கடந்து சென்று விடும்படிக்கு விட்டு விடாதே. தயவு செய்து அப்படி செய்யாதே. அதை அப்படியே பற்றிக் கொண்டிரு. “என் ஆடுகள் என் சத்தத்தை என் வார்த்தையினாலே அறிந்திருக்கின்றன. என் வார்த்தை போதிக்கப்பட்டு நான் கூறின அதே காரியத்தை அது அறிவிக்காவிடில், அப்படியானால், அது தவறான கடத்தி (conductor) ஆகும். 37(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). மேசியாத்துவம். ஆகவே, கழுகானது அதைக் கொண்டிருக்கின்றது. அதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே, இப்பொழுது நாம் பார்ப்பது என்னவென்றால், மனிதனானவன்... அந்த பொருளை நான் முடிக்கும் முன்பாக... மனிதனானவன், அவன் எப்படிப்பட்டவனாக இருக்கின்றான்? அவன் தேவனைப் போலவே கையைக் கொண்டவனாக இருக்கின்றான். தேவனைப் போன்றே கண்களைக் கொண்டவனாக இருக்கின்றான். தேவனைப் போலவே காதுகளைக் கொண்டிருக்கின்றான். தேவனைப் போன்றே சரீரத்தைக் கொண்டவனாக இருக்கின்றான். அவன் தேவனைப் போலவே உருவாக்கப்பட்டு உண்டாக்கப்பட்டிருக்கின்றான். அவனுக்கு ஒரு பூமியும் அதன் மேல் ஆளுகையும் அவனுக்கு அளிக்கப்பட்டது. பூமியை ஆளும்படிக்கு அவன் ஒரு தேவனாக, ஒரு சிறிய அளவிலான தேவனாக உண்டாக்கப்பட்டான். அண்டசராசரங் களையும் மற்றும் எல்லாவற்றையும் தேவன் ஆளுகை செய்கின்றார். ஆனால், மனிதனுக்கோ பூமி கொடுக்கப்பட்டது. பூமியை ஆளும்படிக்கு அது கொடுக்கப்பட்டது. அவன் ஒரு சிறிய அளவிலான மேசியாவாக (Messiahette) இருந்தான். இன்றிரவு அவன் தேவனிடமாக திரும்ப வருவானானால் அப்படியாகத்தான் அவன் இருக்கின்றான். அவன் ஒரு சிறிய அளவிலான மேசியாவாக, சிறிய மேசியா ஆவான். அவன் மாத்திரம்... “மேசியா” என்றால் “அபிஷேகிக்கப்பட்ட ஒருவன்” என்றால், நீங்கள் யாராக இருக்கின்றீர்கள்? அது முற்றிலும் சரியாகும்; ஒரு சிறிய அளவிலான மேசியா. நாம் இன்னுமாக அதைக் குறித்து வார்த்தைக்காக வேதவசனங்களை ஆழமாக பார்க்கும் வரைக்குமாக நாம் அப்படியாக அதை அழைப்போமாக. சரி. 38இதைக் குறித்து நீங்கள் எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா? உங்களை ஒன்று நான் கேட்கட்டும். என்னை ஒரு நிமிடத்திற்கு சற்று நோக்கிப் பாருங்கள். இது என் கரமாகும்; இது என் விரலாகும். இது என் காதாகும்; இது என் மூக்காகும். ஆனால், நான் யாராக இருக்கிறேன்? அது நான் அல்ல. அது எனக்கு சொந்தமாயிருக்கின்ற ஒன்றாகும். பாருங்கள்? இது என் கரமாகும், அந்த கரத்திற்கு சொந்தக்காரனான நான் யார்? பாருங்கள்? இது நான் வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒரு வீடு மாத்திரமே. எந்த விதமான ஒரு... சரி, “நான் (me)” என்று அழைக்கப்படுகின்ற ஏதோ ஒன்றானது இருக்க வேண்டியதாக உள்ளது. “நான்” என்பதான ஒன்று எங்கோ இருக்க வேண்டியதாயுள்ளது. ஏனென்றால், இது என்னுடையதாகும். உங்களால் அதைக் காண முடிகின்றதா? “நான்” என்பதானது யாரோ ஒருவராக இருக்கின்றது. ஏனென்றால் நான் ஒன்றை சொந்தமாகக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஒரு கரம் இருக்கின்றது. அது என்னுடையதாகும். நல்லது, “நான்” என்பதாயிருக்கின்ற அது யாருடையதாயிருக்கிறது? அது உங்களுடைய ஆவியாகும். சரி, நீங்கள் எந்த விதமான ஆவியைக் கொண்டிருக்கிறீர்களோ அதைப் பொறுத்து தான் அது இருக்கின்றது. உன்னுடைய அவயங்களை யாருக்கு கீழ்ப்படுத்துகிறீர்களோ, அதனுடைய வேலைக்காரனாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள். 39ஆகவே, இப்பொழுது கவனியுங்கள். நீங்கள் ஐம்புலத்தொடர்பு இல்லாமலே தொலைவில் இருப்பவரின் உள்ளத்தை மன ஆற்றலால் இயக்கும் திறமையைக் கொண்டு, ஒரு மனதின் காரியத்தைக் கொண்டே, நீங்கள் மனிதனாக இருப்பதால் நீங்கள் புறம்பே கூட தள்ள முடிகின்ற ஒரு குறிப்பிட்ட சக்தியைக் கொண்டே, காணகூடாத ஒரு மனவலிமையைக் கொண்டே ஒரு தண்ணீர் குவளையை உடைக்க முடியுமானால்... தண்ணீர் நிறைந்த ஒரு கண்ணாடி கிளாசை வெடிக்கச் செய்யக் கூடுமானால்... அந்த விதமான ஒரு ஆவியானது - அது ஒரு தாறுமாறாக்கப்பட்ட மீளா தண்டனைக்குரிய கடும் வெறுப்புக்குரிய மானிட ஆவியாகும். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சாயலின்படியாக உருவமைக்கப்பட்டுள்ளீர்கள். அப்படியானால் உங்களை உண்டாக்கி உருவமைத்த தேவனானவர் உங்களுக்குள்ளாக வந்து உங்களை தம்முடைய கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் அனுமதிப்பீர்களானால் என்னவெல்லாம் உங்களால் செய்யக்கூடும்? ஆமென். தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தையும் உங்களால் நிறைவேறும்படிக்கு செய்ய முடியும். ஆம் ஐயா, நிறைவேறும் என்று தேவன் வாக்குரைத்திருக்கின்ற ஒவ்வொன்றும். சரி. தேவனுடைய வெகுமதி அவருடைய வார்த்தையாகும். தேவன் வாக்குத்தத்தம் செய்தார். ஒரு வெகுமதியை உண்டாக்கினார். ஒரு வெகுமதியை அனுப்பினார். நீங்கள் அந்த வெகுமதியை எடுக்கின்றீர்கள். பிறகு அவருடைய வார்த்தையுடனே எடுக்கின்றீர்கள். அதன் பிறகு உங்கள் மின்சக்தி கடத்தி conductor இதோ இருக்கின்றது. தேவனுடைய வெகுமதியைக் கொண்டு... தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் வெகுமதியை, வரத்தை உங்களுக்கு அளிப்பாரானால் (நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா?). நல்லது. அந்த வல்லமையுடன் சேர்த்து சக்தி வாய்ந்ததாய் அதை பிரயோகிக்க இருக்கின்றதான மின்சக்தி கடத்தி (conductor) தேவனுடைய வார்த்தையாகும். பரிசுத்த ஆவியானவர் என்னவெல்லாம் உங்களுக்கு வாக்குத்தத்தம் செய்துள்ளரோ, அதைத் தான் உங்களால் செய்ய முடியும். 40பாருங்கள் அதுதான் வார்த்தையை அளிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. வார்த்தை சரியாக புறப்பட்டு செல்லுகிறது. பரிசுத்த ஆவி வார்த்தையை பின் தொடர்கின்றது. வார்த்தை எங்கெல்லாம் பிரசங்கிக்கப் படுகின்றதோ... உங்கள் மேய்ப்பன் அதைப் பிரசங்கிப்பதைக் காணலாம். முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? “வியூஷ்” (சகோதரன் பிரன்ஹாம் ஒரு சத்தத்தை ஊதுகின்றார் - ஆசி) வியூஷ் என்ற சத்தத்துடன் பரிசுத்த ஆவி கட்டடத்தில் அசைவாடிச் செல்கின்றது. பாருங்கள்? அது சரி. அதுதான் சீராக காரியங்களைச் செய்யும் வார்த்தையின் கடத்தி (conductor) ஆகும். வார்த்தையானது செல்கின்றது... வார்த்தையானது ஆவியானவரின் மின்சக்தி கடத்தியாக (conductor) ஆக இருக்கின்றது. ஏனென்றால் வார்த்தையானது எங்கெல்லாம் பிரசங்கிக்கப்படுகிறதோ, ஆவியானவர் அதை பின் தொடருகிறார். அது எங்கெல்லாம் செல்கின்றதோ, என்ன, வார்த்தையை ஆவியானவர் பின் தொடர்கிறார். ஓ, அது எனக்கு பிடிக்கும். திடமான வேதாகம போதித்தலும் பரிசுத்த ஆவியானவர் திரும்ப வந்து அந்த வேதாகம போதித்தலை உறுதிபடுத்துதலும் எனக்கு பிடிக்கும். பரிசுத்த ஆவி அதை உறுதிபடுத்தவில்லை என்றால், அப்படியானால் உங்கள் வயர் இணைப்புகளை குறுக்கும் நெடுக்குமாக உள்ளது என்பதாகும். ஓரிடத்தில் உங்களுக்கு ஒரு நிலப்பகுதி இருக்கிறது. ஆம், ஐயா. நீங்கள் தாமே அந்த வார்த்தையை மின்சாரத்தை முழு பலத்துடனே, ஓட்டத்துடனே செலுத்துகின்ற அந்த பெரிதான ஒன்றான மின் ஆக்கப் பொறியுடன் (dynamo) உடன் இணைக்க மாத்திரம் செய்வீர்களானால், அவர் தாமே - அவர் தாமே சிறு மின் கம்பியில், வயரில் முழு மின்சாரம் பலமாக பாயும்படிக்குச் செய்வார். அப்பொழுது அது உங்களுக்கு காரியங்களைச் செய்யும். 41யோவான் ஸ்நானகன் புறப்பட்டு காட்சியில் வந்த போது, அவன் ஒரு அவன் - அவன் வார்த்தையின் பாகமாக இருந்தான். அவன் ஒரு சிறிய அளவிலான மேசியாவாக இருந்தான். அவன் வார்த்தையினாலே தேவனால் நியமிக்கப்பட்ட ஒருவனாயிருந்தான். உலகத்துக்கு வந்த அவன் தேவனுடைய ஒரு வெகுமதியாவான். நீங்கள் அதை விசுவாசிக் கிறீர்களா? வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறான் என்று ஏசாயா 40 கூறுகிறது. அவன் வந்தான், வனாந்திரத்தில் சத்தமிட்டுக் கூப்பிடும்படியாக தன்னுடைய ஸ்தானத்தில் நிலைபாடு எடுத்து அங்கே நின்றான். பாருங்கள். அவன் அதைக் கொண்டு எந்த ஒரு பயமும் இல்லாமல் சரியாக தைரியமாக நின்றான். ஆமென். ஆம், ஐயா. சகோதரனே, அவன் எவ்வளவு மகத்தானவன் என்று இப்பொழுது பாருங்கள். இப்பொழுது, யோவானின் வருகையைக் குறித்து தேவன் பேசினார். மலைகள் எல்லாம் ஆட்டுக்கடாக்களைப் போல துள்ளினது. இலைகள் தங்கள் கரங்களை தட்டின. உயர்ந்த மேடுகள் தாழ்த்தப்பட்டன. பள்ளங்கள் உயர்த்தப்பட்டன என்று அவர் கூறினார். அதற்கான வேதாகம கல்லூரி வியாக்கியானமானது “பரிசுத்த சகோதரரே, ஒரு நாளிலே தேவன் பரலோகத்தின் நடைபாதையை இழுத்து, யாக்கோபின் ஏணியை கீழே இறக்குவார். அப்போது ஆகாயத்திலிருந்து ஒரு வல்லமையுள்ள தீர்க்கதரிசி இறங்கி கீழே வருவார். தூதர்கள் புடைசூழ அவர் பூமிக்கு நடந்து வருவார். அவர் நேராக இங்கே இப்பொழுது ஆலயம் இருக்கின்ற இடத்தின் முற்றத்தில் இறங்குவார். காய்பா பிரதான ஆசாரியனாக இருப்பானானால், அவர் ”கனம் பொருந்திய ஐயா அவர்களே, நான் கீழே வந்துள்ளேன்“ என்று அவனிடம் கூறுவார் என்றவாறு இருந்திருக்கும் என்று நான் கற்பனை செய்து பார்க்கிறேன். 42ஓ, என்னே . ஆனால் சம்பவித்தது என்ன? அவன் அதோ ஒரு வயதான முகத்தைக் கொண்டவனாக வனாந்தரத்திலிருந்து, ஆட்டுத் தோலை தன் மீது போர்த்தினவனாக வந்த போது, ஒருக்கால் மூன்று மாதங்களாக குளித்திருக்க மாட்டான். அங்கே நடந்து வந்து கொண்டிருந்தான். முழங்காலளவு சேற்றிலே நின்று, “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கம் பண்ணினான். அப்பொழுது தான் மலைகள் ஆட்டுக்கடாக்களைப் போன்று துள்ளின. இலைகள் ஒன்றையொன்று கரங்களை தட்டின (clapped) சமயம் அதுதான். அப்பொழுது தான் உயர்ந்த மேடுகள் தாழ்த்தப்பட்டன. தாழ்ந்த இடங்கள் உயர்த்தப்பட்டன. மனிதன் எதை மகத்தானது என்று அழைக்கின்றானோ, அதை தேவன் புத்தியீனம் என்று அழைக்கின்றார். இன்று நம்மிடையே இருக்கின்ற மிகப் பெரிய அளவிலான சுவிசேஷ பணியை தேவன் முட்டாள்தனம் என்று அழைப்பாரென்றால் அதைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை - இன்றைய நவீன சுவிசேஷப்பணிகள், யாரோ ஒருவருடையதை, ஏதோ ஒன்றை பெரிதான அலங்காரம் செய்து காண்பித்தல், விறைப்பான ஆச்சாரங்கள் மற்றும் எல்லா காரியங்களையும் செய்தல். அதைக் குறித்து தேவன் என்ன நினைக்கின்றாரோ! என்ன, அவர்... அது ஒருபோதும்... 43இந்த சுவிசேஷமானது உலகத்தை அசைக்கப்போவதில்லை. அது உலகத்தை அசைக்கின்ற ஒன்றல்ல. அது சபையை அசைக்கின்ற ஒன்றாகும்; அது சபையை அசைக்கின்றது. குலுக்குகின்றது. சரியாக இப்பொழுது கடந்த சில வருடங்களாக, சபையானது முன்பு எப்போதும் இல்லாத வகையில் குலுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது... உலகத்துக்கு அதைக் குறித்து ஒன்றுமே தெரியாது. சுவிசேஷம் உலகத்தை அசைப்பதற்கான ஒன்றல்ல. எப்படியாயினும் அவர்கள் மரித்துப் போய்விட்டனர். அங்கே இருக்கின்ற அந்த பழைய செத்த பிணங்களை உங்களால் அசைத்து குலுக்கி ஒன்று செய்து விட முடியாது. அவர்கள் இரட்டிப்பான விதத்தில் மரித்துக் கிடக்கின்றனர். வேரிலிருந்து பிடுங்கப்பட்டுள்ளனர். ஆகவே, உங்களால் எப்படி அவர்களை அசைத்து குலுக்கி எழுப்ப முடியும்? “நல்லது, நான் இன்னினதைச் சார்ந்தவர்...” “அப்படியா, நீ அப்படியே செய்து முன்னே போ, அதனோடே இரு” புரிகின்றதா? உங்களால் அதை அசைக்க முடியாது. “ஓ, என் பாட்டி இன்னிதைச் செய்தனர்” அது... உன் பாட்டி என்ன செய்திருந்தாலும், அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. தேவன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றார் என்று பாருங்கள். இதுதான் ஒளியாகும். இதில் நடவுங்கள். பாட்டி அவளுடைய நாட்களில் வாழ்ந்தாள். அது எல்லாம் சரிதான், ஆனால் உங்களால் அவளுடைய வாழ்க்கையின்படியே அவளுடைய ஜீவியத்தின் சாராம்சத்திலே வாழ முடியாது. அப்படியானால் சகோதரியே, உங்கள் பாட்டி எப்படி ஆடை உடுத்தியிருந்தார்களோ அதே போல ஏன் உங்களால் உடுத்த முடியவில்லை . ஒருக்கால் நான் கூறுவது சிறிது கடினமாக தென்படலாம். ஆனால்... நீங்களோ அவளுடைய சபையை தெரிந்தெடுத்துக் கொள்ள முயற்சிக்கின்றீர்கள். ஆனால், அவள் ஆடை உடுத்தியிருந்தவாறே உங்களால் உடுத்திக் கொள்ள விருப்பமில்லை. 44தேவனுடைய எல்லா உண்மையான தீர்க்கதரிசிகளும் பாவத்திற்கு எதிராக கூச்சலிடுவார்கள். அபிஷேகிக்கப்பட்ட எல்லாரும் அதைச் செய்வார்கள். அது உண்மை. அவர்கள் செய்வார்கள். ஒவ்வொரு வருக்கும் தேவன் தம்முடைய வார்த்தையை காத்துக் கொள்ளுகிறார். அவர் எப்போதுமே செய்கிறார். தேவன் உங்களை... அது என்னவென்றால் நீங்கள் பெந்தெகொஸ்தே காசோலை தீர்வகம் (Pentecostal clearing house) மூலமாக நீங்கள் சென்றால் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்குத் தெரியும், நீங்கள் ஒரு வங்கி காசோலையை எழுதும் போது, அந்த காசோலை வங்கியின் தீர்வகத்திற்கு சென்று வரும் வரை அவர்கள் அந்த காசோலைக்கான பணத்தை உங்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அது காசோலை தீர்வகத்தின் மூலமாகச் சென்று வந்தால்தான் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அப்பொழுது அந்த காசோலைக்கான பணம் பரிவர்த்தனை செய்யப்படும். ஆகவே, நீங்கள் மனந்திரும்பினீர்கள் என்று கூறும்போது, அப்பொழுது நீங்கள் தேவனின் பெந்தெகொஸ்தே தீர் வகத்திற்கு செல்ல நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்கள். அப்பொழுது அவர் வாக்குத்ததம் செய்திருக்கின்ற ஒவ்வொரு வரத்தையும் தேவன் உங்களுக்கு பரிவர்த்தனை செய்வார். ஆமென். அப்போஸ்தலர் 2:38ஐ ஒரு முறை முயற்சி செய்து பாருங்களேன். அதுதான் அவருடைய காசோலைத் தீர்வகம் ஆகும். உங்களுக்குத் தெரியுமா? பவுல் அதை அப்போஸ்தலர் 19ல் குறிப்பிடுகிறான். அவன் மக்களை நோக்கி நீங்கள் இன்னுமாக தீர்வகத்தினூடாக செல்லவில்லை என்று கூறுகிறான். ஆமாம். அவன் கூறினது... ஓ, அவர்கள் மகத்தான ஒரு சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஆனால், பவுலோ “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான். “அப்படியான ஒன்று இருக்கின்றதா என்று எங்களுக்கு தெரியாது” என்றார்கள். “அப்படியானால் நீங்கள் எந்த விதத்தில் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “நாங்கள் எல்லாருமே ஞானஸ் நானம் பெற்றிருக்கிறோம்” என்றார்கள். “எந்த ஞானஸ்நானம்? எப்படி அதைப் பெற்றீர்கள்?” என்று கேட்டான். “யோவான் கொடுத்த ஞானஸ்நானம்” என்று கூறினார்கள். அதற்கு பவுல், “அது கிரியை செய்யாது. நீங்கள் வங்கி தீர்வகத்தினூடாக (clearing house) சென்று வர வேண்டும். இந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் கொண்டு உங்களுக்கு பரிவர்த்தனை செய்ய தேவன் தம்முடைய வங்கியை தயாராக வைத்திருக்கின்றார்.” 45பெந்தெகொஸ்தே நாளிலே பேதுரு “இந்த வாக்குத்த்தங்கள் எல்லாம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று கூறினான். அவர்கள் அப்போஸ்தலர் 2:38ன் தகுதியை பெற்றடைந்த போது, தேவன் காசோலையை அங்கீகரித்தார், அது தீர்வகத்திற்கு சென்றது, இதோ இப்போது அது திரும்ப வந்தது. அவர்கள் அந்நிய பாஷையில் பேசி தீர்க்கதரினம் உரைத்து தேவனை புகழ்ந்தார்கள். அப்பொழுது தேவன் .... ஒரு விசுவாசி தன்னுடைய பெயரை விசுவாசியென்னும் முறையில் கையொப்பமிட்டு அதை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தோடு தேவனின் பெந்தெகொஸ்தே வங்கித் தீர்வகத்திற்கு எடுத்துச் செல்லும் போது தேவன் ஒவ்வொரு வாக்குத்தத்தையும் மற்றும் எல்லாவற்றையும் பரிவர்த்தனை செய்வார். அவருடைய வங்கி நல்ல வங்கியாகும். அவர் வாக்குத்தத்தங்கள் உண்மையானவையாகும். 46இயேசுவின் நாமத்தினால ஒவ்வொன்றும் கையொப்பமிட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்டிருக்கின்ற ஒவ்வொன்றும். வேறு எந்த ஒரு வகையிலும் கையொப்பமிட்டிருந்தாலும் அது செல்லாது. அவருக்கு பட்டப்பெயர்கள் தெரியாது. அவர் அந்த நாமத்தை, பெயரை (name) மாத்திரமே அறிந்திருக்கின்றார். ஆமென். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக அது உள்ளது. ஆம் ஐயா, அவருடைய நாமத்தினால், பெயரினால் (Name) மாத்திரமே அவர்... அவர் “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ” என்று கூறியிருக்கின்றார். இப்பொழுது, அங்கே காசோலையிலே நான்கு அல்லது ஐந்து வித்தியாசமான பெயர்களை எழுதாதீர்கள். அதைக் குறித்து அவருக்கு ஒன்றுமே தெரியாது. காசோலையானது செல்லாததாக திரும்பி வந்துவிடும். நீங்கள் பொய்யான ஒரு அழைப்பை பெறுவீர்கள். ஆனால், தீர்வகத்தின் மூலமாக காசோலையை நீங்கள் பயன்படுத்துவீர்களானால்... அது தீர்வகத்தின் மூலமாக வந்ததா அல்லது இல்லையா என்று தேவன் உங்களுக்கு தெரியப்படுத்துவார். “நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்கு தரப்படும். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ (யோவான் 15) அது உங்களுக்கு அளிக்கப்படும்” சரியா. அப்பொழுது நீங்கள் அந்த அபிஷேகத்தை பெற்றுக் கொள்வீர்கள். அவர்கள் மேசியாக்களாக, சரியாக சொல்வோமானால் - சிறிய அளவிலான மேசியாக்களாக, குட்டி மேசியாக்களாவர். அவர் மேல் இருந்த அந்த அதே வரமானது... அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தார். அவர் வார்த்தையை நிறைவேற்ற வந்தபோது, அப்பொழுது தேவன்... அவர் மேசியாவாக இருந்தார். அவர் - அவர் பிறந்தபோது இயேசுவாக இருந்தார். ஆனால், அவருடைய ஞானஸ்நானத்திற்கு பிறகு பரிசுத்த ஆவி அவர் மீது வந்த போது, அவர் தேவனோடு அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தார். தேவன் அவருக்குள் இருந்தார். ஏனென்றால் அவர் வார்த்தையை நிறைவேற்ற வந்திருந்தார். 47நீங்கள் இந்த பீடத்தண்டை வரும்போது, “விருப்பமுள்ளவன், வரக்கடவன்” என்பதான அழைப்பின் பேரிலே தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றவே வருகிறீர்கள். “கர்த்தாவே, நீர் என் வயிற்றுவலியை குணமாக்கினால் நான் நினைப்பது என்னவென்றால் ஊழியம்...” என்று பாடிக்கொண்டே வராதீர்கள். அவ்விதமாக வர வேண்டாம். நீங்கள் வந்து நான் ஒரு கயவன் (rascal) என்று அவரிடம் கூறுங்கள். நான் நல்லவன் அல்லவே அல்ல என்றும், நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நிரப்பப்படவேண்டும் என்றும், நீங்கள் ஒருக்காலும் நல்லவனே அல்ல என்று அவரிடம் கூறுங்கள். நீங்கள் எதற்கும் பாத்திரம் அல்ல, மரிப்பதற்கும் பாதாளத்துக்கு செல்வதற்கு மாத்திரமே பாத்திரராயிருந்தீர்கள். ஆனால், அவர் நீங்கள் வாருங்கள் என்று அழைத்ததினாலே, “இதோ கர்த்தாவே நான் வருகிறேன். என் கரங்களில் ஒன்றுமே கொண்டு வருவதற்கு இல்லை, நான் அப்படியே உம்முடைய சிலுவையை பற்றிக் கொண்டு அதை அப்படியே பிடித்துக் கொள்கிறேன்” என்றீர்கள். உங்களுக்கு புரிகின்றதா? அப்பொழுது அவர் அதற்கு கனத்தை அளிக்கப்போகின்றார். அங்கே கீழே தண்ணீர் தொட்டி இருக்கின்றது. அவர் தம்முடைய வார்த்தையை பார்த்துக் கொள்கிறாரா என்று மாத்திரம் நீங்கள் பாருங்கள். அது அவருடைய வங்கி தீர்வகத்திற்கு செல்லும்போது அவர் எப்போதுமே அதைச் செய்கின்றார். ஆனால், அது கண்டிப்பாக தீர்வகத்திற்கு தான் வந்தாக வேண்டும். ஒரு மனிதன் இயேசுவை விசுவாசிக்கிறான் என்று கூறி, அவரை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது தேவன் அவனுக்கு ஒரு காசோலை புத்தகம் (Cheque Book) அளிக்கின்றார். அவனுக்கு என்ன தேவைப்படுகின்றதோ அதை அவன் அந்த காசோலையின் கீழே இயேசுவின் பெயரை, நாமத்தை அவன் கையெழுத்திடும்போது, வேறு எந்த ஒன்றையும் அந்த காசோலையில் எழுதக்கூடாது. ஏனென்றால் அது கிரியை செய்யாது. பாருங்கள்? நீங்கள் உண்மையான பெந்தெகொஸ்தே காசோலை தீர்வகத்தினூடாகத்தான் செல்ல வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். அப்படியாக அந்த காசோலையானது சென்று வருமானால் அப்பொழுது உங்கள் காசோலையானது அங்கீகரிக்கப்படுகின்றது. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றைக் கொண்டும் அவர் எப்பொழுதுமே தொகையை செலுத்திவிடுகின்றார். அவருடைய சிறிய அளவிலான மேசியாக்கள் தங்களுக்கு வேண்டிய காரியத்தை பெற்றுக் கொள்கிறார்கள். 48நாம் கடைசி நாட்களில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். முடிவு பெறுகின்ற காலமாக லவோதிக்கேயா சபை காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். லவோதிக்கேயா காலமானது இருண்ட காலங்களுக்கு பிறகு இருந்ததிலேயே மிகவும் காரிருள் சூழ்ந்திருக்கின்ற ஒரு சபைக்காலமாகும், அப்பொழுது இருந்ததைக் காட்டிலும் சரியாக இப்பொழுது இன்னும் அதிக அளவிலான மாய்மால காலமாகும். இந்த சபைக்காலத்தில் வெளிச்சமே, ஒளியே இல்லை. மாலை நேரம் முடிந்து இரவு பொழுது துவங்கும் நேரத்தில் காணப்படும் மங்கின வெளிச்சமானது மிகவும் வஞ்சிக்கின்ற ஒரு நேரமாகும். காரோட்டி பயணம் செய்பவர் எவருமே அதை அறிவர், அந்த மங்கின வெளிச்சம் ஒளியின் சமயத்தில் நீங்கள் காரின் வேகத்தை நீங்கள் குறைத்து ஓட்டினால் நல்லது. அது சரியா? இந்த மங்கின சாயங்கால ஒளிய ஒரு செய்தியாளனை நாம் பெற்றிருக்க வேண்டியவர்கள் இருக்கின்றோம். அது உங்களுக்கு தெரியுமா? தேவன் லவோதிகக சபைக் காலத்தில் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். முன்றொரு நாளிலே நான் அங்கே மேலே மலையில் வேதாகமத்தில் அதை வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கே நான் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் என்னை ஒரு குறிப்பிட்ட மரத்திற்கு அருகில் சென்று அங்கே நிற்கும்படிக்கு கூறினார். அவர் என்னிடம் பேசி விரும்பினார். அங்கே நான் அரை மணி நேரமாக நின்று கொண்டிருந்தேன். அவர் ஒன்றுமே பேசவில்லை. அப்பொழுது நான் அங்கே இருந்த அந்த ஓக் மரத்தின் கீழ் படுத்துக் கொண்டேன். அப்பொழுது நான், “கர்த்தாவே, இதைக் குறித்து நீங்கள் இங்கிருந்து ஒரு மைல் தூரத்திற்கு மேலே பேசினீர், இப்பொழுது இங்கே இந்த மலையின் மேல் வாரும் (அந்த இடத்தை நான் ஸ்போர்ட்ஸ்மென் ஹால்லோ (sportsman's hollow) என்று அதை அழைப்பதுண்டு) நீர் தாமே என்னிடம் பேசும்” என்றேன். அப்பொழுது அவர் அதை எனக்குக் காண்பித்தார். அவர் எனக்கு மல்கியா 4ஆம் அதிகாரத்தை திறந்து காண்பித்தார். அப்பொழுது நான் கூறினேன்... “இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும், அப்பொழுது அகங்காரிகள் யாவரும்...” (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், மல்கியா 4). அப்பொழுது அவர் “அது அகங்காரிகளை எரிக்கும், நீதிமான்கள் துன்மார்க்கரின் சாம்பலின் மேல் நடப்பார்கள்” என்று கூறினார். நல்லது அப்பொழுது... அவர் “இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்... அவன் பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும், பிதாக்களின் பிள்ளைகளை, பிள்ளைகளுடைய இருதயங்களை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” என்று கூறினார். 49அப்பொழுது நான் “அது சரியாக உள்ளது. நான் அதை விசுவாசிக்கிறேன்” என்று கூறினேன். சீஷர்கள் இயேசுவினிடத்தில் அதைக் குறித்து கேட்டபோது “சரி, அப்படியானால்...?... தாம் மேசியா என்று அவர் கூறினபோது அவர்கள் அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி, என்று கேட்டார்கள். அதற்கு இயேசு “ஆனாலும் எலியா வந்தாயிற்று. நீங்களோ அவனை அறியவில்லை ” என்று கூறினார். அவர் யோவான் ஸ்நானனைக் குறிதது தங்களுக்கு சொன்னார் என்று அப்பொழுது அவர்கள் அறிந்து கொண்டார்கள். எத்தனை பேர் அதைக் குறித்து பேசக் கேட்டிருக்கிறீர்கள்? சரி, ஆம், நீங்கள் எல்லாரும் வேதாகமத்தை வாசித்திருக்கிறீர்கள். யோவான் ஸ்நாகனன்.... ஆனால், நினைவில் கொள்ளுங்கள். கடைசி காலத்துக்கான எலியாவை குறித்து இயேசு பேசவில்லை, ஏனென்றால் உலகமானது எரிந்து போய் ஆயிரம் வருட அரசாட்சியானது ஆரம்பிக்கவில்லை. வேதாகமத்தை நன்றாக கவனித்துப் பாருங்கள். அது எதைக் குறித்து பேசுகின்றது என்று கவனியுங்கள். ஒரு நிமிடத்திற்கு மல்கியா4-ற்கு திருப்புங்கள். அதைக் கவனியுங்கள். அதைக் குறித்து முன்னர் எனக்கு தெரியாது. முதலாவதாக பரிசுத்த ஆவியானவர் வந்து அதை வெளிப்படுத்தினாலொழிய அதைக் குறித்து நான் பேச முயற்சி செய்வதில்லை . கவனியுங்கள், மல்கியா 4:5… இதோ கர்த்தருடைய பெரிதும்... நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன் (அவர் பூமியை எரிக்கப்போகின்ற அந்த பெரிய பயங்கரமுமான நாள்): ...... அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். 50கவனியுங்கள். முதல் முறையாக எலியா வந்தபோது, அவன் பிதாக்களுடைய இருதயங்களை, அந்த பழைய கோத்திரப் பிதாக்களுடையது (பாருங்கள்?), அங்கே இருந்த அந்த பழைமையான யூதர்களுடையதை, இயேசுவை ஏற்றுக்கொண்ட, வருகின்ற மேசியாவை விசுவாசித்த பிள்ளைகளுடைய இருதயத்திற்கு திருப்பினான். “பிதாக்களுடைய இருதயத்தை பிள்ளைகளிடத்திற்கும் (ஆங்கில வேதாகமத்தில் and என்ற கூட்டிடைச் சொல் (conjunction) உள்ளது - தமிழாக்கியோன்) மற்றும் (and) (அவர் இரண்டாவது முறை வரும்போதான வாக்கியத்தை இணைக்கின்ற கூட்டிடைச் சொல், and பிள்ளைகளுடைய இருதயத்தை பெந்தெகொஸ்தே பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்” அல்வாயா. உங்களுக்கு புரிகின்றதா. ஆகவே, அப்படியானால் சாயாங்கல வெளிச்சமானது அப்போஸ்தல நடபடிகளுக்கு (Acts) மறுபடியும் திரும்புவதைத் தவிர வேறு என்னவாக இருக்கும்? சரி. பூமியை சூளையைப் போல எரித்து நீதிமான்கள் அவர்களின் சாம்பலின் மேல் நடக்கப்போகின்ற அந்த நாள் வருகிறதற்கு முன்னே என்று அவர் கூறினார். ஓ சகோதரனே, வரப்போகின்ற ஒரு ஒளிக்காக, வெளிச்சத்திற்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். அது இங்கே இருக்கின்றது. ஆகவே, நினைவில் கொள்ளுங்கள். இந்த எலியா வரும்போது... அவனுடைய விவரணத்தை குறித்ததான சிலவற்றை நான் உங்களுக்கு அளிக்கப்போகிறேன். எலியா வரும்போது, அவன் தான் லவோதிக்கேயா சபைக் காலத்திற்கான செய்தியாளனாக இருக்கின்றான். எலியா... முன்னே வருகிறான் என்று நாம் காண்கிறோம்... நினைவில் கொள்ளுங்கள். இரதத்தின் மேல் ஏறிச்சென்ற அந்த எலியா மரணத்தை ருசி பார்க்கவேயில்லை. லவோதிக்கேயா சபைக் காலத்தின், பெந்தெகொஸ்தே காலத்தின் முடிவு பெறுகின்ற நாளிலே வருகின்ற இந்த மகத்தான செய்தியாளனின் செய்தியானது சபையை எடுத்துக் கொள்ளப்படுதலிலே கொண்டு செல்லப்போகின்ற செய்தியாக இருக்கும். முற்றிலுமாக சரி. அவனே எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றான். பிறகு சபையோடு எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு அவன் வருவான். 51ஆகவே, மறுபடியும் நினைவில் கொள்ளுங்கள்... இந்த மனிதனைக் குறித்து சில விளக்க விவரங்களை உங்களுக்கு நான் தருகிறேன். அவன் பெண்களை எதிர்ப்பவனாக இருப்பான். நிச்சயமாக அவன் அப்படி இருப்பான். கவனியுங்கள் - எலியா யாரை எதிர்த்தான் என்று பாருங்கள், யேசபேலை எதிர்த்தான். யோவான் யாரை எதிர்த்தான் - ஏரோதியாளை புரிகின்றதா? மற்றொரு காரியம், யோவான் ஸ்தாபனங்களுக்கு எதிராக மிக உறுதியுடன் நின்று எதிர்த்தான். எலியாவைப் பாருங்கள். யோவானைப் பாருங்கள். “ஆபிரகாம் எங்களுக்கு தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக் கொள்ள நினையாதிருங்கள், தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார்”. அவன் ஸ்தாபனங்களை வெறுப்பான். நல்லொழுக்கம் இல்லாத பெண்களை எதிர்ப்பான். அவன் வனாந்திரத்தில் இருக்கின்ற ஒருவனாக இருப்பான். அவன் வனாந்திரத்தில் இருந்து ஒரு செய்தியுடனே புறப்பட்டு வருவான். அவன் ஜனங்களில் இருதயத்தை... ஓ, இந்த கடைசி நாட்களிலே எலியாக்கள் என்று கூறிக்கொண்டு நூறு பேர்கள் இருந்தனர். அலெக்சாண்டர் டௌவி (Alexander Dowie), இன்னும் அநேகர் தாங்கள் தான் எலியா என்று கூறிக்கொண்டனர். இந்த நாளின் எலியா தாங்கள் என்று கூறிக்கொண்டனர். எலியாவோ மூல பெந்தெகொஸ்தே எபேசு சபைக்கு சென்று, அந்த அதே செய்தியை மேசியா அடையாளங்களுடனே மக்களக்கு கொண்டு வருவான். வேதாகமம் அவ்வாறு கூறுகின்றது. 52“ஒரு நாள் வரும், அது பகலுமல்ல இரவுமல்ல, ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்” என்று அவர் கூறினார். அது சரியா? இப்பொழுது கவனியுங்கள். சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது. இப்பொழுது இது... நீங்கள் “இது எப்படிப்பட்ட ஒரு நாளாக இருக்கிறதென்றால் .... நாங்கள் சுவிசேஷத்தின் நாளின் பிள்ளை - களாவோம்” என்று கூறுகிறீர்கள். இது பிள்ளைகளுக்கு இருளின் நாளாக இருந்து வருகின்றது, அப்படியாக இருக்கின்ற வேளையில் விடிவெள்ளி நட்சத்திரம் மாத்திரம் தான் வருகையை அறிவிக்கின்றது. எப்படியாக இயற்கையாக இருந்து வருகின்றதோ அதற்கு எதிர்மாறாக இப்பொழுது இருக்கின்றது. ஏனென்றால் அங்கே முன்பு தோன்றிய அந்த விடிவெள்ளி நடசத்திரமானது, சூரியனின் வருகையை அறிவிக்கின்ற ஒரு விடியற்காலத்து நட்சத்திரம் இருக்கின்றது. சூரியன் மறைவதையும் அறிவிக்கின்ற ஒரு நட்சத்திரமும் இருக்கின்றது. அந்த நட்சத்திரமானது அவரை அழைத்தபோது, இயற்கையான சூரியன் மறைந்து கொண்டிருந்தது. சுவிசேஷம் உள்ளே வந்து கொண்டிருந்தது. நாம் ஒளியின் பிள்ளைகள் ஆவோம், மேலும் நாம்... உலகமானது இப்பொழுது காரிருளில் இருக்கின்றது. இருந்ததிலேயே மிகவும் காரிருள் மிகுந்த ஒரு காலத்தினூடாக சபை சென்று கொண்டிருக்கின்றது - அது இரண்டு காலங்களினூடாக சென்று வந்தது. ஆனால், சாயங்கால நட்சத்திரமானது - ஒளி, வெளிச்சம் வருவதை அறிவிப்பது சாயங்கால நேர நட்சத்திரம் ஆகும். சபைக்கு வெளிச்சம், ஒளி அறிவிப்பது சாயங்கால நட்சத்திரம் ஆகும். சபையானது எப்போதுமே சிறு எண்ணிக்கையிலான ஒன்றாகவே இருந்து வந்திருக்கின்றது, மிகவும் சிறிய அளவிலானதாகவே இருந்து வந்துள்ளது, ஒரு சிறு குழுவாக மாத்திரம்தான் இருந்து வந்துள்ளது. ஆனால், முடிவாக நாளானது - தேவ எக்காளம் முழுங்கும். அப்போது நாளானது நித்தியமாக தோன்றி வரும். அந்த காலைப் பொழுதானது வந்து கொண்டிருக்கின்றது. அப்பொழுது கடைசி நாட்களில் இந்த மகத்தான தேவனுடைய ஆவியானது ஒருவரின் மீது வரும். அவர் இந்த செய்தியினை பகிரங்கமாக அறிவிப்பார். அது பிள்ளைகளுடைய இருதயங்களை பெந்தெகொஸ்தே பிதாக்களுக்கு திருப்பும். 53ஆகவே, அப்போஸ்தலரின் நடபடிகள் எப்படியாக எழுதப்பட்டது? அதை வாசிக்க ஆரம்பியுங்கள். நாம் நம்முடைய எல்லாவிதமான முட்டாள்தனமான காரியங்களைக் கொண்டு அதை எப்படியாக மாசுபடுத்திவிட்டோம் பாருங்கள். ஆனால், ஒரு நாளிலே ஒருவர் வருவார். முடிவு பெறும் வேளையில் ஒரு வெளிச்சம், ஒளி, சபைக்கும் முன்பாக வைக்கப்பட்டிருக்கின்ற இந்த திறந்த வாசல். இந்த நாட்களிலே அது வருகின்றதை நீங்கள் சற்று கவனித்துப் பார்த்து கொண்டிருக்க வேண்டும். எலியாவை தேவன் அனுப்புவார். இந்த பிரசங்க பீடத்தில் நான் நின்று கொண்டிருப்பது எவ்வளவு உறுதியோ அதே விதமாக நிச்சயமாக அது நடக்கும். அவர் அனுப்புவார். அந்த எலியா மக்களை உலுக்கி நேராக சரியாக மூல பெந்தெகொஸ்தே உபதேசத்துக்கு திரும்ப அனுப்புவான். இப்பொழுது, பெந்தெகொஸ்தேயிலிருந்து ஆரம்பிப்போம். அது எந்நிலையில் உள்ளது என்று சற்றுப் பாருங்கள். அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். அது கை குலுக்குதல் மாத்திரம் தான் என்றிருக்கிறதா என்று பாருங்கள். ஆகவே, அது சரியாக திரும்பி செல்லும். அங்கே மேலறையிலே பெந்கொஸ்தே நாளிலே பேதுரு பிரசங்கித்தபோது, அவர்கள் எல்லாரும் பரிசுத்த ஆவியில் நிரப்பப்பட்டு அந்நிய பாஷையில் பேசினார்கள். அப்பொழுது அங்கே இருந்த மனிதர் “இப்பொழுது அதை நாங்கள் பெற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டனர். அப்பொழுது பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” என்று கூறினான் அதுதான் மூல பெந்தெகொஸ்தே வெளிச்சமாகும். இப்பொழுது அது விடிவெள்ளி நட்சத்திரமாகும். அடுத்ததாக அந்த சாயங்கால நட்சத்திரமும் அந்த அதே ஒளியை மறுபடியுமாக பிரதிபலிக்க தான் இருக்கின்றது. வருகின்ற மேசியாவைக் குறித்து வனாந்திரத்தில் ஒரு சத்தத்தைக் கொண்டு அவன் கூப்பிடுவான் (cry). வருகின்ற மேசியாவின் அடையாளங்களையும் அவன் செய்து காண்பிப்பான். அவன் தேவனுடைய தீர்க்கதரிசியாக இருப்பான். ஒரு மகத்தான மனிதனாக இருப்பான். மேலும், அவன் வரும்போது அவன் என்ன செய்வான் என்பதையும் நீங்கள் கவனித்துப் பாருங்கள். இதைச் செய்வான் என்று வேதாகமம் உரைக்கின்றது. 54அந்த நாளானது வருவதற்கு முன்னர், “சோதோமின் நாட்களில் நடந்தது போல் மனுஷகுமாரனுடைய வருகையிலும் நடக்கும்” என்று இயேசு கூறினதை நிறைவேறும்படிக்கு ஒரு காலமானது சபைக்குள்ளாக வரவேண்டியதாக இருக்கின்றது. சோதோம், உலகமானது சோதோமின் நிலையில் இருக்கின்றது. அதை நாம் அறிவோம். சபையே, அது சரியா? உலகமானது சோதோமின் நிலையில் இருக்கின்றது. இப்பொழுது கவனியுங்கள். எந்தவிதமான ஒரு செய்தியை சோதோம் பெற்றிருந்தது? புறப்பட்டு சென்று அறிவாளிகளுக்கு பிரசங்கம் செய்த நவீன பில்ல கிரஹாமை அவர்கள் பெற்றிருந்தனர். இரண்டு பேர் மாத்திரமே வெளியே இழுக்கப்பட்டனர். அவர்கள் அவலட்சணமான நிலையில் இருந்தனர், அவலட்சணத்தை கொண்டு வந்தனர், மனைவி திரும்பிப் பார்த்ததினால் உப்புத்தூண் ஆனாள். இப்பொழுது, அதை சற்று கவனியுங்கள். ஒரு தூதன் ஆபிரகாமோடே இருந்து விட்டார். ஆபிரகாமோடே இருந்த அந்த தூதன் (தான் . என்பது ஆபிரகாமுக்கு தெரியாதிருந்தது என்று நான் யூகிக்கிறேன்) அந்த தூதன் “ஆபிரகாமே உன் மனைவி சாராள் எங்கே?” என்று கேட்ட பிறகு .... அதற்கு அவன் “அதோ உமக்கு பின்புறமாக கூடாரத்தில் இருக்கிறாள்” என்றான். அவள் அந்த தூதனுக்கு பின்புறமாக கூடாரத்துக்குள் இருந்தாள் என்று வேதாகமம் கூறுகின்றது. அப்பொழுது அவர் “உற்பவகாலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு வருவேன். அந்த குழந்தையை உனக்கு நான் வாக்குத்தத்தம் செய்துள்ளேனே. நிச்சயமாக நீ அந்த குழந்தையை கொண்டிருக்கும்படிக்கு நான் பார்த்துக் கொள்ளப் போகிறேன்” என்றார். அப்பொழுது சாராள் தன் உள்ளத்திலே நகைத்தாள். அவள் அவ்விதமாய்ச் செய்தபோது, கர்த்தருடைய தூதனானவர் “ஏன் சாராள் நகைத்தாள்?” என்று கேட்டார். 55இப்பொழுது, அது கர்த்தருடைய வருகைக்கு முன்பாக சம்பவிக்கும் என்று அவர் கூறியுள்ளார். “சோதோமின் நாட்களில் நடந்தது போல் கர்த்தர் வரும் காலத்திலும் நடக்கும்”. நண்பர்களே, உங்களால் அதைக் காணமுடிகின்றதா? அந்த விடிவெள்ளி நட்சத்திரம் பிரதிபலித்த அதே விதமான ஒளியைத்தான் இதுவும் பிரதிபலிக்கப் போகின்றது. மேலும், அவன் என்ன செய்யப் போகின்றான்? பிள்ளைகளை பிதாக்களின் விசுவாசத்திற்கு, பெந்தெகொஸ்தே பிதாக்களின் விசுவாசத்திற்கு திரும்பும்படிக்கு அழைப்பான். பவுல், சீலா, யோவான், இரினேயஸ், பரி, மார்டின், கொலம்பா மற்றும் அவர்கள் எல்லோருமாக இந்த சுவிசேஷதத்தை பிரசங்கித்த அந்த மகத்தான இரத்த சாட்சிகள், அந்த சுவிசேஷத்தை அவர்கள் அப்படியே பற்றிப் பிடித்து சரியாக அதனுடனே தரித்து நின்றனர். அதனாலே அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த பெரிய மெருகேற்றப்பட்ட குழுவானது ஸ்தாபனத்தை ஸ்தாபிக்க விரும்பின போது... நீங்கள் வேதாகமத்தில் கவனிப்பீர்களானால் அது “நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகள்” என்று கூறுவதை பார்க்கலாம். அதுதான் ஒரு சபை காலத்தில் கிரியையாக இருந்த அது பிறகு ஒரு போதகமானது. “நிக்கோ ” என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? நான் அதன் அர்த்தத்தை தேடிப் பார்த்தேன். “நிக்கோ , Nico” என்றால், “ஜெயித்து வெல்லுதல், மேற்கொள்ளுதல்” என்று உள்ளது. எதை மேற்கொள்வது? சபையை வென்று மேற்கொள்வது, எல்லா பரிசுத்தமும் ஏதோ ஒரு மனிதனுக்குள்ளாக, ஒரு மனிதனுக்குள்ளாக மாத்திரமே வைக்கப்படுகையில் அவ்விதம் நடக்கின்றது. அவன் ஒருவன் மாத்திரமே பரிசுத்தமானவன் என்று கருதப்படுதல் மற்றும் அவன் மாத்திரமே... சபையார் தாங்கள் விரும்புகின்ற எந்த விதத்திலும் வாழ்ந்து விட்டு பிறகு அவனிடமாக பாவ அறிக்கை செய்தால் போதுமானது. ஹூy! எவரெல்லாரும் விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாருக்கும் பரிசுத்த ஆவியானது அளிக்கப்படுகின்றது. சபையார் மற்றும் எல்லாருக்கும் அது உண்டு. ஒரு பரிசுத்த மனிதன் ஒருவனுக்கு மாத்திரம் தான் அது என்பது தேவனுடைய சித்தம் அல்ல. அது பரிசுத்த ஆவியானவர் மறுபடியும் பிறந்த மக்களின் மத்தியில் இருந்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் நடப்பித்து காண்பித்த என்பதாகும், அந்த அதே சபையாக இருத்தல் என்பதே. அந்த சாயங்கால நட்சத்திரமானது விடிவெள்ளி நட்சத்திரமானது பிரதிபலித்த அந்த அதே ஒளியை, வெளிச்சத்தை பிரதிபலிக்கும். 56ஆனால், கவனியுங்கள், அது வரும் போது ஒரு சமயமானது இருக்கும். அவர், “அது பகலும் அல்ல அல்லது இரவும் அல்ல” என்று அவர் கூறினார். நம்முடைய பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தபோது வானிலையானது இருளார்ந்ததாக இருந்தது, உங்களால் அது பகல் என்று கூற முடியாத அளவிற்கு இருந்தது. இருளார்ந்த நாள். “ஆனாலும், சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும்”. அந்த சாயங்கால வெளிச்சமானது வரும். ஆம், சாயங்கால வெளிச்சம், காலையில் உதித்து எழும்பி பிரகாசிக்கின்ற அதே சூரியன் தான் சாயங்காலத்திலும் இருக்கின்றது. சாயங்கால வெளிச்சமானது காலையில் சூரியன் அளித்த அந்த அதே ஒளியை பிரதிபலிக்க வேண்டியதாக இருக்கின்றது. உங்களால் அதைக் காண முடிகின்றதா? இப்பொழுது, நாம் இப்பொழுது சாயங்காயம் நேரத்தில் இருக்கின்றோம். ஓ, அவருடைய வாக்குத்தத்தை பிரதிபலித்து அதை நிறைவேற்றுகிற சாயங்கால நேர வெளிச்சத்திற்காக தேவனுக்கு நன்றி உண்டாவதாக. 57இப்பொழுது, உலகமானது சோதோமின் நிலையில் இருக்கின்றது. ஓ, அவருடைய கழுகு குஞ்சுகளானது... ஒரு சமயம் நான் காலை வெளிச்சம், விடிவெள்ளி நட்சத்திரம் குறித்து பிரசங்கித்த அதே செய்தியை இப்பொழுது நான் வைத்திருக்கிறேன். இப்பொழுது நீண்ட காலமாக சாயங்கால நேரமாக இருந்து வருகின்றது. இது இருளார்ந்த ஒரு சமயமாக இருக்கின்றது, மிகவும் ஆபத்தான ஒரு நேரம். நினைவில் கொள்ளுங்கள். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த மங்கின வெளிச்சம் தான் இருப்பதிலேயே மிகவும் ஆபத்தான ஒரு சமயமாகும். பிரயாணம் பண்ணும்போது அப்பொழுது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, நீங்கள் இந்த பூமியில் வாழ்ந்ததிலேயே இதுதான் மிகவும் ஆபத்தான பயங்கரமான ஒரு காலமாக இருக்கின்றது. மத்தேயு 24ல், “கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக கடைசி நாட்களில் காரியங்கள் நடக்கும்” என்று கூறுகின்றது. முன்னொரு நாளில் ஒரு செய்தியில் பில்லி பிரன்ஹாம் பேசினதை நான் கேட்டேன். அவர், “தெரிந்து கொள்ளப்பட்டவர் ஏற்கெனவே வஞ்சிக்கப்பட்டு விட்டனர்” என்று கூறினார். அப்படி இல்லை, அப்படி இல்லை. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் ஒருக்காலும் வஞ்சிக்கப்படுவது இல்லை, இல்லை, இல்லை. அவர்கள் வஞ்சிக்கப்படமாட்டார்கள். சபை அங்கத்தினர் வஞ்சிக்கப்படலாம். ஆனால். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் உலக தோற்றத்திற்கு முன்னர் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். அவர்கள் வஞ்சிக்கப்படவே முடியாது. அது முடியாது என்று எபிரெயர் 6 கூறுகின்றது. அவர்கள் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். ஆனால், இந்த சாயங்கால நேரத்தில் சபைக்கு இது மிகவும் பயங்கரமான ஆபத்தான ஒரு காலமாகும். ஏனென்றால் அங்கே.... கவனியுங்கள், அவர்கள் சபைக்கும் செல்வார்கள். பெந்தெகொஸ்தே விசுவாசிகளைப் போலவே ஏறக்குறைய அப்படியே அதே போன்றே இருப்பார்கள். நீங்கள்... அவர்கள் சத்தமிடுவார்கள். நடனமாடுவார்கள். அந்நிய பாஷையில் பேசுவார்கள். எல்லா காரியங்களையும் செய்வார்கள். கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் விதத்தில் அது மிக நெருக்கமாக இருக்கும். ஆனால், நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சரியாக இருக்கின்றீர்கள் என்று கண்டறிய உங்களுக்கு இருக்கும் ஒரே வழி என்னவென்றால், வார்த்தையாகிய மின்சக்தி கடத்தியை (conductor) பின்பற்றுவதே ஆகும். அது முற்றிலுமான சத்தியத்தை கொண்டு வரும். பாருங்கள்? அந்த மின்சக்தி கடத்தியை (conductor) பார்த்துக் கொண்டேயிருங்கள். அதினாலே நிரப்பப்பட்டிருங்கள். ஆம் ஐயா. 58இப்பொழுது, நாம் காண்பது என்னவென்றால், இந்த லவோதிக்கேயா சபையானது, நாம் இப்பொழுது இருக்கின்ற இந்த சபைக் காலமானது (நீங்கள் அதை வாசிக்க விரும்பினால், வெளிப்படுத்தல் 3ஆம் அதிகாரத்தில் உள்ளது), நாம் காண்பது - என்ன நடந்தது - இந்த செய்தியானது புறப்பட்டுச் செல்லும் போது என்ன சம்பவித்தது? சபையானது மிகவும் உலகப்பிரகாரமாக இருந்து, தன்னை ஸ்தாபித்துக் கொண்டது, அதிலிருந்து தன்னுடைய தேவன் வெளியேறும் படியாக அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டனர். நான் கண்டதிலியே மிகவும் பரிதாபத்திற்குரிய வேத வசனம் என்னவென்றால் எபிரெயர் - அது வெளிப்படுத்தின விசேஷம் 3ஆம் அதிகாரமாகும். லவோதிக்கேயா சபைக் காலத்தில் உள்ள நிலையாகும். இயேசு தம்முடைய சொந்த சபைக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். வாசலை தட்டிக் கொண்டிருக்கிறார். உள்ளே வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார். முதல் சபையிலே அவர் ஏழு பொன் குத்துவிளக்குகள் மத்தியில் உலாவிக் கொண்டிருந்தார், சபைக் காலங்கள். ஆனால், லவோதிக்கேயாவில் அவர் வெளியே காணப்படுகின்றார். தம்முடைய சொந்த சபைக்குள்ளாக செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். இந்த சபைக் காலமானது அவருக்கு என்ன செய்திருக்கின்றது என்பதை அது காண்பிக்கிறது. அவர்கள் தங்களை ஸ்தாபனமாக்கிக் கொண்டு அவரை வெளியேற்றினார்கள். தங்களை ஸ்தாபனமாக ஸ்தாபித்துக் கொண்டு அவருடைய போதகத்தை வெளியே தள்ளினார்கள். தங்களை ஸ்தாபித்துக் கொண்டு அவருடைய வேதாகமத்தை வெளியே தள்ளிப் போட்டார்கள். அவர்கள் ஒரு ஸ்தாபன கோட்பாடுகள், தத்துவங்களைக் குறித்தும் புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அவைகளை வாசித்து வேதாகமத்திற்கு பதிலாக உடனடியாக அந்த புத்தகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள்: தேவனை அவர்கள் உள்ளே வரும்படிக்கு அனுமதித்து அவர் அவர்களை சிறிய அளவிலான மேசியாவாக உருவாக்கி, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை அவர்களுக்கு அளித்து அடையாளங்களையும் அற்புதங்களையும் காண்பிக்கும்படியாக தேவனை அவர்கள் உள்ளே வர அனுமதிக்காமல் ஏதோ குளிர்ந்து போன அறிக்கைகளை அவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் எல்லாவற்றையும் ஸ்தாபனமாக்கி அவரை ஒரு பக்கமாக தள்ளிவிட்டார்கள். இப்பொழுது, அவர் வெளியே நின்று கொண்டு தம்முடைய கடைசி வேண்டுகோளை அவர்களிடமாக விடுக்கின்றார். வாசற்படியில் நின்று மறுபடியுமாக உள்ளே வரும்படிக்கு அவர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். “இதோ நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்”. லவோதிக்கேயா சபையின் காலத்தில், அவரை பலவந்தமாக வெளியேற்றினர், ஆனாலும், தம்முடைய சொந்த சபைக்குள் திரும்பி செல்ல அவர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார். அது மிகவும் பரிதாபத்திற்குரிய ஒன்றல்லவா? நான் நினைத்துப் பார்ப்பதிலேயே மிகவும் பரிதாபத்திற்குரிய ஒரு காரியம் அதுவாகும். தம்முடைய சொந்த சபையிலே அவரின் நிலைமையானது மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். அந்த சபைக்காக தம்முடைய சொந்த ஜீவனையே அளித்தார். ஆனாலும், அவர்கள் எப்படியாகச் செய்தனரோ அதே போல் இவர்களும் அதே விதமாகச் செய்கின்றனர். சபைக்கு அவர் வெளிச்சத்தை ஒளியை அனுப்பினார். அதை அவர் செய்தார் என்று கூறினார். ஆனாலும், அவர்கள் அதை வேண்டாமென்று புறக்கணித்தனர், அவர்களை வெளியே தள்ளிப் போட்டனர், சபை உருவாக்கிய ஏதோ ஒரு விதமான கோட்பாட்டை, ஏதோ ஒன்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆகவே, அதோ அவர் இருக்கின்றார், வெளியே நின்றுகொண்டு உள்ளே வர முயற்சி செய்துகொண்டிருக்கிறார். 59இப்பொழுது, முடிக்கும் தருவாயில் இதை நான் கூறட்டும், ஏனென்றால், மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சுமார் இருபது வசனங்களை நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். ஆனால், அவைகளை நான் இப்பொழுது பார்க்கப் போவதில்லை. இதை நான் உங்களுக்கு கூறுவேனாக. நீங்கள் கவனித்தீர்களா? சபைக்கு வெளியே... நீங்கள் கவனிக்கிறீர்களா? “ஆமென்” என்று கூறுங்கள். (சபையார் “ஆமென்” என்று கூறுகின்றனர் - ஆசி). சபைக்கு வெளியே இருந்து உள்ளே வர முயற்சித்துக் கொண்டு... நினைவில் கொள்ளுங்கள், ஸ்தாபனங்களுக்குள் இருக்கின்றவர்கள் அவரைக் காணவேயில்லை. வெளியே இருந்தவர்கள் தான் அவரைக் கண்டனர். அவர்கள் வாசல் தட்டப்படுவதைக் கேட்டனர். ஆனால், அவர்கள் அதைக் காணவில்லை. இன்றும் அவ்விதம் தான் இருக்கின்றது. இன்றைக்கு அதைக் காணமுடியாத மனிதன், அங்கும் இங்கும் சென்று கொண்டு “உம், அதைக் குறித்த எதையுமே என்னால் காண முடியவில்லை. நான் அங்கே சென்று பார்த்தேன், ஒன்றையுமே என்னால் காண முடியவில்லை” என்று கூறுகின்றான். அவன் மிகவும் அதிகளவில் ஸ்தாபனமாக செய்து விட்டபடியால் அவனாலே ஒன்றுமே காணமுடியாமல் இருக்கின்றது. அங்கே வெளியே நின்று தட்டிக் கொண்டிருப்பது யார் என்று நீங்கள் மாத்திரம் சற்று விடுதலையாகி வெளியே வந்து சற்று பார்ப்பீர்களானால், இந்த காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் அவர் யார் என்று காண்பீர்களானால் நலமாயிருக்கும்... நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காண முடிகின்றதா? வெளியே வந்து பாருங்கள், வெளியே வாருங்கள். மிகவுமாக உங்களை ஸ்தாபித்துக் கொள்ளாதீர்கள், ஏனென்றால், அப்படியாக நீங்கள் செய்யும்போது உங்களால் ஒன்றையுமே காண முடியாது. உங்களால் காண முடிகின்ற ஒன்றே ஒன்று என்னவென்றால் உங்கள் ஸ்தாபனம் மாத்திரமே. ஆனால், உங்களால் வெளியே வந்து இயேசு தம்முடைய எல்லா மகிமையிலும் மற்றும் தம்முடைய இரக்கத்தைக் கொண்டும் தம்முடைய மக்களிடமாக செல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதை உங்களால் காண முடியுமானால், ஓ, அவர் அங்கே நின்று கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. 60நான் அந்த மேசியா, அந்த சிறிய மேசியா சிறிய அளவிலான மேசியாக்களைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். இன்று சபையின் ஒளியாக அவர்கள் இருக்கிறார்கள், உலகத்தின் ஒளியாக இருக்கிறார்கள். இயேசு சீஷர்களிடமாக, “நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்” என்று கூறினார். இப்பொழுது, நீங்கள் மலையின் மேல் வைக்கப்பட்டிருக்கின்ற விளக்குத்தண்டைப் போன்று இருக்கின்றீர்கள். எல்லா இடங்களிலிருந்தும் காணப்படுகின்ற ஒளியாக இருக்கிறீர்கள். நாம் அந்த ஒளியாக இருக்கிறோம். அப்படியாக நாம் இருக்கிறோமென்றால் நாம் அவருடையதான மேசியா ஒளியை பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம். மேசியாவின் அடையாளங்கள் சிறிய அளவிலான மேசியாக்களை பின் தொடருகின்றது. அந்த மேசியாவை அது எவ்வாறு தொடர்ந்ததோ அதே போன்று தொடரும். 61சில காலத்திற்கு முன்னர் இங்கே உங்கள் அருமையான சபையில் “கழுகு தன் கூட்டை கலைக்கிறது போல” என்னும் பொருளின் பேரில் நான் பிரசங்கித்தேன் என்று நம்புகிறேன். கழுகு தன் குஞ்சுகளின் மேல் அசைவாடுதல் .... அங்கே நான் அதை பிரசங்கித்தேன் என்று நான் நம்புகிறேன். சகோதரன் ஜாக் அல்லது ஏதோ ஓரிடத்தில். ஆம், “கழுகு தன் கூட்டை கலைப்பது ...” என்பதன் பேரில் பிரசங்கித்தேன் என்று நான் நம்புகிறேன். அந்த பெரிய கழுகை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உங்களுக்கு தெரியும் அந்த தகப்பன் கழுகானது .... தேவன் தம்மை ஒரு கழுகு என்று அழைத்துக் கொள்கின்றார் என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்கு அது தெரியுமல்லவா? அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை கழுகுகள் என்று அழைக்கின்றார். நிச்சயமாக அதைச் செய்தார். அவர் அதை கூறினது ... இந்த கழுகு, யாகோப்பு, அவர் அவனை வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனாகக் கண்டார். கழுகு தன் கூட்டைக் கலைப்பது போல ... இப்பொழுது, அவரும் கூட தம்மை ஒரு கழுகு என்று அழைத்துக் கொள்கிறார் என்று நாம் பார்த்தோம். ஆகவே, அவர் யேகோவா கழுகு. அவர் ஒரு கூட்டம் கழுகு குஞ்சுகளைக் கொண்டிருக்கின்றார்; கழுகு குஞ்சுகள், சிறிய அளவிலான மேசியாக்களைப் போல, குஞ்சுகள். இப்பொழுது, அந்த பெரிய தகப்பன் கழுகானது கூட்டின் மேலே நடந்து கொண்டிருப்பதை என்னால் காண முடிகின்றது. அது தம்முடைய பிள்ளைகளை நோக்கிப் பார்ப்பதில் விருப்பம் கொண்டிருக்கின்ற ஒன்றாகும். ஓ, என்னே. அவைகளை உற்றுப் பார்ப்பதில் அதற்கு எவ்ளவு பிரியம் பாருங்கள். அவை காண்பதற்கு எப்படி இருக்கின்றன? அந்த தகப்பன் கழுகு எப்படியாக இருக்கின்றதோ அதே போன்றுதான் அவைகளும் இருக்கின்றன. அவை கலப்பினம் அல்ல. அவை பாதி பருந்து மற்றும் பாதி காகம் அல்லது ஏதோ ஒன்றல்ல. அவைகள் கழுகுகளாக இருக்கின்றன. ஆமென். இன்று அந்த விதமாகத்தான் நாமும் கூட இருக்கின்றோம். நாம் மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் மற்றும் அசெம்பிளீஸாகவும் இன்னும் இன்னின்ன, இன்னின்ன சபையாகவும் பருந்துகளாகவும், காகங்களாகவும் மற்றும் எல்லாமுமாக இருந்து வருகின்றோம், அப்படியானால் எப்படியாக நம்மால் கழுகு குஞ்சுகளாக இருக்க முடியும்? தேவனுடைய அடையாளமானது நம் மத்தியில் அசைந்து சென்று கொண்டிருப்பதை நாம் கண்டு அதை ஏதோ ஒரு காரியம் என்று கூறுவோமானால் எப்படியாக நாம் கழுகு குஞ்சுகளாக இருப்போம்? அல்லேலூயா. 62அது தன் குஞ்சுகளை காண விரும்புகிறது. ஏனென்றால், அவை கலப்படமில்லாத தூய்மையான இன மரபைச் சார்ந்தவை ஆகும். அக்குஞ்சுகள் தன் தகப்பனுடைய மாம்சத்தைக் கொண்டிருக்கின்றன. அதனுடைய இரத்தத்தைக் கொண்டிருக்கின்றன. அதனுடைய ஆவியைக் கொண்டிருக்கின்றன. ஆமென். அக்கழுகு தன் குஞ்சுகளை எவ்விதமான ஒரு பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. சுற்றி சுற்றி நடந்து பார்க்கின்றது. ஆமென். அந்த சிறு கழுகு குஞ்சுகளும் அதை நோக்கிப் பார்த்து “நீர் எவ்வளவு பெரியவர், நீர் எவ்வளவு பெரியவர்” என்று கூறுகின்றன. நானும் கூட பார்க்கின்றேன், ஓ என்னே. “வருகின்ற நாட்களில் ஒன்றில் மேலே பறக்கப் போகின்றோம். அப்பா, அப்படித்தானே?” பாருங்கள்? ஓ, அவைகளை பார்த்துக் கொண்டிருப்பது அதற்கும் எவ்வளவு பிரியம் பாருங்கள். அவைகள் அக்கழுகைப் போலவே இருக்கின்றன. அக்கழுகைப் போலவே செயல்படுகின்றன. அவை அக்கழுகினுடைய மாம்சமாகவும், அதன் இரத்தமாகவும், அதனுடைய ஆவியாகவும் இருக்கின்றன. ஆமென். அவருடைய கழுகு குஞ்சுகளாகிய அவருடைய சிறிய அளவிலான மேசியாக்களாகிய தேவனுடைய சபையும் கூட அந்த விதமாகத்தான் இருக்கின்றது. அவை அவரைப் போலவே காணப்படுகின்றன. அவரைப் போலவே செயல்படுகின்றன. அவரைப் போலவே பிரசங்கிக்கின்றன. அவர் செய்த கிரியைகளை அவைகளும் செய்கின்றன; “நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால் நான் செய்கின்ற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள். இதைப் பார்க்கிலும் பெரியவைகளை நீங்கள் செய்வீர்கள்” ஆமென். “என் கழுகு குஞ்சுகளை இந்த அடையாளங்கள் பின் தொடரும்” ஆமென். “நான் செய்கின்றதைப் போலவே அவர்களும் செய்வார்கள். என் ஆவி அவர்களுக்குள் இருந்தால் நான் செய்கின்ற கிரியைகளை அவர்களும் செய்வார்கள். நான் செய்கின்ற கிரியைகளை அவர்கள் செய்யவில்லை என்றால் என் ஆவி அவர்களுக்குள் இல்லை”. 63அவர் அந்த சிறிய கழுகு குஞ்சுகளில் ஒன்றைப் பார்த்து, அதற்கு பருந்தைப் போல அலகு இருக்குமானால் அப்பொழுது அவர் “ஒரு நிமிடம், அங்கே ஏதோ தவறு காணப்படுகின்றது” என்பார். ஒரு வயதான காகம் கூட்டின் மீது குதித்து உட்கார்ந்து “கா, கா, கா. அற்புதங்களின் நாட்கள் கடந்து விட்டது. கா, கா, கா. தெய்வீக சுகமளித்தல் என்ற ஒன்று இல்லவே இல்லை” என்று கூற ஆரம்பித்தது. ஹா, நான் நிச்சயித்துக் கூறுகிறேன். அப்பொழுது அந்த தகப்பன் கழுகு தன்னுடைய நகமுள்ள பெரிய பாதத்தை தூக்கி அந்த காகத்தை பளார் என்று அடித்து கீழே தள்ளி விடும். உலகம் என்ற ஒன்று எப்படியாக நிச்சயமாக இருக்கின்றதோ, அவ்விதமாக நிச்சயமாக அது அந்த காகத்தின் கழுத்தை உடைத்துப் போட்டுவிடும். பாருங்கள்? ஆமாம். “ஓ அப்படிப்பட்ட ஒன்று ... அது மனோதத்துவ முறைமையினால் மற்றவரின் சிந்தனைகளை அறிந்து கொள்ளுதலாகும் (mental telepathy), இந்த நாட்களில் அப்படிப்பட்ட ஒரு காரியமானது நிச்சயமாக கிடையாது”. மாம்சத்திற்குரிய பருந்தே, அது மரித்துப் போன மாம்சமே. அதுதான் .... தேவனுக்கு கழுகு குஞ்சுகள் தேவையாயிருக்கின்றது. அவருக்கு சிறிய அளவிலான மேசியாக்கள் தேவையாயிருக்கிறது. அடையாளங்களையும் அற்புதங்களையும் கொண்டிருக்கின்ற, அபிஷேகிக்கப்பட்ட ஆண்களையும், பெண்களையும் அவர் கொண்டிருக்க விரும்புகின்றார். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு சபையை, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகிய அவரை பிரதிபலிக்கின்ற ஒரு சபையை கொண்டிருக்க விரும்புகின்றார். தேவன் மரித்துப் போகவில்லை. அவர் ஒரு ராஜ்யத்தை பிரசவித்து அதனுள் தம்முடைய சிறிய மேசியாக்களை கொண்டிருக்கின்றார். ஆமென் அவர் கூறுகின்ற ஒவ்வொரு வார்த்தைக்கும், அவர்கள் “ஆமென் என்று கூறுகின்றனர். அது உண்மை . ஆம், ஐயா. அவர்கள் அவரைப் போலவே காணப்படுகின்றனர். அவரைப் போலவே செயல்புரிகின்றனர். அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். அந்த மின்ஊடு கடத்தியை (conductor) கொண்டிருந்து சரியாக சீராக கிரியை செய்து அடையாளங்களம் அற்புதங்களும் தங்களைப் பின் தொடருகிறவர்களாக சென்று கொண்டிருக்கின்றனர். அது மேசியா ஆகும். மேசியா இன்றிரவு ஜீவித்துக் கொண்டிருக்கின்றார். அவர் மரித்திருக்கவில்லை. அவர் என்றென்றுமாக உயிரோடிருக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அவர் எப்படியாக இருக்குமென்று கூறினார்? மகிமைக்குப் போகும் வழியை நிச்சயம் காண்பீர் (அது உண்மைதானே?) தண்ணீரின் வழியில் இன்று வெளிச்சம் உண்டு இயேசுவின் விலையுயர்ந்த நாமத்தில் அடக்கம் செய்யப்படுவீர் இளைஞரே, முதியோரே, பாவங்களை விட்டு மனந்திரும்புவீர் அப்பொழுது பரிசுத்த ஆவி உங்களில் நிச்சயம் பிரவேசிப்பார். மாலை நேர வெளிச்சம் வந்துவிட்டது. (தேவனும் கிறிஸ்துவானவரும் ஒருவரே என்பது உண்மை ). 64மனிதன் ஒரு தேவனாக இருக்கும்படியாக உண்டாக்கப்பட ஆவான். தேவன் மனிதனாகும்படிக்கு ஆனார். ஓ, மேசியா மகத்தான யேகோவா ஒரு மானிட சரீரத்திலே வாசம் செய்தார். தம்முடையது போல அந்த சரீரத்தை உண்டாக்கினார். அதினாலே அவர் ஒரு மானிட சரீரமாக, ஒரு சிறிய அளவிலான மேசியாவாக இருந்து தம்முடைய பூமியை ஆளுகை செய்து அதை கட்டுப்படுத்தவே அப்படியாகச் செய்தார். ஆமென். “நான் செய்த கிரியைகளை அவர்களும் செய்வார்கள்”. ஓ அது எனக்குப் பிடிக்கும். யேகோவா தம்முடைய சிங்காசனத்தின் மேல் முன்னும் பின்னுமாக நடந்து “அதோ அவைகள் என் கழுகு குஞ்சுகள் ஆவர். அவர்கள் என் மாம்சத்தின் மாம்சமும் என் எலும்பின் எலும்புமானவர்கள். அவர்கள் என் ஆவியினாலே பிறந்தவர்கள். என் இரத்தத்தினாலே கழுவப்பட்டவர்கள்” என்று கூறுவார். ஆமென். “அவர்கள் என்னுடையவர்கள். நான் எந்த ஒரு காரியத்தைக் கூறினாலும் அவர்கள் அதை விசுவாசிப்பார்கள். ஏன்? அவர்கள் கழுகுகள் ஆவர். அப்படியாகத் தான் அவர்கள் இருக்கிறார்கள். நான் எப்படியாக ஒரு கழுகாக இருக்கின்றேனோ அதே போல அவர்களும் கழுகுகளாக இருக்கின்றனர். அவர்கள் - அவர்கள் சிறிய தேவர்கள், நான் பெரிய தேவன். அது உண்மை . நான் அப்பா யேகோவா. அவர்கள் என் பிள்ளைகள்” என்று கூறுவார். உங்களுக்கு புரிகின்றதா? இந்த காரியங்கள் நடந்தேறும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். இப்பொழுது, நாம் அவருடைய ராஜ்யத்தின் பிள்ளைகளாக இருக்கிறோம் என்றால், அந்த அடையாளங்கள் நம் மத்தியில் தம்மை பிரசித்திப்படுத்தி காண்பித்தாக வேண்டும். அது சரிதானே? இப்பொழுது, நாம் அதைக் குறித்து பேசி, பேசி இரவு முழுவதுமாக அதன் பேரிலே பேசிக்கொண்டே இருக்கலாம். அது கிரியை செய்யுமா? அது அடுத்த காரியமாகும். அதுதான் அடுத்ததாகும். அது கிரியை செய்யுமானால் அப்படியானால் அது உண்மையாகும். பரிசுத்த யோவான் 14:12ல் தேவனுடைய வார்த்தையானது வாக்குத்தத்தம் செய்துள்ளது. “என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. அது சரியல்லவா? நான் அதை விசுவாசிக்கிறேன், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, இப்பொழுது நாம் நமது தலைகளை சற்று தாழ்த்துவோமாக. 65பிதாவாகிய தேவனே, காலத்தின் நேரமானது வந்திருக்கின்றது. இயேசுவிடம் செல்வதைத் தவிர இப்பொழுது வேறு எந்த ஒரு இடமும், எந்த ஒரு காரியத்தையும் காண்பதற்கு ஒரு வழியும் இல்லை என்பதை நாங்கள் உணர்கிறோம். நாங்கள் - நாங்கள் கடைசி காலத்தில் இருக்கின்றோம். இந்த காரியங்கள் எல்லாம் நடைபெறுவதை நாங்கள் காண்கிறோம். எங்கள் தேசமானது திவாலாக வேண்டிய நிலையில் உள்ளதைக் காண்கிறோம். எங்கள் உலகமும் ஒன்றும் இல்லாமல் திவாலாகிக் கொண்டிருப்பதை நான் காண்கிறோம். கம்யூனிசம் வேகமாக அடித்து வீசிக் கொண்டு வருவதை நாங்கள் காண்கிறோம். “இரும்புத் திரை (Iron Curtain) என்ற தேவனற்ற ஆவியானது இருக்கின்றது (இரும்புத்திரை என்பது 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து 1991ல் பனிப்போரின் முடிவு வரை ஐரோப்பாவை இரு பிரிவுகளாகப் பிரித்திருந்த நில எல்லையையும் அவற்றுக்கிடையிலான கொள்கை ரீதியிலான முறுகலையும் குறிப்பிடுகிறது. கம்யூனிச நாடான சோவியத் யூனியன் தானும் தன் உறுப்பு நாடுகளும் மேற்கு நாடுகளுடன் தொடர்பு கொள்ளகூடாது என்ற முயற்சியின் எடுத்துக் காட்டாக இச்சொல் பயன்படுத்தப்படுகிறது - தமிழாக்கியோன்). ”மூங்கில் திரை“ என்று அழைக்கப்படுகின்ற ஒன்று சீனாவில் எழும்பிக் கொண்டிருக்கிறதை நாங்கள் காண்கிறோம். (மூங்கில் திரை என்பது சீனாவும் சோவியத் யூனியைப் போன்று கொள்கையளவில் ஏற்படுத்திக் கொண்ட முயற்சி இவ்வாறு அழைக்கப்படுகின்றது - தமிழாக்கியோன்) பிறகு பழுப்பு திரை என்று அழைக்கப்படுகின்ற ஒன்று எழும்புவதை நாங்கள் காண்கிறோம். அந்த ரோம திரையானது உலகத்தை தன் கட்டுக்குள் எடுக்கின்றது. இப்பொழுதும், பிதாவாகிய தேவனே, உம்முடைய வாக்குத் தத்தங்களாகிய இந்த காரியங்களை நாங்கள் நினைவில் கொள்ள எங்களுக்கு அனுகூலம் செய்யுமாறு ஜெபிக்கிறோம். இந்த காரியங்களை சாயங்கால நேரத்தில் நீர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறீர். எங்கள் ஜீவியங்களில் உம்முடைய வார்த்தை நிறைவேறும்படிக்கு செய்வதை நாங்கள் காணும் போது மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். பிதாவே, நீர் தாம் பசி தாகத்தை உண்டாக்குமாறு நாங்கள் ஜெபிக்கிறோம். சொற்றொடராக இல்லாமல் கல்வியறிவில்லாமல் பேசப்பட்ட சில வார்த்தைகள் தாமே இப்பொழுது புறப்பட்டு சென்றிருக்கிறது. நீர் தாமே அதை மக்களுடைய இருதயங்கள் அறிந்து கொள்ளும்படிக்கும், அதினாலே தேவன் தாமே ஒரு வல்லமையாக இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ளும் படிக்கும் செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அவர் ஒரு சக்தி வாய்ந்தவர் ஆவார். 66கிறிஸ்து தாமே தேவனின் முழுமையாக இருந்தார். அவர்தான் அந்த அபிஷேகிக்கப்பட்ட யேகொவாக இருந்தார் அவர் தாமே நசரேயனாகிய இயேசு, அபிஷேகிக்கப்பட்ட யேகோவா சரீரம் ஆவார். தேவன் தாமே கிறிஸ்துவில் இருந்து உலகத்தை தமக்குள்ளாக ஒப்புரவாக்கிக் கொண்டிருந்தார். விழுந்து போன இந்த மானிட இனத்தை பரிசுத்தப்படுத்தும்படிக்கும், அவர்களை மறுபடியுமாக தேவனுடைய குமாரர்களாக திரும்பக் கொண்டு வரும்படிக்கும், அபிஷேகிக்கப்பட்டவர்களாக இருக்கும்படிக்கும், அவர் ஏழு சபை காலங்களினூடாக திரும்பி வரும் வரைக்குமாக அவர்கள் தாமே பரிசுத்த ஆவியால் அபிஷேகிக்கப்பட்டு புறப்பட்டுச் சென்று அவருடைய ராஜ்யத்தை பிரதிபலிக்கும்படிக்கும் அவர் தாமே மரித்தார். அதன் பிறகு கடைசி காலத்திலே, அவர் தம்முடைய சொந்த சபைக்கு வெளியே நின்று கொண்டு உள்ளே வரும்படிக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். ஆனால், அந்த நாளிலே அவர் வெளிச்சத்தை, ஒளியை அனுப்புவார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிறார். கர்த்தாவே, அதை நாங்கள் கண்டு பிடித்தோம். நாங்கள் அதை கண்டு அறிந்து கொண்டோம். அது தாமே ஒரு சரியான கடத்தியாக (conductor) இருக்கிறது என்றும் நாங்கள் பார்க்கின்றோம். ஏனென்றால், நாங்கள் விசுவாசிக்கின்ற அந்த வார்த்தையை, அந்த வார்த்தையை வாக்குத்தத்தம் செய்துள்ள பரலோகத்தின் தேவனுடன் நாங்கள் மின் கம்பி இணைப்பைப் போன்று இணைத்துள்ளோம். அதினாலே முதல் அடையாளங்களை செய்த அந்த அதே மின்சாரம் தாமே சரியாக திரும்பவுமாக வந்து அந்த அதே மேசியாவின் அடையாளங்களை செய்து காண்பிக்கிறது என்பதை நாங்கள் கண்டு அறிந்துகொண்டுள்ளோம். ஆகவே, பிதாவே, நாங்கள் ஒரு மின் கடத்தி உபகரணம் (conductor) என்று அழைக்கின்ற அந்த வார்த்தை தாமே சரியான ஒன்று என்று நாங்கள் அறிந்து கொள்கிறோம். ஏனென்றால் அது ஒவ்வொரு வாக்குத்தத்தையும் செயலில் கொண்டு வருகின்றது. பிதாவே, அதற்காக உமக்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். இரட்சிக்கப்படாதவர்களை நீர் தாமே இரட்சிக்கும்படிக்கும், வியாதியஸ்தரை சுகமாக்கும்படிக்கும், பரிசுத்த ஆவியை வாஞ்சிக்கின்றவர் களுக்கு பரிசுத்த ஆவியினால் நிரப்பவும் மற்றும் உம்முடைய சபையை ஊக்கப்படுத்தும்படிக்கும் நாங்கள் ஜெபிக்கிறோம். மேலும், சுகமளிக்க ஆராதனையில் நாங்கள் உமக்காக தொடர்ந்து காத்திருக்கிறோம். இம் மக்களையும் மற்றும் எல்லாவற்றையும் உம்மிடமாக சமர்ப்பிக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஆமென். 67இப்பொழுது அது என்னவாக இருக்கின்றது? நான் கடிகாரத்தை கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே, நாங்கள் உங்களை நீண்ட நேரத்திற்கு வைத்திருக்க எனக்கு விருப்பமில்லை. நாங்களும் கூட அதிகாலை புறப்பட்டுச் செல்ல வேண்டும். அவர் என்ன வாக்குத்தத்தம் செய்தார்? சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும் என்று அவர் வாக்குத்தத்தம் செய்தார். அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கின்றார். நாங்கள் சிறிய அளவிலான மேசியாக்கள் என்று கூறுகையில் என்ன கூற வருகிறேன் என்று உங்களால் காண முடிகிறதா? அப்படியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். மேசியா என்பதற்கு “அபிஷேகிக்கப் 'பட்டவர்” என்று அர்த்தமாக இருந்தால், அவர்தான் அந்த மேசியா ஆவார். ஏனென்றால் அவர் தாமே தேவனுடைய பரிபூரணம் ஆவார். அப்படியானால் நாமும் கூட அந்த அதே ஆவியால்தான் அபிஷேகிக்கப் 'பட்டிருக்கிறோம். இப்பொழுது, நீங்கள் கூறலாம், “எப்படி ... அந்த அதே ஆவியால் தான் நீங்கள் அபிஷேகிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அறிந்து கொள்வது எப்படி?” என்று கேட்கலாம். நல்லது, அந்த அதே ஜீவன், அவர் செய்த அந்த அதே காரியங்கள் ... “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்”. பரிசுத்த யோவான் 5:19ல் அவர் என்ன கூறியுள்ளார்? “மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்லுகிறேன. பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்ற, வேறொன்றையும் செய்யமாட்டார்; அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். சரியாக உள்ள எந்த ஒரு சிறிய அளவிலான மேசியாவும் அந்த அதே செய்தியைத் தான் கொண்டிருப்பான். அது சரியல்லவா? 68இதை நினைவில் கொள்ளுங்கள். முதலாவதாக அபிஷேகத்தை பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை பெற்றது யார்? யூதர்கள். அடுத்த அதைப் பெற்றவர்கள் யார்? சமாரியர்கள். கடைசியாக புறஜாதிகள் பெற்றார்கள் (அது சரிதானே?) ஏனென்றால் புறஜாதிகள் மரணம், அடக்கம் மற்றும் உயிர்த்தெழுத்தலுக்கு பிறகு உள்ளே கொண்டு வரப்பட்டார்கள். அவர்கள் தாமே... இப்பொழுது அவர்கள் செய்தியை சரியாக முழுமையாக பெற்றிருக்கிறார்கள். இப்பொழுது, கவனியுங்கள், காம், சேம் யாப்பேத்தினுடைய ஜனங்கள் ... இப்பொழுது காமின் ஜனங்கள் மற்றும் யாபேத்தின் ஜனங்கள் தாமே அந்த ... அவைதான் பூமியின் மக்கள் இனமாக இருந்தன. பூமியின் மூன்று வகையான மக்கள் இனங்கள். இப்பொழுது யூதர் மேசியாவின் அடையாளத்தை இயேசுவினாலே பெற்றுக் கொண்டார்கள் என்று நாம் காண்கிறோம். ஆனால், இப்பொழுதோ, இந்த கடைசி நாட்களிலே... இப்பொழுது புறஜாதியார் அதைப் பெறவில்லை. ஏனென்றால் அவர் மேசியாவை எதிர் நோக்கிக் காத்திருக்கவில்லை. அந்நாட்களிலே நாம் அஞ்ஞானிகளாக இருந்தோம், நம் மக்கள் ஆங்கிலோ சாக்ஸன் மக்களாக இருந்தனர். நாம் அஞ்ஞானிகளாக இருந்து விக்கிரகங்களை வழிபட்டுக் கொண்டிருந்தோம். மோவாபியர் மற்றும் இன்னும் பிறர், எமோரியர் இன்னும் மற்றவர் அவர்கள் தான் நம் ஜனங்களாக இருந்தனர். இப்பொழுது, ஆனால் நாம் இரண்டாயிரம் வருடங்களாக மேசியாவை எதிர்நோக்கி காத்திருந்து வந்துள்ளோம். 69இப்பொழுது, அங்கே அக்காலத்திலே அவர் தம்மை எப்படியாக தெரியப்படுத்தினார்? இயேசுவை அனுப்பி அவரை தம்முடைய சொந்த ஆவியைக் கொண்டு அபிஷேகித்து தம்மைத் தெரியப்படுத்தினார். அதினால் தான் இயேசு, “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை” என்று கூறினார். அது சரி தானே? “கிரியைகளை நான் செய்தேனேயானால், நீங்கள் அந்த கிரியைகளை விசுவாசியுங்கள்”. இப்பொழுது... ஏன் அப்படியாக இருந்தது? அவர் தம்மை அவர்களுடைய குழுமங்களுடனும் மற்றும் அவர்களுடைய ஸ்தாபனங்களுடன் இணைத்துக் கொள்ளவில்லை. அவைகள் எல்லாவற்றிலிருமிருந்து அவர் விலகி வெளியே நின்று அவைகளுக்கு எதிராக சத்தமிட்டு கடிந்து கொண்டார். அவர் சபைகளையும் மற்றும் எல்லாவற்றையும் கிழித்துப் போட்டார் என்று அவர்கள் கூறுகின்றனர். ஆகவே, அவருடைய ஆவியானது மறுபடியுமாக திரும்பி வரும்போது அதைப்போலில்லாமல் சற்று மாறாக இருக்கும் என்று உங்களால் எதிர்பார்க்க முடியுமா? அவர் அதே காரியத்தைதான் மறுபடியும் செய்வார், ஏனென்றால் அது மாறமுடியாது. அது தேவனாகும். நாம் மாறலாம். நம்முடைய மானிட இயல்பானது மாறும், ஆனால், தேவனால் மாற முடியாது. அவர் மாறாமல் அதே விதத்தில் தான் இருக்க வேண்டியவராக உள்ளார். அவர் முடிவில்லாதவர்; நாமோ முடிவு பெறுபவர்கள். ஆகவே, அவரால் மாறவே முடியாது. ஆகவே, கடைசி நாட்களிலே அவர் தம் சபையின் மீது வரும்போது, அது என்னவாக இருக்கும்? அது ஒரு வெளியே இழுக்கப்பட்ட, தேவனுடைய ஆவியால் அபிஷேகமபண்ணப்பட்ட ஒரு மக்கள் கூட்டமாக இருக்கும். அவர்கள் சிறிய அளவிலான மேசியாக்களாக இருப்பார்கள். பாருங்கள்? அவர்கள் அபிஷேகிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகவே, அவருடைய ஆவி அவர்களுக்குள்ளாக இருக்குமானால், அவர் செய்த கிரியைகளை சரியாக அதே விதமாக அவர்கள் செய்வார்கள். அது தாமே - அது சரியல்லவா? 70அப்படியானால் நீங்கள்... நீங்கள் அதை எடுத்து, வார்த்தையை மின் ஆக்கப்பொறி(dynamo)உடன் இணைப்பு கொடுத்துப் பார்ப்பீர்களானால் அப்பொழுது அந்த... மின்சாரமானது திரும்ப சரியான விதத்தில் வருமானால், நீங்கள் இணைப்பை பெற்றிருக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் இணைப்பு கொடுத்து, ஆனால் ஒன்றுமே வரவில்லை என்றால், எங்கே ஓரிடத்தில் நீங்கள் மின்சாரம் பாயாமல் தடுக்கின்ற மின்சார கம்பியில் சுற்றப்படும் ஒட்டு நாடாவை insulator சுற்றி உள்ளீர்கள், எங்கோ உங்கள் மின் கம்பி துண்டிக்கப்பட்டள்ளது. பாருங்கள்? ஆனால், அதை ஒரு மின் ஆக்கப் பொறியின் (dynamo) மூலமாக அதை கொண்டு வாருங்கள், மின்சாரம் வருமானால், அப்படியானால் நீங்கள் சரியான நிலையில் உள்ள கடத்தியை (conductor) பெற்றிருக்கிறீர்கள் என்பதாகும். நீங்கள் ஒரு கடத்தியை (conductor) வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அப்படியாக அதை நம்ப ... நான் எப்படி அதை பெற்றேன் என்று உங்களுக்கு கூற விரும்புகிறேன். வேதாகமம் எப்படியாக கூறியுள்ளதோ அதே விதத்தில் நான் அதைப் பெற்றேன். எந்த ஒரு ஸ்தாபனத்துடன் நான் பேதம் கொள்ளவில்லை. என் சொந்த பாப்டிஸ்ட் சபையே என்னை வெளியே தள்ளினது. ஏனென்றால் நான் ஒரு பெண் பிரசங்கியை அபிஷேகிக்க மறுத்தேன் என்பதனால் அப்படி செய்தது. அப்படியான ஒன்றானது வேதபூர்வமானது அல்ல. அது சரியான ஒன்றும் அல்ல. அப்பொழுது நான் “சரி நீங்கள் கூடிய சீக்கிரத்தில் என்னை வேண்டாமென்று வெளியே தள்ளிவிடுங்கள். ஏனென்றால் உடனடியாகவோ அல்லது எப்போதாவதோ நீங்கள் என்னை வெளியேற்ற வேண்டியதாக இருக்கும். ஆகவே, நீங்கள் அதைச் செய்வதற்கு முன்பே நான் வெளியேறிவிடுகிறேன்” என்று கூறினேன். 71அப்பொழுது நான் - இன்று உள்ள இந்த காரியங்கள் ஏராளமானவைகளைப் பார்க்கும் போது, நான் .... நான் ஒரு பையனாக இருக்கும்போதே, ஒருத்துவம், இருத்துவம், மூன்று தேவர்கள், நான்கு தேவர்கள் மற்றும் என்னவெல்லாம் அவர்கள் கொண்டு இருக்கிறார்களோ, அவைகளையெல்லாம் நான் கேள்விப்படுவதற்கு முன்னதாகவே, ஒரு தேவன் இருக்கின்றார் என்று விசுவாசித்தேன். அவருடைய நாமம் இயேசு என்பதை நான் விசுவாசித்தேன். நான் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு பாப்டிஸ்ட் மிஷனரி பிரங்கி எனக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தார். அதிலிருந்து நான் அதைத் தான் பிரசங்கித்து வந்துள்ளேன். வேதாகமத்தில் எந்த ஒரு வசனமும் இல்லை .... அதைத் தவிர வேறே எந்த ஒரு விதத்திலாகிலும் யாராவது ஞானஸ்நானம் பண்ணப்பட்டு உள்ளார்களாக என்று கூறுகின்ற ஒரு வேத வசனத்தையாவது எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம்... பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்னும் பட்டப் பெயர்களைக் கொண்டு யாருக்காவது ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது என்று வேதாகமத்தில் எந்த ஒரு இடத்திலாவது இருக்கின்றதா என்று எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். அல்லது, வரலாற்றை வாசித்துப் பாருங்கள், கத்தோலிக்க சபைகள் ஸ்தாபிக்கப்படும் வரைக்குமாக எவராவது ஒருவருக்கு பிதா குமாரன் பாசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவதை எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம் உள்ளது என்றால் நான் பிரசங்க பீடத்தை விட்டு இறங்கி விடுகிறேன். அது ஒரு கத்தோலிக்க போதகம் ஆகும். பிதா குமாரன் பரிசுக்க என்கின்ற ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டிருக்கின்ற எர் ஆணாகிலும் பெண்ணாகிலும் ஜீவனுள்ள தேவனுடைய சடை ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. அவர்கள் கத்தோலி சபைக்குள்ளாக தான் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறார்கள். ... அவர்களுடைய போதகமாகும். கத்தோலிக்க சபையைத் தவிர அகட்க வெளியே எவராகிலும் அந்த ஞானஸ்நானத்தை கொடுத்திருக்கிறார்களா என்று எனக்கு வரலாற்றைக் கொண்டும், வேத வசனங்களைக் கொண்டும் எனக்கு காண்பியுங்கள் பார்க்கலாம். லூத்தர் அதை வெளியே கொண்டு வந்தார். அவருக்கு பிறகு வெஸ்லி அதை வெளியே கொண்டு வந்தார். இதோ இதுவரைக்குமாக நாம் அதைப் பார்த்தோம். அந்த சபைகளில் ஒவ்வென்றையும் பார்த்தோம். “என் நாமத்தை மறுதலியாமல்” என்று கூறினவரைக்குமாக பார்த்தோம். ஆனால், அது தியத்தீரா சபை காலத்திற்கு வந்தபோது அவர், “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்” என்று கூறினார். அது தான். 72இயேசுவின் நாமத்தில் கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானமானது உங்களை இரட்சிக்காது என்று நான் கூற விழையவில்லை. ஆனால், அது சரியான கிறிஸ்தவ ஞானஸ்நானம் ஆகும். நீங்கள் விசுவாசத்தினால் (அது சரியே) கிறிஸ்துவின் மூலமாக இரட்சிக்கப்பட்டீர்கள். அது சரி. ஆனால், அதுதான் சரியான ஞானஸ்நானம் ஆகும். அந்த விதமாகத்தான் நீங்கள் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் (சரியாக). வேதாகம ஒழுங்கை கைக்கொள்ள அந்த விதத்தில் தான் நீங்கள் அதைச் செய்ய வேண்டும். பிறகு நீங்கள் பரிசுத்த ஆவியை பெற்றதும் தேவ வல்லமையானது உங்கள் மேல் வரும். அப்பொழுது நீங்கள்: செய்த அந்த அதே காரியங்களைச் செய்வீர்கள். ஏனென்றால் அது உங்களில் இருக்கின்ற அவருடைய ஆவியாகும். அது இல்லையென்றால், அப்படியானால் எங்கோ தவறு உள்ளது. அது சரி. ஓ, மகிமை. இப்பொழுதே நானே ஏறக்குறைய அந்நிய பாஷையில் பேசுவேன் என்பதாக உணர்கிறேன். 73உங்களுக்கு தெரியுமா, நான் முதன் முதலில் அந்நிய பாஷையில் பேசினது, ஒரு பாப்டிஸ்ட் சபையில் பிரசங்கம் செய்து கொண்டிருந்த போது தான். நான் பிரசங்க மேடையில் நின்று என்னால் கூடுமான வரையில் மிக சிரத்தையுடன் பிரசங்கித்து, குதித்து சென்று முன் வரிசை இருக்கைகளுக்கு நடுவில் சென்றேன். அப்பொழுது அந்நிய பாஷையில் ஏதோ சில வார்த்தைகளை பேசினேன். நான் என்ன கூறினேன் என்பதை அறியாதவனாக, சுற்றும் முற்றும் பார்த்தேன். சபையார் எல்லாரும் தங்கள் கழுத்தை நீட்டி பார்த்தனர். அப்பொழுது ஏதோ ஒன்று என் மூலமாக “நான் வனாந் - நான் விடாய்த்த பூமிக்கு பெருங்கன்மலையாகவும், பெருங்காற்று சமயத்தில் புகலிடம் ஆவேன்” என்று கூறினது. அதுதான் நான் முதன் முதலில் அந்நிய பாஷையில் பேசினபோது உண்டானதாகும். ஆகவே, என்னே. அதைக் குறித்து எங்கோ ஓரிடத்தில் ஏதோ உண்மையான ஒன்று இருக்கின்றது என்று நான் அறிந்து கொண்டேன். அது எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் அதைக் கண்டு கொள்ளும் வரைக்குமாக தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தேன். நான் தொடர்ந்து முன்னே போய்க் கொண்டிருந்தேன். எல்லாற்றையும் விற்றேன் அந்த மகத்தான முத்தை பெற்றுக் கொண்டேன். என்னே, எனக்கு எதைக் குறித்தும் அக்கறையில்லை ... வேதாகமம் கூறுகிறது என்றால்... நான் அதை விசுவாசிப்பேன். எத்தனை ஸ்தாபனங்கள், எத்தனைப் பேர் இதை, அதை அல்லது மற்றதை கூறினாலும் அதைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. அது தேவனுடைய வார்த்தையாகும். மேலும், அதுதான் உண்மையாகும், ஆகவே, நான் அதனுடனே தரித்து நின்று கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். ஆகவே, அதை நீங்கள் செய்வதற்காக இருக்கின்ற ஒரே ஒரு வழி என்னவென்றால், வேதாகமத்துடனே வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தரித்து நிற்றல் ஆகும். 74முன்னொரு இரவு நான் நான்கு ஜீவன்களைக் குறித்து பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். நான் கூற விழைந்தது... அவை மிருகங்கள் அல்ல. ஏனென்றால் அந்த சொற்களானது... அவை ஜீவன்களாகும். ஜீவக்கின்ற சிருஷ்டிகளாகும் (living creatures) (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) எபிரெயரில் - வெளிப்படுத்தல் 4வது அதிகாரத்தில், அந்த சொல்லானது “சூன் (zoon) சூன் என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் ”ஜீவன்கள்“ என்பதாகும். வெளிப்படுத்தல் 11 மற்றும் வெளிப்படுத்தல் 17, அங்கே முற்றிலுமாக வேறொரு பெயர் இருக்கின்றது. அதன் அர்த்தம் ”மனிதனால் அடக்கி வளர்க்க முடியாத மிருகம்“ என்பதாகும். ஆனால், இவைகளோ ஜீவிக்கின்ற சிருஷ்டிகளாகும். அவைகள் என்னவாக இருக்கின்றன. அவை கேருபீன்களாக, பரிசுத்த ஸ்தலத்தின் வாசலைக் காத்த கேருபீன்கள் போல. நாம் அதை எசேக்கியல் 1ஆம் அதிகாரத்தில் காணலாம். தேவனுடைய சொகுசா நிற ஒளியானது இருந்தது. வானவில் அங்கே இருந்தது. தேவனுடைய மகிமையும் அங்கே இருந்தது. அதன் புகைப்படத்தை நாம் வைத்திருக்கின்றோம். அவர்கள் அங்கே கண்ட விதமாகவே அதே விதத்தில் புகைப்படமானது இருக்கின்றது. அதை நாங்கள் புகைப்படமாக எடுத்துள்ளோம். அது அங்கே இருந்தது. சரியாக கட்டடத்தில் இருந்தது. அந்த வெளிச்சத்தின், ஒளியின் புகைப்படத்தை எடுத்தோம் (அது சரியே). எசேக்கியேல் கண்டவிதமாகவே அப்படியே காணப்பட்டது. எசேக்கியேல் 1:26லிருந்து 28 வரைக்குமாக அதனுடைய காட்சியை உங்களுக்கு காண்பிக்கின்றது, எசேக்கியேல் தேவனுடைய மகிமையைக் கண்டது போலவே காணப்பட்டது. 75இப்பொழுது, நீங்கள் பாருங்கள், புகைப்படக் கருவியின் கண்ணானது சில சமயங்களில் மானிட கண் காணாததை காணும். அது சரியே. மானிடர் அதை பார்க்காத போது அவை அதைக் கண்டன. ஆனால், நாமோ, நாம் நம்முடைய ஒளியை கண்டறியும் மீட்டர் கருவி அவைகளில் மிகவுமாக அடைப்பு ஏற்பட்டிருக்கிறது, முட்டாள் தனங்கள், ஸ்தாபனங்கள் மற்றும் காரியங்களால் மிகவும் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. அதினாலே நாம் நம் மூக்கிற்கு அப்பால் எதையுமே காண முடியாதவர்களாக இருக்கிறோம், அல்லது அதைப் போன்ற நிலையில் இருக்கின்றோம். அங்கே வெளியில் சம்பவிப்பவைகளை நாம் காண்பதில்லை. பரிசுத்த ஆவியானவர் இன்று இங்கே இருக்கின்றார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அதே வல்லமை, அதே அடையாளங்கள், அதே அற்புதங்கள், அதே தேவன், அந்த அதே ஞானஸ்நானம், அந்த அதே பரிசுத்த ஆவி, அந்த அதே காரியம் இருக்கின்றது. எல்லா காரியங்களும் அதே விதமாகத்தான் இருக்கின்றது. ஏனென்றால், அவரால் மாறவே முடியாது. ஆமென். 76சரி, இப்பொழுது 'A' பிரிவில் இப்பொழுது அட்டைகள் கொடுக்கப்பட்டது என்று கூறுகிறார் என்று நம்புகிறேன். அது சரியா? ஜெப அட்டை ..... (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி). சபையே, அங்கே வெளியே இருப்பவர்களே நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? காசோலையானது அங்கீகரிக்கப்பட வேண்டும் அல்லவென்றால் அது திரும்பவும் ஒன்றும் இல்லாமல் வந்து விடும். தெளிவாக கூறுகிறேன், ஏதோ யூகித்து கூறவில்லை . ஆனால், அது என்ன என்பதை தத்ரூபமாக அறிந்திருக்கிறேன்... இப்பொழுது அந்த காசோலையில் உங்கள் தேவைகளை எழுதுங்கள். இப்பொழுது அவர் ஏற்கெனவே ...... இப்பொழுது, ஒரு வியாதியஸ்தரை அழைப்போம். வியாதியுள்ளவர்கள் யாராவது உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது - அது தாமே.... 77(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) ... சபை செல்லும் வரைக்குமாக தம்முடைய பாதத்தை பூமியின் மீது வைக்க மாட்டார். எத்தனை பேருக்கு அது தெரியும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களை முந்திக் கொடர்வதில்லை அல்லது தடை (hinder) செய்வதில்லை. தேவ எக்காளம் முழங்கும். நாம் எழுந்து அவரை சந்திக்க (to meet the Lord in the air என்று ஆங்கில வேதாகமத்தில் உள்ளது - தமிழாக்கியோன்) ஆகாயத்தில் எடுக்கப்படுவோம்.“ அது சரியே. பிறகு அவர் திரும்ப வந்து, யோசேப்பு தன்னுடைய சகோதரருக்கு செய்தது போல தம்மை அந்த இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேருக்கு தெரியப்படுத்தும்படிக்கு வருவார். அப்பொழுது, சபையானது எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளே சென்ற ருக்கும். நினைவில் கொள்ளுங்கள். யோசேப்பு தன்னை தன் சகோதருக்கு தான் யார் என்பதை தெரியப்படுத்தினபோது, அவனுடைய மனைவியும் மற்றும் அவர்கள் எல்லாருமே அரண்மனைக்குள் இருந்தனர். எந்த ஒரு புறஜாதியானும் அப்பொழுது இல்லை. அவர்கள் எல்லாரும் உள்ளே செல்லும்படிக்கு யோசேப்பு அவர்களை அனுப்பினான். அதே போன்று தான் இவர்களும் - சபைக்காலமானது 3வது அதிகாரத்தில் முடித்து அனுப்பப்படுகிறது. சபைக்கு பிரதிநிதித்துவமாயிருந்த யோவான் மேலே எடுக்கப்பட்டான். அதிலிருந்து 19வது அதிகாரம் வரைக்குமாக, அவள் காட்சியில் தோன்றுவதில்லை. தன்னுடைய மணவாளனுடன் விவாகத்திற்காக அவள் திரும்பவும் வரும் வரைக்குமாக அவள் காட்சி தோன்றுவதில்லை. இப்பொழுது, 4ஆம் அதிகாரத்திலிருந்து யூதர்கள் செல்வது தான் நடக்கின்றது. யூதர்களில் வெளிவந்தவர்கள். 78இப்பொழுது, கிறிஸ்து தாமே வந்து தம்மை இன்றிரவு உயிரோடிருக்கிறவராகக் காண்பிப்பாரானால்... இப்பொழுது நான் சரியாகக் கூறியிருப்பேனானால், அவர் மேசியா என்றும், விசுவாசிகள்... சரியாகக் கூறியிருப்பேனானால், மேசியா என்றால் அவர் தான் “அபிஷேகம் பெற்றவர்” மேலும் நாம் அவருடைய அபிஷேகத்தை கொண்டிருக்கிறோம். அந்த அதே அபிஷேகமானது ஒவ்வொரு தடவையும் அந்த அதே காரியத்தை செய்யுமல்லவா? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி). 79நான் உங்களை நேசிக்கிறேன். சகோதரனே, நீங்கள் கைவிடப்பட்டு நியாயத்தீர்ப்பன்று நிற்கும்போது இந்த விதமாக பேசினால் அப்பொழுது காலதாமதமாகிவிட்டிருக்கும். நீங்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் - நாம்... அவர் எப்பொழுது வருகின்றார் என்று எனக்குத் தெரியாது. அடுத்த வாரம் வரைக்குமாக அவர் வரவில்லை என்றால் அப்பொழுது நான் ஆயத்தமாக இருக்க விரும்பகிறேன். நான் ஆயத்தமாயிருக்க விரும்புகிறேன்.. மேலும் நான் நித்திரையடைந்தால் அது என்னை தடை செய்யாது. எப்படியாயினும் நான் உயிரோடெழுந்திருப்பேன். பாருங்கள்? ஆனால், நான் இங்கே இருக்கையில் என்னுடைய ஒவ்வொரு மிகச்சிறிய காரியமும் கூட அவருக்காகத்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுடைய காரியங்களும் அப்படியாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இப்பொழுது, இங்கே இருக்கின்ற பெண், அவள் யார் என்று எனக்குத் தெரியாது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... சோதோமில் நடந்த அதே காரியத்தை செய்கின்றனர். எத்தனைப் பேர் அதை உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிக்கிறீர்கள்? சரி. இப்பொழுது. நான் விசுவாசிப்பது ... இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். அதற்குள்ளாக மானிட காரியத்தை நீங்கள் கொண்டு வரக்கூடாது என்பதால் தான். தேவன் மனிதனின் மூலமாகத் தான் கிரியை செய்கின்றார். எத்தனைப் பேருக்கு அது தெரியும்? மனிதன் தேவனுடைய... அதன் காரணமாகத்தான் இயேசு தேவனாக இருந்தார். அது.. தேவன் ஒரு மனிதன் மூலம் செயல் புரிந்தார் (அது சரியா?), உலகத்தை தம்மோடே ஒப்புரவாக்கினார். இப்பொழுது, அவர் மேசியாவாக இருந்தார். அப்படியானால் நீங்களும் நானும் சிறிய அளவிலான மேசியாக்கள் அல்லது குட்டி மேசியாக்களாக இருக்கிறோம். ஏனென்றால், நாம் அந்த அதே ஆவியால் அபிஷேகிக்கப்பட்டிருக்கிறோம். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... ஒரு சாதாரண பள்ளி படிப்பு அவ்வளவுதான், மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு ஒன்று மாத்திரம் தெரியும். நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன். அவ்வளவுதான் எனக்குத் தெரியும். இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று எனக்குத் தெரியும். அவர் என்னுடைய இரட்சகர். நான் அவரை விசுவாசிக்கிறேன். இயேசு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன் என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் மரித்து, மறுபடியும் உயிரோடெழுந்து சபையை அபிஷேகிக்க பரிசுத்த ஆவியின் ரூபத்தில் திரும்ப வந்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். அந்த வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று நான் விசுவாசிக்கிறேன். அதற்கு பிரதியுத்தரம் அளிக்க தேவனே எனக்கு விசுவாசத்தை தாரும். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி).... நான் உங்களை விட்டு புறப்பட்டது முதல் அது சம்பவிப்பதை கண்டேன், எல்லா இடத்திலும், பல இடங்களில் இருபது, முப்பது அழைப்புகள், பிறகு வீட்டிலும் கூட அவைகளை எழுதினால் அது மகத்தான அருமையான புத்தகங்களாக அமையும். நிச்சயமாக அவ்வாறு அமையும். ஆனால், நாங்களோ அதைக் குறித்து ஒன்றும் கூறுவதில்லை. சபைக்கு இங்கொன்றும் அங்கொன்றுமாக நடப்பதை மாத்திரம் கூறுகிறோம். நாங்கள் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதில்லை. இயேசு “ஒருவருக்கும் சொல்லாதே” என்று கூறினார். பாருங்கள்? இது சபைக்கு மாத்திரம்தான். இது விசுவாசிகளுக்கு மாத்திரம் தான். பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் ஒரு விசுவாசியாக இருப்பீர்களானால், இப்பொழுது பரிசுத்த ஆவி அசைவாடுகிறாரா என்று மாத்திரம் பாருங்கள். அப்படி அது அசைவாடிச் செல்லுமானால் உங்களில் எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்கள். நசரேயனாகிய இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனின் மேல் அது இருந்தபோது செய்த அந்த அதே காரியத்தை, எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே விதத்தில் செய்யுமானால், அந்த சிறிய அளவிலான மேசியாக்கள் உண்மையானவர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள். 80(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... சகோதரனே அது அவருடைய ஆவியாகும். நான் ஒரு பாவி, ஆனால், அவருடைய ஆவி தாமே ஏதாவதொரு இடத்தில் கிரியை செய்ய வேண்டியதிருக்கிறது. அவர் செயல் புரியும்படிக்கு யாராவது ஒருவர் அவருக்கு தேவைப்படுகிறது. பாருங்கள்? எலியா நம்மை போலப் பாடுகள் உள்ள மனிதனாக இருந்தான். அது சரி தானே? அவனுக்கும் வாழ்வில் மேடு பள்ளங்கள் இருந்தன. அவனுடைய கோபம், உக்கிரக்கோபம் மேலெழும்பினது. நானும் நீங்களும் இருந்தது போலவேதான். ஆனால், அவன் கருத்தாய் ஜெபம் பண்ணினான். அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். அவன் கருத்தாய் ஜெபம் பண்ணி வானங்களை அடைத்தான். நேராக நடந்து சென்று “நான் அதை வருவித்தாலொழிய வானத்திலிருந்து பனியும் மழையும் பெய்யாதிருக்கும்” என்று கூறினான். அவன் ஒரு பதிலைக் கொண்டிருந்தான். அதன் காரணமாகத்தான் நான் இன்று இந்த பெண்ணின் முன்பாக இன்றிரவு நின்று கொண்டிருக்கிறேன். தேவன் வாக்குத்தத்தம் செய்தார். நான் தேவனை விசுவாசிக்கிறேன். 81(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... தரிசனத்தில் கண்டேன். நான் பின்லாந்து தேசத்திற்கு செல்லும் முன்னரே நான் உங்களுக்கு அதை கூறினதை எத்தனைப் பேர் கேட்டீர்கள்? இங்கே தாள்களில் பாருங்கள். அது சம்பவித்த போது சகோதரன் ஜாக் அங்கே நின்று கொண்டிருந்தார் ஒரு பையன் அங்கே கொல்லப்பட்டான், சொல்லப்பட்ட விதமாகவே...?.... எங்கள் வேதாகமத்தில் உள்ள குறிப்பு எழுதும் தாள்களில் நாங்கள் எழுதி வைத்தபடியே சரியாக அப்படியே நடந்தது. அந்த பையன் திரும்ப உயிரடைந்தான். அவனுடைய சிறிய ஆவியானது மரித்தோரின் பிரதேசத்துக்கு சென்றிருந்தது. தேவன் அதை திரும்ப வரும்படிக்கு அழைத்தார். பாருங்கள், ஒரு மனிதனுடைய மனதின் வல்லமையைக் கொண்டு ஒரு கண்ணாடி டம்ளரை உடைக்க முடியுமானால், ஒரு பாவி அந்த விதமாக செய்யும்படிக்கு உருவாக்கப்பட்டிருப்பானானால்... அதிலே தேவன் வரட்டும், அவன் புறப்பட்டுச் சென்று மரித்தோர் திரும்ப உயிரடையும்படிக்குச் செய்வான். பாருங்கள். அது அவருடைய வாக்குத்தத்தம் ஆகும். முதலில் நீங்கள் தேவனுடைய சித்தத்தை கண்டறியுங்கள். பிறகு அதைச் செய்யுங்கள். “அது ஒவ்வொன்றிலும் ... தேவனுடைய சித்தமல்ல” என்கிறீர்கள். அது தேவனுடைய சித்தமாகும். அது செய்யப்பட்டத்தை நாம் கண்டிருக்கிறோம் அல்லவா. ஐந்து வெவ்வேறு தருணங்களில் அது செய்யப்பட்டுள்ளது. அது உண்மை என்று எனக்குத் தெரியும். 82இப்பொழுது, இயேசு செய்த விதமாகவே இங்கே ஒரு சாதாரண விதத்தில் அதே காரியம்: ஒரு ஸ்திரீயிடமாக பேசினார். நேற்றைக்கு முந்தின நாளில் ஒரு மனிதன் என் வீட்டிற்கு வந்து அங்கே நின்றார். அப்பொழுது அவர்... நான் வெளிவாயிற்கதவிற்கு வெளியே வந்து புறப்பட்டேன். நான் அந்த மனிதனை அலுவலகத்திற்கு கூட்டிச் சென்றேன், சகோதரன் மெர்சியர் மற்றும் அவர்களிடம் அவரை கொண்டு செல்லும் படிக்கு சென்றேன். அப்பொழுது அவர் “சகோதரன் பிரன்ஹாம்?” என்றார். “ஆம்” என்றேன். அவர், “நீங்கள் எனக்கு உதவி செய்வீரா?” என்று கேட்டார். அதற்கு நான் “ஆம், நீங்கள் அங்கே செல்லும்போது ....” என்று கூறினேன். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடமாக, “அவரை வீட்டிற்குள்ளாக கொண்டு செல்” என்று கூறினது. அவர் உட்கார்ந்த உடனே, நான் அவரிடமாக “நீபகள் யார் என்று என்னிடம் கூறவேண்டாம், நானே உங்களுக்கு கூறுகிறேன்” என்றேன். அவரைப் பற்றி கூற ஆரம்பித்து, அந்த மனிதனிடம் எல்லாவற்றையும் கூறினேன்... பரிசுத்த ஆவி எனக்கு அவருடைய வாழ்க்கையைக் குறித்து எல்லாவற்றையும் ளிப்படுத்தினார். அவர் “அது சரியே, அது சரியே... ஐயா, அது சரியானதே” என்று கூறினார். மேலும், நான் “உங்களுடைய... நீங்கள் இங்கே குடியிருக்கவில்லை , நங்கள் மடிசனில் இருக்கின்றீர்கள். நீங்கள் இண்டியானாவிலுள்ள இவான்ஸ்வில் என்று இடத்திற்கு சென்றீர். அங்கே ஒரு தீவிர மூட பக்தி வைராக்கிய குழுவினருடன் சேர்ந்துவிட்டீர்கள். நீங்கள் அப்படி (சய்தீர்களல்லவா. என்றேன். ”ஆமாம்“ “அது ஒரு வேதாகம பள்ளி என்று நினைத்தீர்கள்” அதற்கு அவர் “இரக்கம் நன்மை , ஐயா... அது எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டார். ஆகவே, நாங்கள் - அவர் வெளியே சென்றார், அவர் “என்ன, இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே” என்றார். 83அதற்கு நான் “நீங்கள் எப்போதாவது என் கூட்டங்களில் இருந்துள்ளீர்களா?” என்று கேட்டேன். அவர் “சுமார் இருபத்தைந்து நிமிடங்களுக்கு முன் தான் உங்கள் பெயரை நான் தெரிந்து கொண்டேன். அதற்கு முன் உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் லூயிவில் வழியாக சென்று கொண்டிருக்கையில் யாரோ ஒரு மனிதன் என்னிடமாக உங்களைப் பற்றி கூறினார். நான் இங்கே வரும்படிக்கு கூறினார். திரு.சாண்டி (Mr.Sandy) என்ற பெயர் கொண்ட மனிதன். உங்களுடைய பெயர் அதுவரை எனக்கு தெரியாது” என்று கூறினார். அதற்கு நான் “ஆம், ஆம், அது என் ஊழியமாகும்” என்று கூறினேன். அவர் “நான் சரியாகப் புரிந்து கொண்டேன் என்றால், இயேசு நம்முடைய சீஷருடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்கள் கருதயத்தில் என்ன இருந்தது என்பதை அறிந்திருந்தார்” என்றார். “அது சரி”. அதற்கு அவர் “அப்படியானால் அது தேவன் உங்கள் மூலமாக என்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார்” என்றார். நான் “மகனே, நிறைய பேர்கள் நீண்ட காலமாக கூட்டங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களைக் காட்டிலும் உங்களுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது. அது சரியே” என்று கூறினேன். அதற்கு அவர் “ஆம், தேவனுக்கு ஸ்தோத்திரம், இப்பொழுது எல்லாம் தெளிவாகி விட்டது” என்றார். இதோ உங்களுக்கு புரிகின்றதா. இங்கிலாந்திலிருந்து விமானத்தில் வந்த அந்த பையன்: அந்த அதே காரியம் தான். இப்பொழுது, இதோ அது, கூடாரத்தில் ஆரம்பித்தது. அது சுமார் நாற்பத்தெட்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அவர் தேவன், அப்படித்தானே சகோதரியே? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... வயதான நபர், மிகவும் வயது சென்ற பெண்மணி. அது உங்கள் தாய். அவர்கள் காதில் ஏதோ கோளாறு உள்ளது. அவர்களுக்கு வேறு பிரச்சனைகள் சிக்கல்கள் கூட உள்ளது. அது சரியல்லவா? அது சரி என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். - (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... உங்கள் கரத்தில் அதை இங்கே நீங்கள் வைத்திருக்கிறீர்களா? சரி, நீங்கள் அதை எடுத்துச் சென்று அவர்கள் மேல் வையுங்கள். நீங்கள் இப்பொழுது சுகமாக்கப்பட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் மீது என் கரங்களை நான் வைக்கட்டும். பிதாவாகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இவளின் மீது என் கரங்களை வைக்கிறேன். இந்த காரியங்கள் தாமே நிறைவேறுவதாக. தேவனுக்காக இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கின்றோம். 84(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) .... அவள் மேலே வரும்படிக்க நான் திரும்ப வருவேன் என்று நீங்கள் விசுவாசித்தீர்கள்.. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... உங்கள் தலையில் ஏதோ ஒரு கோளாமை கொண்டிருக்கிறீர்கள், கடுமையான ஒற்றைத் தலைவி போன்று. சரி. அது உங்களை நரம்பு தளர்ச்சிக்குள்ளாக்குகிறது. இப்பொழுது நீங்கள் பலவீனத்தால் அவதியுறுகிறீர்கள். ஒரு கயிறை எடுத்து அதிலுள்ள எல்லா நூல்களும் சிதறி வரும்படிக்கு இழுப்பது போல உங்கள் பலவீனமானது காணப்படுகிறது, அது...? ... நீங்கள் குணமாவீர்கள். அது.... 85(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள், தன் கரங்களை மடக்கியவாறு அமர்ந்திருக்கின்ற பெண்மணி, உங்கள் நுரையீரலில் கோளாறு உள்ளது. அது சரி. இரண்டு பெண்களை நான் கண்டேன். மற்றொருவள் எங்கே இருக்கிறாள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன். சரி, நீங்கள் அவரை தொட்டீர்கள். உங்கள் கரங்களை உயர்த்தி “கர்த்தாவே, நான் என் சுகமளித்தலை ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். செல்லுங்கள், சுகமாகுங்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அங்கேயும் கூட, காதில் பிரச்சனை இருக்கிறது. அவர் தாமே தன்னுடைய முழு இருதயத்துடன் விசுவாசிப்பாரானால்.... ஆமாம். அது சரி. உங்கள் சுகத்தை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் போகலாம்.... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) .... அப்படித்தானே, சகோதரியே? உங்களுக்கு வயிற்றுப் பிரச்சனை மோசமாக இருக்கின்றது. உங்களுக்கு அப்படித்தானே இருக்கிறது. உங்கள் நரம்புத் தளர்ச்சி அதைச் செய்தது, உங்களுக்கு வயிற்றுக் கோளாறை உண்டாக்கியிருக்கிறது. நரம்புகள் பலவீனமடைந்திருப்பதினாலே, எனக்கு வயிற்று கோளாறு உள்ளது என்று நீங்கள் நினைத்தீர்கள். யாரோ ஒருவர் அவ்விதமாக நினைத்தனர். அவள் அப்படி நினைக்கவில்லை. யாரோ ஒருவர் அப்படியாக நினைத்து கொண்டிருக்கின்றார். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நான் யூகித்தேனா, தேவன் உங்கள் சகோதரனின் மனைவியையும் கூட சுகமளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படி விருப்பம் கொள்வீர்களா? அவளுக்கு என்ன பிரச்சனை என்று தேவன் என்னிடம் கூறுவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சர்க்கரை வியாதி. இப்பொழுது புறப்பட்டுச் செல்லுங்கள் விசுவாசியுங்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... மேசியா நம் மத்தியில் அசைவாடிக் கொண்டிருக்கிறார். அங்கே உள்ள உங்களுக்குள்ளாகவும் அவர் இருக்கின்றார். 86(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... உங்கள் மகள், இருவரும் தைராய்ட் பிரச்சனையால் அவதியுறுகிறீர்கள். நீங்கள் உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசிப்பீர்களானால், இயேசு கிறிஸ்து உங்களை சுகமாக்குவார். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... மோசமான சூழ்நிலைகள், படுத்த படுக்கையில் உள்ளீர்கள். நான் உங்களுக்கு கூறுகிறேன். உங்களுக்கு தேவைப்படுகின்ற காரியம் என்னவென்றால் உங்கள் இருதயத்தில் கிறிஸ்து இருக்க வேண்டும் என்பதே. பாருங்கள்? நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருக்க வேண்டும். கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு பாவிக்குள் இருக்கின்ற இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை பாருங்கள், பிரசங்க மேடை மேலே வந்து அந்தவிதமான ஒரு வரத்தை எடுத்து, அவளின் தாய்க்காக இரக்கத்தை கோரும்படிக்கு வந்துள்ளாள். தேவன் அதைச் செய்வார் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் இரட்சிப்புக்காக இப்பொழுதே அவர் பேரில் விசுவாசம் கொள்ளுங்கள்... ? ... உங்களுக்கு புரிகிறதா. 87(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... உங்கள் பிரச்சனை என்ன? (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அங்கே பின்னால் உட்கார்ந்திருக்கின்ற, ஒரு விதமான - மஞ்சள் நிற மேற்சட்டையை அணிந்திருப்பவர். அதுதான். அவள் என் முன்னர் தோன்றினதை நான் கண்டேன். அந்த ஒளியானது இங்கே தொங்கிக் கொண்டிருப்பதை நான் கண்டேன். மறுபடியும் அங்கே நோக்கிப் பார்த்தேன். சரி, சகோதரியே அவர் உங்களை சுகமாக்கிவிட்டார். எல்லாம் முடிந்துவிட்டது. ஆசி)... உங்கள் வாயின் மேல், உள்ளது. என்னை நோக்கிப் பார்த்துக் கொண்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” கூறிக்கொண்டிருப்பவர். உங்கள் முகத்திலும் வாயிலும் உங்களுக்க பிரச்சனை உள்ளது. அது சரியல்லவா? அது சரியென்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி. இயேசு உங்களை சுகமாக்குகிறார். வீடு செல்லுங்கள். அதை விசுவாசியுங்கள். அவர் அற்புமானவரல்லவா? அவர் கர்த்தர்.... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... அதை அவர் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் சிறு பேரன், அவன் தலையில் உச்சியில் ஒரு கட்டி உள்ளது. திருமதி. பியர்சன், செல்லுங்கள், உங்கள் முழு இருதயத்துடன் விசுவாசியுங்கள். 88(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... நீர் கர்த்தராகிய இயேசு. நாங்கள் உம்மை நேசிக்கிறோம். உம்முடைய அபிஷேகம் இங்கே இருக்கின்றது என்று நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தாவே அது எல்லா இடங்களிலும் இருக்கின்றது. மக்கள் உம்மை தங்கள் இரட்சகராகவும் தங்கள் சுகமளிப்பவராகவும் இப்பொழுது ஏற்றுக் கொள்ளும்படிக்கு நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, இயேசுவின் நாமத்தின் மூலமாக இதை அருளும். உங்கள் தலைகளை ஒரு நிமிடம் தாழ்த்தியிருங்கள். 8989....? ... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) சிறிது நேரத்திற்கு முன்னர்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... ஜெப வரிசை வந்து கொண்டிருக்கின்றது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... ? ... இப்பொழுது, இங்கே வந்து சில நிமிடங்களுக்கு முழங்கால் இடுங்கள், நீங்கள் அப்படி செய்வீர்களா? மேசியாவில் நீங்கள் விசுவாசம் கொண்டிருப்பீர்களானால், இயேசு மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தார் என்றும் விசுவாசிக்கிறீர்களா, இங்கே வாருங்கள், வந்து நேராக எனக்கு முன்பாக நில்லுங்கள். இங்கே பீடத்தண்டை ஒரு நிமிடத்திற்கு நின்று ஜெபியுங்கள். ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள விரும்பும் உங்களில் ஏனையோர் இப்பொழுது .“ இப்பொழுது நேராக இங்கே மேலே வாருங்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... ? ... பாவியான நண்பனே, அருங்கள். இப்பொழுது கிறிஸ்துவிடம் வாருங்கள், இருக்கின்ற ஒரே நம்பிக்கை அவரே, ஒரே தருணம். சாயங்கால நேர வெளிச்சங்கள் பாகாசித்துக் கொண்டிருக்கிறது. வாருங்கள், பகல் பொழுதாக இருக்கும்போதே, உங்களால் வரக்கூடிய இந்த சமயத்தில் வாருங்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) .... அவை எல்லாம் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாம் போய்விட்டன. நாளானது முடிந்து விட்டது. இரவானது வெகுவாக கடந்து விட்டது. சாயங்கால நேரமானது வெகுவாக... நாளானது கழிந்து விட்டது. இரவு பொழுதானது கடந்து சென்று கொண்டிருக்கிறது. சாயங்கால நட்சத்திரமான தன்னுடைய ஒளியை வெளிச்சத்தை பிறப்பித்துக் கொண்டிருக்கிறது. என்ன, இது மாலை நேரம் முடிந்து இரவு பொழுது துவங்கும் நேரத்தில் காணப்படும் மங்கின வெளிச்சமாக இருக்கிறது. இது அபாயகரமான நேரமாகும்... உங்கள் இருக்கையில் அப்படியே இருந்து விடாதீர்கள். கிறிஸ்து இல்லாமல் இருக்கின்றவர்களே, அவரை உங்கள் இரட்சகராக அறிந்து கொள்ள விரும்புகிறவர்களே, நீங்கள் இங்கே வாருங்கள். இங்கே மேலே வாருங்கள். அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்திக் கொண்டிருக்கையில் முழங்கால்படியிடுங்கள். அவர் ஆத்துமா மற்றும் இந்த பாவிகள் சரீரம் இரண்டையும் சுகப்படுத்துகிறார். பீடத்தண்டை தேம்பி அழுதுக் கொண்டிருக்கையில் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளவர்களே ஜெபித்துக் கொண்டிருங்கள். “தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக” என்று ஜெபியுங்கள். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... விசுவாசியுங்கள்... வாலிபப் பெண்ணே , நரம்புத் தளர்ச்சி கொண்டிருக்கின்றாய், அந்த நரம்புத் தளர்ச்சியை அவர் சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? அது உன் வாழ்நாள் முழுவதுமாக இருந்து வருகிறது. அவர் உன்னை சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா? என் கரங்களின் மீது நான் வைக்கட்டும். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கின்றார் என்று நான் வாசுவாசிக்கிறேன். அபிஷேகமானது இருக்கின்றது என்று விசுவாசிக்கிறேன். ஓ, இயேசுவே இந்த பரிதாபத்திற்குரிய வாலிப சிறு பெண், ஒடுக்கப்படுதலின் பிசாசினால் இவள் கட்டப்பட்டிருக்கிறாள். சாத்தானே, அவளை விட்டு வெளியே வா. அவளை விட்டு வெளியேறு என்று ஜீவிக்கின்ற தேவனைக் கொண்டு ஆணையிட்டு உனக் கட்டளையிடுகிறேன்.... இன்னும் தொடர்ந்து அவளை நீ வைத்திருக்க முடியாது. அவளை விட்டு வெளியே போ. பெண்ணே நீ இனிமேல் சுகப்படுத்தப்பட்டு இருக்கப்போகிறாய். புறப்பட்டுச் செல், உன் ம இருதயத்துடனே விசுவாசி. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... தேவன் உங்கள் இருதயத்கை சுகப்படுத்தி உங்களை ஆரோக்கிய நிலையில் வைப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? இவள் சுகமாக்கப்படும் படிக்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் சகோதரியின் மீது நான் என் கரங்களை வைக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நான் அதைக் கேட்கிறேன். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே சகோதரியின் மீது என் கரங்களை வைக்கிறேன். இவள் சுகமாக்கப்படுவாளாக. ஆமென். 90(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... விசுவாசிகள் இங்கே இருக்கிறார்களா? ஓ, அருமையானது. இப்பொழுது, நான் ஜெபித்துக் கொண்டிருக்கையில் ... ஜெபம் ஏறெடுக்கப்பட எத்தனைப் பேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி, இப்பொழுது நான் இங்கே ஜெபிக்கையில், நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரங்களை வைக்கலாமல்லவா, உங்கள் கரத்தை... நீங்கள் விசுவாசிகள். பரிசுத்த.. நீங்கள் ஒரு விசுவாசியாக இருப்பீர்களானால் மற்றவரைப் போலவே நீங்களும் கூட ஒரு சிறிய அளவிலான மேசியாக்கள் அல்லவா. அது சரி தானே? “இந்த அடையாளங்கள் தொடரும்” என்ன அது? “விசுவாசிக்கிறவர்களை” இது பன்மை ஆகும். அது சரி தானே? “வியாதிஸ்தர் மேல் தங்கள் கைகளை வைத்தால் அவர்கள் சொஸ்தமாவார்கள்” அது சரிதானே? சரி, நாம் ஒருவருக்கொருவர் ஜெபிக்கையில், நான் ஜெபிக்கையில், நீங்கள் உங்கள் தலைகளை தாழ்த்தி ஜெபித்துக் கொண்டிருங்கள்.... 91(ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... சபையில், சகோதரன் எல்.சி. எங்கே? என்ன, அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நான் உங்களைக் கண்டேன். அதன் பிறகு மிகவுமாக எடை குறைந்து காணப்படுகிறீர்களே. ஒரு நாள் நான் உங்கள் வீட்டின் உணவு சாப்பிட்டேன். நீங்கள் இங்கே எதற்காக இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் உங்களிடம் ஒரு நிமிடம் பேசினால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அப்படி இருக்குமல்லவா? ஏனென்றால் உங்களை எனக்கு நன்றாகத் தெரியும். நான் உங்களிடம் சற்று பேசினால் நலமாக இருக்கும்... உங்களை எனக்கு தெரியும்... (ஒலி நாடாவில் காலியிடம் - அசி).... எல்.சி. நீங்கள் எனக்கு அந்த கெளுத்தி மீனை சமைத்து கொடுத்தீர்களே... ? அது ருசியாயிருந்தது என்று நான் மெச்சினேன் அல்லவா. இப்பொழுது உங்கள் ஆவியை நான் தொடர்பில் கொண்டு வந்துள்ளேன். அப்பொழுது ஏதோ சம்பவித்தது என்று உங்களுக்கு தெரியும். நான் உங்கள் ஆவியை கண்டறிந்து கொண்டேன். உங்களுக்கு அநேக பிரச்சனைகள் இருந்தன. நீங்கள் மருத்துவமனை, அதைப் போன்றதில் இருந்தீர்கள். நீங்கள் தான்... பாருங்கள்? அது சரியே. உங்களுக்கு நிறைய கோளாறுகள் வந்திருக்கின்றன - நரம்புத் தளர்ச்சியினால் சின்னாபின்னமாகி உள்ளீர்கள், உங்கள் காதுகளில் பிரச்சனை மேலும் பிறகு... அது சரியே. மிக மோசமாக நரம்பு தளர்ச்சியுற்று சிதைந்து போனீர்கள். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அது எல்லாவற்றையும் நான் எடுத்துப் போடுவேன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். இந்த தேவ பக்தியுள்ள பெண்ணை பற்ற முயற்சித்துக் கொண்டிருக்கின்ற பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே நான் உனக்கு சவாலிடுகிறேன். இவளை விட்டு வெளியே போ. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் இவளை விடுவிக்கிறேன். சிநேகிதியே, அது முடிந்து போனது. வீடு திரும்பு சுகமாக...?.... 92தேவன் உங்களை சுகப்படுத்தாவிட்டால் அந்த புற்று நோயினால் நங்கள் மரித்து விடுவீர்கள் என்று நீங்கள் உணர்கிறீர்களா? அவர் உங்களை சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இந்த பண்ணின் மேல் கரங்களை வைத்து இயேசுவின் நாமத்தினாலே இவளை விட்டு வெளியேறும்படிக்கு இந்த பிசாசிற்கு சவாலிடுகிறேன். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி) இந்த பெண்ணின் மீது கரங்களை வைத்து இந்த பிசாசிற்கு சவாலிடுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே, இவளை விட்டு வெளியே வா. ஆமென். அதோ அது செய்கிறது. அது சரியாக்குகிறது. (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)...?... சிறிது நேரத்திற்கு முன்னர் ... உங்களுக்கு ஏதோ ஒன்று சம்பவித்தது, அப்படித்தானே? நீங்கள் அங்கே நின்றிருந்தீர்கள், அதைக் குறித்து நீங்கள் மிகவும் சிலிர்ப்ப கொண்டீர்கள், நீங்கள் அப்படியாக உணர்ந்தீர்களல்லவா?....?... அவரை உங்களோடு எடுத்துச் செல்லுங்கள். ஆமென். (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசி)... மோசமானது. ஆனால், அதை சுகப்படுத்துகிறவர் தேவன் தான், அப்படித்தானே? இயேசு நாமத்திலே இது இவளை விட்டுச் செல்வதாக, சுகமாக்கப்படுவாளாக. 93(சகோதரன் பிரன் ஹாம் சொல்வதை சபையார் திரும்பச் சொல்கிறார்கள் - ஆசி) : இயேசுவே, நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன். நீர் தான் அந்த மேசியா என்று நான் விசுவாசிக்கிறேன். உம்முடைய ராஜ்யத்தில் நீர் ஆளுகை செய்கிறீர் என்று நான் விசுவாசிக்கிறேன், என் விசுவாசத்தைக் கொண்டும் உம்முடைய முடிவு பெற்ற கிரியைக் கொண்டு நான் அந்த ராஜ்யத்தின் ஒரு பாகமாக இருக்கிறேன். நீர் தாமே இந்த வாக்குதத்தத்தை எங்களுக்கு செய்திருக்கின்றீர், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும், வியாதியஸ்தர் மேல் தங்கள் கரங்களை வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமாவார்கள்”. நான் ஒரு விசுவாசி, என் அவிசுவாசத்தை மன்னியும். ஒரு விசுவாசி தன் கரங்களை என் மீது வைத்துள்ளார். அந்த விசுவாசிக்காகவும் நான் ஜெபிக்கிறேன், அந்த விசுவாசியும் எனக்காக ஜெபிக்கின்றார். உம்முடைய வார்த்தையின் அடிப்படையில் நான் என் சுகத்தை ஏற்றுக்கொள்கிறேன். அவரை அந்த மின் கடத்தியாக என் அருகில் இருப்பதை நான் உணர்கிறேன், என்னை சுகப்படுத்த வார்த்தையை அந்த கடத்தி (Conductor) அனுப்பிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது, சாத்தானே, நான் உனக்கு சவாலிடுகிறேன்... ? ... அவர்களை விட்டு வெளியே வரும்படிக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்... ? .... இப்பொழுது எழுந்து நில்லுங்கள். உங்கள் சுகமளித்தலை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை ஸ்தோத்தரியுங்கள்.மகிமை அல்லேலூயா. ஸ்தோத்திரமுண்டாவதாக..?.